Category Archives: Open source softwares

You Tube என்பதற்கு மாற்றான YouPHPTubeஎனும்கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

YouPHPTube என்பது காட்சி படங்களை எளிதாக பகிர்ந்து கொள்ளஉதவிடும்PHP எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்டதொரு கட்டற்றகட்டணமற்ற கானொளி இணையபயன்பாடாகும் இதில் Youtube, Vimeoஎன்பன போன்ற இணையபக்கங்களை போன்று நேரடியாக கானொளி படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நம்முடைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுவதற்காக நமக்காகவென தனியானதொரு இணைய பக்கங்களை உருவாக்கி கொள்ளமுடியும் இதில் நமக்கென தனியாக கணக்கெதுவும் உருவாக்கிடாமல் Facebook அல்லது Google போன்றவற்றின் கணக்குகளை யே உள்நுழைவு செய்வதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை நம்முடைய கைபேசி சாதனங்களின் வாயிலாக… Read More »

ஒற்றையான PHP கோப்பின் வாயிலாக Adminer என்பதன் துனையுடன் தரவுதளம் முழுவதையும் நிருவகிக்கமுடியும்

Adminer என்பது GPL 2 அல்லது அப்பாச்சி எனும் அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்ட MySQL, MariaDB, PostgreSQL, SQLite, MS SQL, Oracle, SimpleDB, Elasticsearch, MongoDB ஆகிய அனைத்து தரவுதளங்களுடன் ஒ த்தியங்ககூடிய PHP இல் உருவாக்கப்பட்ட தரவுதள சேவையாளரை கட்டுபடுத்தி மேலாண்மை செய்வதற்கான ஒரு கட்டற்றபயன்பாடாகும் இதனை நாம் பயன்படுத்திடும்போது எந்தவொரு தரவுதள சேவையாளரையும் பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வாயிலாக மட்டுமேஅனுகமுடியும் என்ற சிறந்த பாதுகாப்பினை இது வழங்குகின்றது இதனை பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் தரவுதளத்தினை… Read More »

Gpg4win எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

மின்னனு கையொப்பம் ,மறையாக்கம் ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மின்னஞ்சல்களையும் கோப்புகளையும் பாதுகாப்பாக கொண்டுசெல்ல உதவுவதுதான்  Gpg4win எனும் கட்டற்ற கட்டணமற்றபயன் பாடாகும் இதில்மறையாக்க தொழில்நுட்பமானது தேவையற்றவர்களை  குறிப்பிட்ட ஆவணத்தை படித்தறியமுடியாமல் தடுக்கின்றது அவ்வாறே மின்னனு கையொப்பதொழில்நுட்பமானது வேறுயாரும் குறிப்பிட்ட ஆவணத்தினை திருத்தம் செய்யமுடியாதவாறு தடுக்கின்றது இதன்பின்புலத்தில் GnuPG எனும் கருவி மறையாக்கம் செய்திடும் செயலை செயல்படுத்திடுகின்றது  ,மைக்ரோ சாப்ட் அவுட்லுக்கின் கூடுதல் இணைப்புகருவியாக GpgOLஎன்பதும்  விண்டோ எக்ஸ்புளோரரின் கூடுதல் இணைப்புகருவியாக GpgEXஎன்பதும்  மேலும் உரையாடல்பெட்டியான Kleopatra  என்பதற்கு… Read More »

மெய்நிகர் கணினியை உருவாக்கிடGNOME Boxes எனும் கட்டற்றபயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

புதிய சூழலில் நம்முடைய பயன்பாடு எவ்வாறு செயல்படும் என கணினியின் பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்த விழையும் நிரல்தொடராளர்கள் அல்லது புதியவர்கள் அனைவரும் தங்களுடைய அனுபவத்தை வளர்த்து கொள்ளவும் புதிய செயல்திட்டத்தை செயல்டுத்தி வெவ்வேறு சூழல்களில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் அறிந்து கொள்ளவும் விழைபவர்களுக்கு GNOME Boxes எனும் கட்டற்ற பயன்பாடானது ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது மேஜைக்கணினியில் தங்களுடைய புதிய செயல்திட்டத்தினை modeling, testing, development ஆகிய பணிகளுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் தரவுமையத்தில் தங்களுடைய… Read More »

எழுத்தாளர்களுக்கு உதவிடும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள்

வலைபூக்களிலும் ,சமூதாய இணையதளங்களிலும் மின்புத்தகங்களிலும் தத்தமது கருத்துகளை எழுதி வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் கணினிக்கு பதிலாக தங்களுடைய கைபேசி வாயிலாகவே எழுதவிரும்புகின்றனர் அவ்வாறு கைபேசி வாயிலாக எழுதுவதற்காக அதிலும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் வாயிலாக எழுதுவதற்கு உதவிடுவதற்காக பின்வரும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள் பேருதவியாய் இருக்கின்றன 1. Markor எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது எளிய நெகிழ்வுதன்மையுடன் கூடிய உரைபதிப்பானாக விளங்குகின்றது இந்த பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் new document எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்விரியும் புதிய உரைபதிப்பான்… Read More »

JPG உருவப்படங்களை விரைவாக ஒரு படவில்லைகாட்சிபோன்று காண உதவிடும் ImageGlassஎனும் கட்டற்ற பயன்பாடு

விண்டோ 10 இயக்கமுறைமை பயன்படுத்திடும் கணினியிந் கோப்பகத்தில் நாம் சேமித்துவைத்துள்ள JPG வடிவமைப்பிலுள்ள உருவப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக படவில்லைகாட்சிபோன்ற காணவிரும்புவோர் Image Glass எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மிகவிரைவாக காணமுடியும் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக GPL 3.0 எனும்அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டுள்ளது இது JPG, GIF, PNG, WEBP, SVG, RAW ஆகிய உருவப்படங்களின் வடிவமைப்புகளை ஆதரிக்கின்றது பயனாளர் விரும்பினால் நாம் விரும்பும் உருவப்படங்களின் வடிமைப்புகளை கூட இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளமுடியும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக… Read More »

Microsoft Access இற்கு மாற்றான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள்

  சிறியவியாபாரநிறுவனங்கள் சிறிய குழுவான இயக்கங்கள் ஆகியவை பெரிய நிறுவனங்கள்போன்று அதிக செலவிட்டு தரவுதளங்களை பராமரிக்க இயலாத சூழலில் தங்களுடை தரவுதள பணிகளுக்காக Microsoft Access எனும் தரவுதள பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வார்கள் ஆயினும் இதுஒரு தனியுடைமை பயன்பாடாக இருப்பதால்இதனை குறிப்பிட்ட கட்டணம் செலுத்திய பிறகே பயன்படுத்தி கொள்ளமுடியும்அவ்வாறான நிறுவனங்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்வதற்காக பல கட்டற்ற பயன்பாடுகளும் தற்போது கிடைக்கின்றன அவைகளை பற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு 1.LibreOffice Base என்பதில் வேறு எந்தவொரு… Read More »

pandocஎனும் கட்டற்றமென்பொருள்ஒரு அறிமுகம்

இது எந்தவொரு வடிவமைப்பிலான உரையையும் எந்தவொரு வடிவமைப்பிற்கும் உருமாற்றிட உதவுகின்றது அதாவது சாதாரண உரையை அல்லது குறிமுறைவரிகளை உரைசெயலிகளில் பயன்படுத்தி–கொள்வதற்காக நகலெடுத்து கொண்டுசென்று ஒட்டி பயன்படுத்திடுவோம் அதற்கு பதிலாக அவ்வுரைகோப்பினை நாம் விரும்பும் வடிவமைப்பில் உருமாற்றம் செய்திட தனியுடமை மென்பொருட்கள் பல தயாராக உள்ளன அதைவிட GPLஎனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள pandoc எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளலாமே இது சாதாரண உரைமட்டுமல்லாது Markdown கோப்பு போன்றது மட்டுமல்லாமல் வேறு எந்தவகை கோப்பாக இருந்தாலும் நாம்… Read More »

SpyDERஎன சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல் ஆய்விற்கான பைத்தான் மேம்படுத்திடும் சூழல் ஒருஅறிமுகம்

  அறிவியல்பூர்வ பைதானின் மேம்படுத்திடும் சூழல்(Scientific Python Development Environment(SPYDER)) என்பது அறிவியல் அறிஞர்களுக்கும், பொறியாளர்களுக்கும் தரவு ஆய்வாளர்களுக்கும் பயன்படுவதற்காக பைதான் மொழியால்உருவாக்கி வடிவமைக்கப்பட்ட தொரு திறன்மிக்க அறிவியல் சூழலாகும்இது உள்ளிணைந்த பல்வேறு வசதி வாய்ப்புகள் மட்டுமல்லாது பைதான் மொழியின் கூடுதல் இணைப்பாகவும் , API ஆகவும் ,அதைவிட PyQt5 எனும் விரிவாக்க நூலமாகவும்–கூட இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் இதன் செயலி, இடைமுகப்புதிரை போன்ற உள்பொதிந்த உள்ளுறுப்புகளை தேவையெனில் நம்முடைய சொந்த பயன்பாடுகளில்நாம் கட்டமைத்து மேம்படுத்தி… Read More »

wxPython எனும் பைதான் நிரலாக்க மொழிக்கான கட்டற்றவரைகலை இடைமுகப்பின் கருவித்தொகுப்பு ஒரு அறிமுகம்

wxPython என்பது பைதான் நிரலாக்க மொழிக்கான அனைத்து இயக்க முறைமை–களிலும் செயல்படக்கூடியஒரு வரைகலை இடைமுகப்புின்கருவித்–தொகுப்பாகும். அதாவது இதில் உருவாக்கப்படும் கணினிநிரல்தொடரை விண்டோ,மேக்,லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் மாறுதல் எதுவும் செய்யாமலேயே செயல்படுத்தி பயன்பெறமுடியும். அவ்வாறு மற்ற இயக்கமுறைமைகளில் செயல்–படும்போதும் அந்தந்த தளங்களுக்கேயுரிய சொந்த பயன்பாடுகள் செயல்படுவதை போன்று சிறப்புதன்மையுடன் இதில் உருவாக்கிய பயன்பாடும் செயல்படுவதை கண்டுஉணரமுடியும். மேலும் பைதான் நிரலாக்குநர்கள் ஒரு வலுவான, உயர்ந்த செயல்பாட்டு வரைகலை பயனர் இடைமுகத்துடன் கூடிய எளிய நிரல்தொடர்களை உருவாக்க இது… Read More »