Category Archives: பங்களிப்பாளர்கள்

மேககணினி சேவை வழங்குநர்களைப் பற்றி திறமூல மேம்படுத்துநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

  பொதுவாக மேககணினியில் அடுக்குகளானவை(layer) கணினிகளின் இயக்க நேரத்தில் இணைந்து செயல்படும் வகையில்வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன. அதனை பலர் மேககணினியின் புதிய எல்லையாக கருது வதால்,கடந்த பல ஆண்டுகளாக இவை மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.இருப்பினும்,இது தனிப்பட்ட ஈடுபாட்டுடன் தொழிலகங் களிலும் கணினியிலும் மேககணினியை எவ்வளவு பயன்படுத்துகின்றோம் என்பதை நாம் ஒப்புக் கொள்வதைப் பொறுத்தது ஆகும். ஒரு நிரலாளராக இருந்தால்,தன்னுடைய பணியைசெய்வதற்காகவோ அல்லது வேடிக்கையாகவோ கணினியின் மேம்பாட்டை மேகக்கணியில் நகர்த்த விரும்பிடுவோம், ஆயினும் தற்போது ஏராளமான… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத் தான் இருந்தது. அதிலும் ஒரு நாள் அலுவலகத்தில் நடந்த பாட்டுப் போட்டியில் மதனுக்குப் போட்டியாகக் கார்த்திகா பாடிய ‘யமுனை ஆற்றிலே… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 20 – நீங்களும் துப்பறியலாம்!

அண்ணன் தம்பிகளான வியன், பாரி இருவரின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? கதையில் நமக்குக் கிடைத்திருக்கும் துப்புகள்[தடயங்கள்] என்னென்ன? 1. வியன் பள்ளிக்கூடம் போகும் சிறுவன். பாரி, இன்னும் பள்ளிக்குப் போகாத மழலை. 2. வியனுக்கும் பாரிக்கும் இடையில் வயது வேறுபாடு ஆறு வயது. 3. இரண்டு பேரின் வயதிற்குமான பொது வகுத்தி வியனின் வயது. இந்தக் குறிப்புகளின் படி, பாரி வியன் 1           7 2           8 3           9… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 19: வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் தோசை சாப்பிட்ட கதையைப் பார்த்தோம் அல்லவா? அதில் யார் யார் எத்தனைத் தோசை தின்றார்கள் என்று பார்த்து விடுவோமா? கடைசியில் மீதம் இருந்த தோசை 8. இது நிறைமதி தின்றது போக மீதி வைத்த எண்ணிக்கை. நிறைமதி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் எட்டுத் தோசை என்பது மூன்றில் இரண்டு பங்கு. மூன்றில் இரண்டு பங்கு என்பது எட்டு என்றால், மூன்றில் ஒரு பங்கு நான்கு. அப்படியானால்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 18 – யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்??

முந்தைய பதிவில் வியனின் அப்பா, அவனுடைய அறிவைப் பார்த்து வியந்தார் என்று சொன்னேன் அல்லவா! அதற்குக் காரணம் இருக்கிறது. முதலில் வியன் என்ன கேட்கிறான்? இன்னும் பத்து நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டும்; ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் எனப் பத்து நாளும் தாருங்கள் எனக் கேட்கிறான். இப்படிக் கொடுத்தால் கடைசியில் 50 ரூபாய் செலவாகியிருக்கும். பத்தே நாளில் ஐம்பது ரூபாயைத் தின்பண்டத்திற்குக் கொடுக்கவா என அப்பா யோசிக்கும் போதே, ‘அப்படியானால் முதல் நாள் ஒரு ரூபாய்,… Read More »

பல்பொருள்இணையத்தின்(IoT) நெறிமுறைகள ஒரு அறிமுகம் 

தற்போது உலகம் முழுவதும், பல்பொருள் இணையத்தினை(Internet of Things (IoT)) பயன்படுத்தி வருகின்றனர், இதன்வாயிலாக இன்று பில்லியன் கணக்கான சாதனங்கள் தங்களுக்குள்  தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இவ்வாறான பல்பொருள் இணைய(IoT) தொடர்பு நெறிமுறைகள் இந்தச் சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவுகளைப் பாதுகாப்பதோடுமட்டுமல்லாமல் அவ்வாறான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. சாதனங்கள் அனைத்தும் இணையத்தில் இணைந்து இருக்கும் போதும் தகவல் தொடர்பு வலைபின்னலுடன் பாதுகாப்பாக இணைக்கப்படும் போதும் மட்டுமே பல்பொருள் இணைய (IoT) அமைப்பு செயல்படவும் தகவலை நன்கு… Read More »

Mingw-w64 எனும் gccக்கான முழுமையான இயக்க நேர சூழல்

mingw-w64 செயல்திட்டம் என்பது விண்டோ 64-பிட் , 32-பிட் இயக்க முறைமைகளுக்கு சொந்தமான இருமநிரலிகளை ஆதரிக்க gccக்கான முழுமையான இயக்க நேர சூழலாகும். மேலும் இது அசல் mingw.org செயல்திட்டத்தின் முன்னேறிய பதிப்பாகும், இது விண்டோஇயக்கமுறைமை செயல்படுகின்ற கணினிகளில் GCC இயந்திரமொழி மாற்றியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது 64 பிட்கள் , புதிய APIகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக 2007ஆம் ஆண்டில் இதை ஒரு கிளைசெயலாக ஆக்கப் பட்டது. அப்போதிருந்து, இது பரவலான பயன்பாட்டினையும் விநியோகத்தையும் பெற்றுவருகின்றது. ஒவ்வொரு… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 24.04.2022 ஞாயிறு – காலை 8.30… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு சூரியனின் தொலைவு போன்று இரண்டு மடங்கு தேவைப்படும்.(நன்றி: செயல்வழிக் கணிதம், அரவிந்த் குப்தா) இதை எப்படி மன்னரால் கொடுக்க முடியும்?… Read More »

Rust எனும் நிரலாக்கமொழி ஒருஅறிமுகம் 

  Rust எனும் திறமூலநிரலாக்க மொழியானது நமக்கு நம்பகமான, திறமையான மென்பொருளை உருவாக்குவதற்கான அதிகாரம் அளிக்கின்ற ஒரு கட்டற்ற கணினிமொழியாகும். இது மிக விரைவாக இயங்குகின்ற திறனுடனும் நினைவகத்தை திறனுடன் கையாளும் தன்மையும் கொண்டது, எனவே இது செயல்திறனுடன் முக்கிய சேவைகளை ஆற்றவும்  உட்பொதிக்கப்பட்ட சாதனங்களில் செயல்படுவதற்காகவும் இது பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இது ஒரு உயர்ந்த(rich)வகை அமைப்பினையும் உரிமையாளர் மாதிரியைக் கொண்டுள்ளது, இது திரி, நினைவகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஒரு நிலையான நூலகம், சிறந்த… Read More »