செய்யறிவின்(AI) மூலம் எழுதப்பட்டதா எனக் கண்டறியும் கருவிகள்

By | August 22, 2026

பொதுவாக கட்டுரைகளைத் திருத்துவது, நிறுவனத்தில் பணியாட்களை தெரிவுசெய்வதற்காக வேலைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வது அல்லது இணையம் , சமூக ஊடகங்களில் உலாவரும்போது காணும் கட்டுரைகள் என எதுவாக இருந்தாலும், “இதை செய்யறிவு(AI) எழுதியதா?” என்று நாம் சிந்திக்கும் சூழல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இயல்பான செயலாகிவிட்டது.

செய்யறிவின்(AI) எழுத்து நடைக்குச் சில தனித்துவமான அடையாளங்கள் (எடுத்துக்காட்டாக, ’em dash’ எனப்படும் நீண்ட கோட்டின் குறியீடு) இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய செய்யறிவுக்கே(AI) உரிய பாணிகளை வைத்து, ஒரு உரை மனிதரால் எழுதப்பட்டதா அல்லது செய்யறிவால்(AI) எழுதப்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கான பல கருவிகள்கூட தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இருப்பினும், இந்தக் கருவிகள் கூறுவது போன்று குறிப்பிட்ட உரையானது செய்யறிவால்(AI) உருவாக்கப்பட்ட உரைதான்எனத் தொடர்ந்து துல்லியமாகக் கண்டறிய முடியுமா? இதை பரிசோதித்துப் பார்த்திடுவோமா: ChatGPT, Gemini அல்லது Claude ஆகியவற்றால் எழுதப்பட்ட சில மாதிரிகளை வைத்து ஐந்து வெவ்வேறு கண்டறியும் கருவிகளை பரிசோதித்து பார்த்திடுவோம்.

சமீபத்தில் மனிதரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் இரண்டு அறிமுகப் பகுதிகள தேர்ந்தெடுக்கப்பட்டன (குறிப்பு: இவ்விரண்டும் செய்யறிவின்(AI) உதவியின்றி எழுதப்பட்டவை). பின்னர், ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பு , மையக்கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் 150 சொற்கள கொண்ட அறிமுகப் பகுதிகளை செய்யறிவு(AI) உரையாடல் களைக் (bots) கொண்டு எழுதச் செய்யப்பட்டது.

அதன்பிறகு, செய்யறிவு(AI)கண்டறியும் கருவிகளிடம் அவற்றை ஒப்படைத்து, அவற்றுக்கு இடையேயான வேறுபாட்டினை அவற்றால் அறிய முடிகிறதா என்று சரிபார்க்கப்பட்டது; அதற்கான முடிவுகள் பின்வருமாறு.

Pangram எனும் கருவி

Pangram எனும் கருவியானது தன்னை உண்மையிலேயே செயல்படும் ஒரு செய்யறிவால்(AI) எழுதப்பட்ட உரையை கண்டறியும் கருவிஎன்று முன்னிறுத்துகிறது. இதனை கொண்டு ஒரு நாளைக்கு நான்கு முறை வரை கட்டணமின்றி பரிசோதித்து சரிபார்த்திடலாம்; மாதத்திற்கு $20எனத் தொடங்கும் கட்டணத்தின் (subscription) மூலம் அதிக வரம்புகளையும், பிறரின் எழுத்தைத் திருடி எழுதியுள்ளனவா என்பதைக் கண்டறியும் வசதி (plagiarism detection) போன்ற கூடுதல் வசதிகளையும் இதில் பெறலாம்.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், முதல் இரண்டு மாதிரிகளுமே 100 சதவீதம் மனிதரால் எழுதப்பட்டவை என்று காண்பிக்கின்றன; மேலும், ஒவ்வொரு முடிவிலும் Pangram அதிக அளவிலான உறுதியை வெளிப்படுத்தியது. எழுத்து நடை எப்படி இருந்தாலும், அது செய்யறிவின்(AI) பாணியிலான உரைநடை இல்லை என்பது தெளிவாக உறுதிகூறுகின்றது.

ChatGPT,Claude ஆகியவற்றால் எழுதப்பட்ட சில அறிமுகப் பகுதிகளை Pangram-இடம் கொடுத்திடும்போது; அவை இரண்டையுமே 100 சதவீதம் செய்யறிவால்(AI) எழுதப்பட்டவை என்று அது சரியாக அடையாளம் கண்டது—Pangram-க்கு முழு மதிப்பெண்கள். “from the moment you…” என்பன போன்ற சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் மூலம் அது இதைக் கண்டறிந்ததையும் அது விளக்கமளித்தது.

Grammarly எனும் கருவி

அடுத்ததாக, Grammarly. ஆனது எழுத்துப்பிழை , இலக்கணத்தைச் சரிபார்க்கும் கருவியாக பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது; இப்போது செய்யறிவின்(AI)I வசதிகளையும், செய்யறிவால்(AI) எழுதப்பட்டதைக் கண்டறியும் வசதியையும் இது வழங்குகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை கட்டணமற்ற செய்யறிவின்(AI) பரிசோதனைகளை இதில் மேற்கொள்ளலாம்; மாதத்திற்கு $12 எனத் தொடங்கும் கட்டணத் திட்டங்கள் மூலம் அதிக வரம்புகளையும் (பல கூடுதல் வசதிகளையும்) இதில்பெறலாம்

மீண்டும்,எழுத்து நடை செய்யறிவின் (AI) பாணியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே முடிவுகள் அமைந்தன: இயந்திரத்தின் உதவியின்றி எழுதப்பட்ட முதல் இரண்டு உரை மாதிரிகளும் முழு மதிப்பெண்களைப் பெற்றன. அந்த உரைகளில் 0 சதவீதம் மட்டுமே செய்யறிவின்(AI) உரை அல்லது செய்யறிவிற்கான(AI) எழுத்து வடிவங்கள் இருந்ததாக முடிவுகள் தெரிவித்தன.

Grammarly-இல் பரிசோதித்த செய்யறிவின்(AI) மாதிரிகளான Claude , Gemini ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டவை; முறையே 68 சதவீதம் , 66 சதவீதம் செய்யறிவினால்(AI) எழுதப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டன. Grammarly-ஆல் செய்யறிவிற்கான(AI) பண்புகளைக் கண்டறிய முடிந்தாலும், அது முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.

GPTZero

இந்த GPTZero-எனும் கருவியின் நோக்கம் மனிதத்தன்மையை பாதுகாப்பதாகும்“; இதில் செய்யறிவினால்(AI) உருவாக்கப்பட்ட சொற்களைக் கண்டறியும் திறனும் அடங்கும். கட்டணமற்றக் கணக்கின் மூலம் மாதத்திற்கு 10,000 சொற்கள் வரை வருடுதல் செய்யலாம்; அதே சமயம் கட்டணத் திட்டங்கள் மாதத்திற்கு $23.99-ல் தொடங்கி, அதிக சொற்களை பரிசோதிக்கவும் கூடுதல் வசதிகளைப் பெறவும் உதவுகின்றன.

இந்தக் கட்டத்தில், இவ்வாறுக் கண்டறியும் கருவிகள் தேடும் குறிப்பிட்ட இயல்புகள் எதுவும் உரையில் இல்லை என்பதில் நம்பிக்கை ஏற்படுகின்றது. எதிர்பார்த்தபடியே, GPTZero முதல்இரண்டு மாதிரிகளையும் மனிதரால் எழுதப்பட்டவை என்றே குறிப்பிட்டது: “இந்த உரை முழுமையாக மனிதரால் எழுதப்பட்டது என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்என்று அது தெரிவித்தது.

Gemini , ChatGPT-ஆகியஇரண்டின் எழுத்து மாதிரிகளை பரிசோதித்தபோது, ​​அவை செய்யறிவினால்(AI) உருவாக்கப்பட்டவை என GPT Zeroஆனது மிகச் சரியாகக் கண்டறிந்தது; அத்துடன் செய்யறிவிற்கான(AI) பண்புகள் அதிகம் கொண்ட சொற்களையும் அது சுட்டிக்காட்டியது (இருப்பினும், உண்மையைச் சொல்லப்போனால், அடையாளம் காணப்பட்ட அந்த சொற்களில் உள்ள குறிப்பிட்ட வடிவங்களை மனிதனால் எளிதில் கண்டறிய முடிவதில்லை).

Scribbr

நான்காவது செய்யறிவின்(AI) உரையைகண்டறியும் கருவி Scribbr ஆகும்; இது பல்வேறு வகையான திருத்துதல் (editing) , பிழை திருத்துதல் (proofreading) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. இந்த உரையை கண்டறியும் கருவி முற்றிலும் கட்டணமற்றது; உரையை பரிசோதிக்கத் தொடங்குவதற்காகவென தனியாக நமக்கென கணக்கு எதையும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

முதல் இரண்டு உரை மாதிரிகளும் 100 சதவீதம் மனிதரால் எழுதப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டன. செய்யறிவு(AI)-கண்டறியும் கருவிகள் எப்போதும் முழுமையாக நம்பகமானவை அன்று என்று Scribbr ஒரு மறுப்பு அறிவிப்பை (disclaimer) வெளியிட்டிருந்தாலும், மனிதனின் எழுத்தை மதிப்பிடுவதில் அது துல்லியமாகவே செயல்பட்டது.

இருப்பினும், ChatGPT, Claude-ஆகியவற்றிலிருந்து உள்ளீடு செய்த மாதிரிகளும் முழுமையாக செய்யறிவில்(AI)-இல்லாதவை என்றே குறிப்பிடப்பட்டன; ஆனால் உண்மையில் அவை செய்யறிவால்(AI) உருவாக்கப்பட்டவை. தனது முடிவுகளில் Scribbr மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டது. இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட உரையை அது எப்படிக் கண்டறிகிறது என்பது எதுவாக இருந்தாலும், அதன் வழிமுறைகளை அது மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

Copyleaks

பரிசோதித்த ஐந்தாவதான கடைசி கருவி ‘Copyleaks’ ஆகும்; இதில் செய்யறிவின்(AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் ,கானொளி காட்சிகளைக் கண்டறியும் வசதிகளும் உள்ளன. இதில் நான்கு மாதிரிகளை (samples) கட்டணமின்றி பரிசோதிக்க முடிகி்ன்றது; அதே சமயம், மாதத்திற்கு $16.99 எனத் தொடங்கும் கட்டணத் திட்டங்கள் மூலம் விரிவான அறிக்கைகளையும் , கூடுதல் வசதிகளையும் இதில்பெறலாம்.

இந்தப் பட்டியலில் உள்ள மற்ற செய்யறிவின்(AI) உரையினை கண்டறியும் கருவிகளைப் போலவே, முதல் இரண்டு உரையின் மாதிரிகளைச் சரியாகவே அடையாளம் கண்டது: அவை இரண்டும் 100 சதவீதம் செய்யறிவால்(AI)-இல்லாதவை என்று குறிப்பிடப்பட்டன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் வரை, செய்யறிவினை(AI)ப் பயன்படுத்தி எழுதியதாக குற்றம் சாட்டப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

Claude ,Gemini ஆகியவற்றின் எழுத்து மாதிரிகளை பரிசோதித்தபோது, ​​முதலாவது 0 சதவீதம் செய்யறிவின்(AI)-ஆல் எழுதப்பட்டது என்றும், இரண்டாவது 100 சதவீதம் செய்யறிவினால்(AI)எழுதப்பட்டது என்றும் மதிப்பிடப்பட்டது—அதாவது பாதி முடிவு சரியாக இருந்தது. Scribbr-ஐப் போன்றே, இதிலும் செய்யறிவினை(AI) கண்டறியும் அளவீட்டு முறையில் (calibration) ஏதோ குறைபாடு இருப்பது போன்று தெரிகிறது.

முடிவாக

இந்த செய்யறிவின்(AI) உரைநடைஎழுத்தினை கண்டறியும் கருவிகளிட மிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று தெளிவாகத் தெரியவில்லை; அதனால்தான் அவற்றை பரிசோதித்துப் பார்க்க விரும்பபட்டது. தனிப்பட்ட முறையில், செய்யறிவின்(AI)எழுத்து நடை எப்படி இருக்கும் என்பது குறித்து நல்ல புரிதல் இருப்பதாக உணர்கிறேன்; ஆனால், அதற்கான குறிப்பிட்ட பாணிகள் அல்லது அடையாளங்களை (அதாவது இது x அல்ல, இது y’ என்பது போன்றவற்றைத் தவிர) துல்லியமாகக் கண்டறிவது கடிணமாகும்.

இந்த பரிசோதனைகளின் அடிப்படையில், இந்தக் கருவிகள் உண்மையில் சிறப்பாகச் செயல்படுகின்றன—அல்லது குறைந்தது அவற்றில் பெரும்பாலானவை, பெரும்பாலான நேரங்களில் சரியாகச் செயல்படுகின்றன. மனிதர்களால் எழுதப்பட்ட உரைகள் அனைத்துக் கருவிகளிலும் சரியாக அடையாளம் காணப்பட்டன; செய்யறிவினால்(AI) எழுதப்படாததை அடையாளம் காண்பது, செய்யறிவினால்(AI) எழுதப்பட்டதை அடையாளம் காண்பதை விட எளிது என்பதை இது காட்டுகிறது.

செய்யறிவினை(AI) கண்டறியும் திறன் முழுமையான துல்லியத்துடன் இல்லை என்றாலும், அது பயன்படுத்தும் கருவியைப் பொருத்தது. செய்யறிவின்(AI)எழுத்து நடையைக் கண்டறிவதில் தீவிரமாக இருந்தால், இரண்டு அல்லது மூன்று கருவிகளை மற்ற பரிசோதனைகளுடன் இணைத்துப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது; அத்துடன், அந்தக் கருவி எதன் அடிப்படையில் முடிவை எடுத்தது என்பதற்கான விரிவான அறிக்கைகளை வழங்கும் கட்டணத் திட்டங்களுக்கு மாறுவதும் மிகவும்நல்லது.

Leave a Reply