தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 21. சொல்வலையும் சொல்லின் பொருளில் ஐயமகற்றலும்
அடுத்து வரும் நான்கு வாக்கியங்களைப் பாருங்கள். அவன் வீட்டிற்குச் சென்று இட்லி சாப்பிட்டான். பின்னர் அவன் சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு நாற்காலியில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து, அவன் இருக்கையில் இருந்து எழுந்தான். அவன் படுக்கைக்குச் சென்றான், சில நிமிடங்களில் அவன் சத்தமாகக் குறட்டை விட்டான். இயல்மொழி செயலாக்கத்தில், வாக்கியங்களின் பொருளை அறிய கணினி நிரல்களைப் பயன்படுத்துகிறோம். மேலே உள்ள நான்கு வாக்கியங்களில், சொல்வலை (wordnet) உதவியுடன், கணினி நிரலால் பின்வருவனவற்றை அடையாளம் காண முடியும்.… Read More »