விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 1

விக்கி மின்மினிகள் பயிற்சிக்கு வருக ! வருக !

முதல் நாளான இன்று பின்வருவனவற்றை முயன்று பாருங்களேன் !

விக்கி_மின்மினிகள்_பயிற்சி1

விக்கிப்பீடியாவில் உங்களுக்கு என்று ஒரு பயனர் கணக்கு தொடங்குங்கள். கணக்கு தொடங்க இங்கு செல்லுங்கள். இப்பயனர் பெயரை அனைத்து மொழி விக்கிமீடியா திட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம்.

விக்கிப்பீடியாவுடன் பிற உறவுத் திட்டங்களைப் பற்றி அறிவீர்களா? விக்சனரி, விக்கிமூலம், விக்கி நூல்கள், விக்கி செய்திகள், விக்கி மேற்கோள் ஆகிய திட்டங்களை ஒரு முறை பார்வையிடுங்கள்.

விக்கிப்பீடியாவின் தேர்தெடுத்த கட்டுரைகளை இங்கு காணுங்கள் (இதற்கான இணைப்பு இடப்பக்கப் பட்டையிலும் இருக்கிறது).

விக்கிப்பீடியாவில் என்னென்ன துறைகளில் எல்லாம் கட்டுரைகள் உள்ளன என்று அறிய விருப்பமா? ஏதாவது ஒரு கட்டுரை வசதியைப் பயன்படுத்துங்கள் (இதற்கான இணைப்பு இடப்பக்கப் பட்டையிலும் இருக்கிறது).

என்ன, தமிழ் விக்கிப்பீடியாவைச் சுற்றிப் பார்த்து விட்டீர்களா?

ஏதாவது ஐயங்கள், கேள்விகள் உள்ளனவா?

ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.

தமிழில் எழுதுவதற்கான உதவிக் குறிப்பையும் ஒரு முறை பார்த்து விடுங்கள். ஏனெனில், அடுத்தடுத்த பயிற்சிகளுக்கு, தமிழில் தட்டச்சு செய்யத் தெரிவது அவசியம்.

இக்கட்டுரை தொகுப்பின் அனைத்து பகுதிகளையும் காண: விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்

மூலக் கட்டுரைத் தொகுப்பு: விக்கி மின்மினிகள் பயிற்சிகள்

%d bloggers like this: