Category Archives: Open source softwares

ஒற்றைக்கோப்பு(SingleFile)

ஒற்றைக்கோப்பு(SingleFile) என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணையஉலாவியின் நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழு இணையதளப்பக்கத்தையும் அதன் அனைத்து வளங்களையும் (எ.கா., படங்கள், நடைதாட்கள், எழுத்துருக்கள், திரைகாட்சிகள் போன்றவை) ஒரே சொடுக்குதலில் ஒரேயொரு HTML கோப்பாக சேமிக்க நம்மை அனுமதிக்கிறது. SingleFile என்பது ஒரு நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழுமையான பக்கத்தை ஒரு HTML கோப்பாக அல்லது Google Chrome , Chromium உடன் HTM-கோப்பாக காப்பகப்படுத்த உதவுகிறது. இதன்பதிப்பு 0.0.76 இல், unMHT ஐப்… Read More »

ஆவணங்களை எழுத எம்எஸ்வேர்டுக்கு பதிலாக LaTeX ஐப் பயன்படுத்திகொள்க

அழகான ஆவணங்களை எழுத விரும்பினால், அதற்கு LaTeXதான் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இது அடிப்படையில் ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு நிரலாக்க மொழியாகும், பயன்படுத்த எளிதான தொடரியல், இது கொண்டுள்ளதால் நாம் விரும்பும் அளவிற்கு எளிதாக அல்லது மேம்பட்டதாக உருவாக்கலாம். மேலும் இதனுடன் Overleaf போன்ற கருவிகள் இணைந்து இருப்பதால் இது Google Docsஐப்போன்றே அருமையாக செயல்படுகின்றது, தற்போது நாம் எழுதுவதற்காகவென நம்முடைய சொந்த LaTeX சூழலை அமைக்க வேண்டியதில்லை, ஆனால் தொகுப்புகளுக்கான (packages)… Read More »

உங்கள் கல்வியை விரிவாக்கம் செய்யும் ஒரு கட்டற்ற இணையதளம்

கல்வி கற்க கூடிய, ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடிய மற்றும் தொழில்நுட்ப தகவல்களின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சரியான இணையதளத்தை தேடுவது சிக்கலாகவே அமைகிறது. பெரும்பாலான இணையதளங்கள், குறைவான தகவல்களை வழங்கி விட்டு மேற்கொண்டு படிப்பதற்கு அதிகப்படியான தொகையினை கேட்கின்றனர். அதையும் கடந்து இலவச இணையதளங்களாக இருந்தால், அவை பெரும்பாலும் விளம்பர கூடாரங்களாகவே இருக்கின்றன. மேலும் அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது, உங்கள் மொபைல் கருவிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மோசடி… Read More »

ஒவ்வொரு நிரலாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்துதிறமூல கருவிகள்

ஒவ்வொரு நிரலாளருக்கும் குறிமுறைவரிகளை எழுதவும், அதைபரிசோதிக்கவும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றவும் சில திறமையான கருவிகள் தேவை. அவ்வாறானவர்களுக்கு உதவிடுவதற்காக சில திறமூலகருவிகளிலும் உள்ளன, அதாவது எவரும் அவற்றை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம். இந்தக் கட்டுரையில், ஒவ்வொரு நிரலாளரும் அறிந்திருக்க வேண்டிய முதன்மையான ஐந்து திறந்த மூலக் கருவிகளைப் பற்றி காண்போம். 1. Git 🗂️ உருவப்படத்தை ஒரு whiteboard இல் வரைவதாக கொள்க, திரும்பிச் சென்று முன்பு செய்தபணியை காண விரும்புவதாகவும் மேலும் அதில் திருத்தம்செய்ய விரும்பவதாகவும் கொள்க… Read More »

கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் : 3

ஏற்கனவே இந்த தலைப்பில் இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தோம். Itsfoss தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே எட்டு கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து தெரிவித்திருந்தேன். இந்தக் கட்டுரையிலும் மூலக்கட்டுரையில் உள்ள பிற ஐந்து இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம். 9. ICFOSS கேரள அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்று, கட்டற்ற தொழில்நுட்பங்களை நீங்கள் வளர்க்க முடியும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறக்கூடிய இந்த நிகழ்வு ஒன்றரை மாத காலம்… Read More »

குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள்

நிரலாக்கத் திறன்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் இணையப் பயன் பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஆர்வமும் சிறந்த கருத்தமைவுமட்டுமே உள்ளது என்னசெய்வது என தத்தளிக்கவேண்டாம் குறிமுறைவரிகளை எழுதிடும்திறன் இல்லாதவர்களும் மென்பொருள் உருவாக்கிடுவதற்கான உதவி தற்போது தயாராக உள்ளது. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கத்திற்கு(No-code Development) உதவியை, தேர்வு செய்யக்கூடிய ஏராளமான திறமூல தளங்களும் உள்ளன. அவைகளுள் சிறந்தவை பின்வருமாறு. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கம்(No-code Development) என்பது பொதுமக்கள் நிரலாளர்கள் போன்று எந்தவொரு குறிமுறைவரிகளையும் எழுதிடவேண்டியத் தேவையில்லாமல் மென்பொருளை தாமே சுயமாக உருவாக்குவதற்கான ஒரு… Read More »

திறந்த நிலை, கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!

தற்காலத்தில் பெரும்பாலும் கட்டற்றத் தரவுகள் குறித்து, பெரும்பாலான பொதுஜன மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அவ்வாறே தெரிந்திருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. துறைசார் அறிவு கொண்ட வல்லுநர்கள் மட்டுமே கட்டற்ற தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, பல கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உருவாக்கப்படும் இத்தகைய கட்டற்ற படைப்புகள் சில மாதங்களிலேயே பராமரிப்பு இன்றி போகின்றன. மேற்கொண்டு அவற்றை பராமரித்து முறையான புதிய வெளியீடுகளை வழங்க, போதியமான நிதி இருப்பதில்லை. இந்த வாரம் நான் its… Read More »

திறந்த நிலை மின் மடல் வசதிகளை வழங்கும் புரோட்டான் மின்மடல்

நம்மில் பலரும் கூகுள் நிறுவனத்தின் மின் மடலை(Gmail)பயன்படுத்தி வருகிறோம். சிலர் யாகூ(yahoo )போன்ற, பிற நிறுவனங்களின் மின்மடல் வசதிகளை பயன்படுத்தி வருவீர்கள். Google மின் மடல் தொழில்நுட்பத்தில், அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் நம்மை அடிக்கடி கவலைக்கு உள்ளாக்குகின்றன. மேலும், சமீப காலத்தில் மின் மடல் மூலமாக உங்களுடைய கணிப்பொறி அல்லது மொபைல் ஃபோன்களுக்கு வைரஸ்கள்(malware) அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்களும் பரவி வருகின்றன. மேலும், உங்களுடைய முக்கியமான தகவல்கள்(confendial information)இங்கு திருடப்படும் அபாயமும் அதிகமாக உள்ளது.… Read More »

பலருக்கும் தெரியாத only office suite!

நம்மில் பலரும் அலுவலகப் பணிகளுக்கு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம் உங்களுடைய அலுவலகப் பணிகளை செய்வதற்கு, மிகவும் சிறப்பான தேர்வாக பலரும் குறிப்பிடுவது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் செயலியை தான். ஆனால், மேற்படி மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலியானது திறந்த நிலை பயன்பாடு கிடையாது. மேலும், சில சிறப்பம்சங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயமும், மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற செய்திகளில் காணப்படுகிறது. அதற்கு மாற்றாக, பல திறந்த நிலை பயன்பாடுகள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட… Read More »

Chrome உலாவியில் இருக்கும் அருமையான 5 துணை கருவிகள்

நம்மில் பலரும் குரோம் உலாவியை பயன்படுத்தி வருகிறோம். குரோம் உலாவியில் பலவிதமான துணைக் கருவிகளையும்(extensions) பயன்படுத்தியிருப்பீர்கள். அதில்சில திறந்த நிலை பயன்பாடுகளாக இருக்காது.ஆனால், இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் ஐந்து துணைக் கருவிகளும், திறந்த நிலை பயன்பாடுகள் தான். அதே நேரம், உங்களுக்கான வேலையை மேலும் எளிதாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஐந்து சிறப்பான துணை கருவிகள், எவை?எவை? என்பதை ஒன்றொன்றாக பார்க்கலாம். அதற்கு முன்பாக, மேற்படி இந்த கட்டுரையானது  itsfoss இணையதளத்தில் சாய்… Read More »