Category Archives: விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்

விக்கிப்பீடியா – வேங்கைத் திட்டம் 2.0 – தொடர் தொகுப்பு நிகழ்வு

வேங்கைத் திட்டம் 2.0 இல் தமிழ் இதுவரை தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! போன முறை போல் அல்லாது, இந்த முறை, வெற்றிக்கனியைப் பறித்தே ஆக வேண்டும் என்னும் வேட்கை, தமிழ் விக்கிப்பீடிய வேங்கைகளுக்கு வந்திருப்பதை இன்று வரை ஏற்றப்பட்டிருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகப் பயிலகம் வளாகத்தில் இன்று தொடர் தொகுப்பு நிகழ்வு நடைபெற்றது. விக்கிப்பீடியர் நீச்சல்காரன், இந்த முழுநாள் தொகுப்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வில், உதயக்குமார்,… Read More »

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 2

இன்று, இந்த விக்கிப்பீடியாவை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? தமிழ் விக்கிப்பீடியாவின் சில பங்களிப்பாளர்களை இங்கு பார்க்கலாம். உங்கள் ஊர்க்காரர்கள் யாராவது பங்களிக்கிறார்களா? அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தி இடலாமே? எடுத்துக்காட்டுக்கு, மலேசியாவைச் சேர்ந்த முத்துக்கிருசுணனின் பயனர் பக்கத்தைப் பாருங்கள். அங்கு மேற்பகுதியில் “உரையாடல்” என்று ஒரு இணைப்பு இருக்கும். அதனை அழுத்துங்கள். பிறகு வரும் உரையாடல் பக்கத்தில் “தலைப்பைச் சேர்” என்ற இணைப்பை அழுத்துங்கள். பிறகு, உங்கள் செய்தியை இட்டுச் சேமியுங்கள். தமிழ்… Read More »

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 1

விக்கி மின்மினிகள் பயிற்சிக்கு வருக ! வருக ! முதல் நாளான இன்று பின்வருவனவற்றை முயன்று பாருங்களேன் ! விக்கிப்பீடியாவில் உங்களுக்கு என்று ஒரு பயனர் கணக்கு தொடங்குங்கள். கணக்கு தொடங்க இங்கு செல்லுங்கள். இப்பயனர் பெயரை அனைத்து மொழி விக்கிமீடியா திட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவுடன் பிற உறவுத் திட்டங்களைப் பற்றி அறிவீர்களா? விக்சனரி, விக்கிமூலம், விக்கி நூல்கள், விக்கி செய்திகள், விக்கி மேற்கோள் ஆகிய திட்டங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். விக்கிப்பீடியாவின் தேர்தெடுத்த கட்டுரைகளை… Read More »