ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது
ஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை (virtual and augmented reality), முப்பரிமாண அச்சிடல் (3D printing), பொருட்களின் இணையம் (Internet of Things), இயந்திரக் கற்றல்… Read More »