Category Archives: Tools

வினவல் மரம்(QueryTree)

Query Tree என்பது தரவுத்தளங்களின் சக்திவாய்ந்த, பாதுகாப்பான ,நெகிழ்வான,அறிக்கையிடலிற்கும் காட்சிப்படுத்தலுக்குமான தொரு கருவியாகும், இது பொதுமக்கள் தங்களுடைய மென்பொருளின் அல்லது பயன்பாட்டின் தரவுகளை எளிதாக அணுகவும் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கின்றது. இதுநாம் உருவாக்க விரும்பும் நமது பயன்பாட்டிற்கான தற்காலிக அறிக்கைக்கும் காட்சிப்படுத்தலுக்குமான ஒரு திறமூல தீர்வாக அமைகின்றது. தனிப்பட்டநபர்களுக்குஇது கட்டணமற்றது , விண்டோ,இணையம்ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்க இதனை Github இலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க,இதனை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் மின்னனு நிலை அல்லது Docker ஐப் பயன்படுத்தி… Read More: வினவல் மரம்(QueryTree) »

அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான BeeWare , Kivy எனும்கருவிகள்

கணினிகளில் தற்போது நாமெல்லோராலும் பயன்படுத்தி கொண்டுவரும் பெரும்பாலான பயன்பாடு களானவை கணினிகளில் மட்டுமல்லாது திறன்பேசிகள் கைபேசிகள் போன்ற எல்லா வற்றிலும் பயன்பாட்டில் உள்ளன.இவை திறன்பேசிகள் போன்ற சாதனங்களின் பிரபலமாக பயன்படுத்தி கொள்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் பயன்படுத்தி கொள்ளப்படும் எண்ணற்ற பயன்பாடுகளின் கிடைக்கும் தன்மையாகும். பொதுவாக பயன்பாடுகளை உருவாக்கும் திறமையானது மென்பொருள் உருவாக்குநர்கள் பெற விரும்பும் ஒரு முக்கியமான திறமையாகும். இந்நாட்களில்(தற்போது) ஆண்ட்ராய்டு, iOS, ராஸ்பெர்ரி பை போன்ற பல்வேறு தளங்கள் நடைமுறை பயன்பாட்டில் இருப்பதால்,… Read More: அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான BeeWare , Kivy எனும்கருவிகள் »

Ventoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம்

வென்டோய்( Ventoy) என்பது கணினியின் இயக்கத்தை USB இயக்ககத்திலிருந்து துவக்ககூடிய வகையில் USB இயக்ககத்தின் ISO கோப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும். இதன் மூலம், கணினியின் இயக்கமானது பிரச்சினை எதுவும் இல்லாமல் துவங்குவதற்காக அதனுடைய வண்தட்டை மீண்டும் மீண்டும் வடிவமைக்க (format )தேவையில்லை, அதற்குபதிலாக மிகஎளிய வழிமுறையாக ISO கோப்பை USB இயக்ககத்தில் நகலெடுத்து கணினியின் இயக்கத்தை துவக்கினால்போதுமானதாகும். இதன்வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றிற்குமேற்பட்ட பல்வேறு ISO கோப்புகளை நகலெடுக்கலாம் மேலும் இது அவற்றைத் தேர்ந்தெடுக்க… Read More: Ventoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம் »

PlantUML எனும் கட்டற்றகருவி

PlantUml என்பது ஒரு எளிய உரை விளக்க மொழியைப் பயன்படுத்தி ஒரு சில UML வரைபடத்தை விரைவாக உருவாக்க அனுமதிக்கின்ற ஒரு திறமூல கருவியாகும். இது எளிய மனிதர்களால் படிக்கக்கூடிய உரை விளக்கத்தை மட்டுமே பயன்படுத்தி UML வரைபடங்களை வரைய உதவுகின்றது. இதில் வரைபடத்தினை வரையும்போது மிககவனமாக இருக்கவேண்டும், ஏனென்றால் சீரற்ற வரைபடங்களை வரைவதிலிருந்து இது நம்மைத் தடுக்காது (எடுத்துக்காட்டாக, இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று மரபுரிமையாகக் கொண்டிருப்பது போன்றவை). எனவே இது ஒரு மாதிரி கருவியை விட… Read More: PlantUML எனும் கட்டற்றகருவி »

யூடியூப் “செயலி”யை மூடிய பிறகும் கேட்பது, விளம்பரம் இல்லாமல் கேட்பது எப்படி?

யூடியூப் தான் இன்றைய நிலையில் இரண்டாவது மிகப் பெரிய தேடுதல் பொறி. சமையலில் தொடங்கி, படம் வரைவது, படம் பார்ப்பது, பாடம் படிப்பது என்று யூடியூபைப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், யூடியூப் தளத்தைப் பயன்படுத்துவதற்கும் யூடியூப் செயலியை அலைபேசியில் பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. யூடியூப் தளத்தைக் கணினியில் பார்க்கும் போது நாம் வேறு தத்தல்(Tab)களில் வேறு வேலைகள் பார்க்கலாம். யூடியூபைச் சுருக்கி(minimize) வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் யூடியூப் செயலியில் செய்யவே முடியாது. யூடியூபைத்… Read More: யூடியூப் “செயலி”யை மூடிய பிறகும் கேட்பது, விளம்பரம் இல்லாமல் கேட்பது எப்படி? »

Speedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம் அல்லது பிணைய வேகத்தை சரிபார்த்திடலாம்.

நம்முடைய கணினியின் இணைப்பு கட்டுப்பாட்டில் இருக்கும். இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை சரிபார்த்து ஏற்புகை செய்திடமுடியும் அவ்வாறு இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை கட்டளை வரிகளின் வாயிலாக சரிபார்த்திடுவதற்காக Speedtest, Fast, iPerf ஆகிய மூன்று திற மூல கருவிகளும் உதவுகின்றன. 1. Speedtestஎனும் திறமூல கருவி இது அனைவராலும் விரும்பும் ஒரு மிகப்பழைய கருவியாகும். இது பைத்தானில் பயன்பாடாக தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, , மேலும் இது pip மூலமும் கிடைக்கின்றது. நாம் இதனை… Read More: Speedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம்… »

nmon எனும் லினக்ஸ் செயல்திறன்கட்டுபாட்டாளர் ஒருஅறிமுகம்

nmon என சுருக்கமாகஅழைக்கப்படும் நைகலின் செயல்திறன் கட்டுபாட்டாளரானது( Nigel’s Performance Monitor) ஒரு சிறந்த திறமூல கருவியாகும் இது புதுப்பிக்கும் புள்ளி–விவரங்களை வினாடிக்கு ஒரு முறைதிரையில் காண்பிக்கின்றது அல்லது பெறப்படும் தரவுகளை பின்னர் பகுப்பாய்வுசெய்து கொள்வதற்காகவும் வரைபடமாக உருவாக்கி ஆய்வுசெய்வதற்காகவும் ஒரு CSV வகை கோப்பில் சேமிக்கின்றது. இதனுடைய njmon எனும் புதிய பதிப்பானது தற்போது ஏராளமான கருவிகளை பயன்படுத்தும் JSON வடிவமைப்பை வெளியிடுகின்றது. இதனுடைய வசதி வாய்ப்புகள்பின்வருமாறு இது JSON தரவுகளைச் சேர்ப்பதற்கான பைதான் இன்ஜெக்டர்களை… Read More: nmon எனும் லினக்ஸ் செயல்திறன்கட்டுபாட்டாளர் ஒருஅறிமுகம் »

wxPython எனும் பைதான் நிரலாக்க மொழிக்கான கட்டற்றவரைகலை இடைமுகப்பின் கருவித்தொகுப்பு ஒரு அறிமுகம்

wxPython என்பது பைதான் நிரலாக்க மொழிக்கான அனைத்து இயக்க முறைமை–களிலும் செயல்படக்கூடியஒரு வரைகலை இடைமுகப்புின்கருவித்–தொகுப்பாகும். அதாவது இதில் உருவாக்கப்படும் கணினிநிரல்தொடரை விண்டோ,மேக்,லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் மாறுதல் எதுவும் செய்யாமலேயே செயல்படுத்தி பயன்பெறமுடியும். அவ்வாறு மற்ற இயக்கமுறைமைகளில் செயல்–படும்போதும் அந்தந்த தளங்களுக்கேயுரிய சொந்த பயன்பாடுகள் செயல்படுவதை போன்று சிறப்புதன்மையுடன் இதில் உருவாக்கிய பயன்பாடும் செயல்படுவதை கண்டுஉணரமுடியும். மேலும் பைதான் நிரலாக்குநர்கள் ஒரு வலுவான, உயர்ந்த செயல்பாட்டு வரைகலை பயனர் இடைமுகத்துடன் கூடிய எளிய நிரல்தொடர்களை உருவாக்க இது… Read More: wxPython எனும் பைதான் நிரலாக்க மொழிக்கான கட்டற்றவரைகலை இடைமுகப்பின் கருவித்தொகுப்பு ஒரு அறிமுகம் »

நம்முடைய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி வடிவமைத்திட Calculist. எனும் கட்டற்ற கருவியை பயன்படுத்தி கொள்க

 நம்முடைய மனதில்ஏராளமான அளவில் ஆலோசனைகள். திட்டங்கள் எப்போதும் உருவாகி கொண்டேயிருக்கின்றனஅவைகளிலிருந்து நம்மில்ஒருசிலர் ஒரு யதார்த்தத்தை உருவாக்க விரும்புகின்றோம் எவ்வாறாயினும்அந்த எண்ணங்கள், யோசனைகள் , திட்டங்கள் போன்றவை பெரும்பாலானோர்களின் மனதில் தெளிவான வடிவத்திற்கு கொண்டுசெல்லாமல் குழப்பத்திலேயே கரைந்து மறைந்து போகின்றன அவ்வாறான நிலையில் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு ஒன்றினை எடுத்து அவை எல்லாவற்றையும் ஒழுங்கமைவுசெய்து நல்லபயனுள்ள வடிவத்துடன் வெளிப்படுத்திடுவது சிறந்தசெயலாகுமல்லவா இதற்காக ஏராளமான அளவில் தனியுடைமை மென்பொருட்கள் உள்ளன அவைகளைவிட அவகைளுக்கு சிறந்த மாற்றாக Calculist எனும் கட்டற்ற… Read More: நம்முடைய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி வடிவமைத்திட Calculist. எனும் கட்டற்ற கருவியை பயன்படுத்தி… »

WebAssembly எனும்ஒரு புதிய கருவிஅறிமுகம்

Wasm என சுருக்கமாகஅழைக்கப்படும் WebAssemblyஎன்பது தற்போது நாம் பயன்படுத்திகொண்டுவரும் பல்வேறு இணய பயன்பாடுகளுக்காக எழுதிய குறிமுறைவரி-களை கணினிக்கு புரியும் வகையில் இயந்திரமொழிக்கு எளிதாக உருமாற்றுவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதொரு புதிய கருவியாகும் இது குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற அனைத்து இணையஉலாவிகளிலும் இயங்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது இதற்கு முன் ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தியஇடங்களில் அதற்கு பதிலாக இந்த WebAssembly பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்கப்–பட்டுள்ளது சி ,சி ++, ரஸ்ட் போன்ற கணினிமொழிகளில் எழுதிய குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு உருமாற்றுவதற்கு இது பேருதவியாய் விளங்கு-கின்றது.இது கட்டளைவரி… Read More: WebAssembly எனும்ஒரு புதிய கருவிஅறிமுகம் »