எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கும் ஆவணக வெளியீடுகளும்
அனைவருக்கும் வணக்கம்! கடந்த இரு ஆண்டுகளாக எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற்று வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த ஆண்டு கருத்தரங்கு நேரடியாகவும் மெய்நிகராகவும் (hybrid), எதிர்வரும் சனவரி 25, 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெறும். அன்று தமிழ் தொடர்பான ஆவணப்படுத்தல், நூலகவியல், ஆவணகவியல், தமிழியல் உட்பட்ட துறைகளில் இங்கு செயற்படுபவர்கள் நேரடியாக சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம். பேராசிரியர் வில்சன் அவர்களின் ஆவணக்… Read More »