தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 11. பெரு நிறுவனங்களின் தமிழ் சேவைகளை நம்பியே இருந்தால் என்ன?
கூகிள், ஆப்பிள், முகநூல், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மொழி பற்றிய சேவைகள் பலவற்றை இலவசமாகத் தருகின்றன. எடுத்துக்காட்டாக கூகிள் தரும் மொழிக் கருவிகளைப் பற்றி விவரமாகப் பார்ப்போம். கூகிள் ஜி-போர்ட் – தமிழில் தட்டச்சும் சொல்வதெழுதலும் ஜி-போர்ட் என்பது ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்காக கூகிள் உருவாக்கிய மெய்நிகர் விசைப்பலகை செயலியாகும். தற்போது ஆண்ட்ராய்ட் திறன்பேசிகளில் 300 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது. இதன் கணிக்கக்கூடிய இயந்திரம் (predictive typing engine), நாம் தட்டச்சு… Read More »