videos

பள்ளியில் லினக்ஸ் – தொடர் – அத்தியாயம் 1

இந்த காணொளியில் முந்தைய அத்தியாயத்தில் டொரண்ட் வழியாக பதிவிறக்கப்பட்ட லினக்ஸ்மின்ட் ஐஎஸ்ஓ கோப்பை எப்படி ஒரு பென்டிரைவில் ப்ளாஷ் செய்வது என்பதை கற்போம்.     காணொளி வழங்கும் குழுமம்: ILUGC (ilugc.in) காணொளி வழங்கியவர்: மோகன் .ரா   Links: www.balena.io/etcher/

தமிழ்நாடு சமச்சீர் கல்வி – பள்ளியில் லினக்ஸ் – தொடர் – அத்தியாயம் 0

  இத்தொடரில், தமிழ்நாடு சமச்சீர் கல்வியில், 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடத்தை எப்படி லினக்ஸ் வாழியாக கற்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்து பார்க்கவிருக்கிறோம்.   காணொளி வழங்கிய குழுமம்: ILUGC (ilugc.in) காணொளி வழங்கவர்: மோகன் .ரா

கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – காணொளி

கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – Free Software Introduction in Tamil வீடியோவை வழங்கியவர்: த. சீனிவாசன், கணியம் அறக்கட்டளை  

யுனிக்ஸ் (Unix) – ஒரு அறிமுகம் – காணொளி

யுனிக்சும் அதன் வரலாறும். லினக்ஸ் மற்றும் கட்டற்ற மென்பொருள் கற்க விரும்பும் ஒவ்வோருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று யுனிக்ஸ்.   இதை பற்றி தெரிந்தால்தான் கட்டற்ற மென்பொருள் என்ன என்று புரியும். வரலாறு முக்கியம் மக்கா!! தூக்கம் வந்தாலும் டீ குடிச்சிக்கிட்டே கேளுங்க. வீடியோவை வழங்கிய குழுமம்: ILUGC (ilugc.in) வீடியோவை வழங்கியவர்: மோகன்…
Read more

கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – Tamil Linux Community – தொடக்க விழா நிகழ்வு

    கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – தொடக்க விழா நிகழ்வு அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம், தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள…
Read more

கணியம் அறக்கட்டளைக்கு ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி     விவரங்கள் இங்கே. கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது     கணியம் அறக்கட்டளை நண்பர்களுக்கும், தமிழ்க்கணிமை பங்களிப்பாளர்களுக்கும், ஆனந்த விகடன் குழுமத்துக்கும் நன்றிகள்

பயிலகம் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்…

“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.” கணியம் சார்பாக, திங்கள்(15-05-2020) காலை “பயிலகம் மாணவர்களுடன்” உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பைத்தான்(Python) தொழில்நுட்பத்தைப் பயின்று அடுத்து என்ன செய்தால், நல்ல…
Read more

கட்டற்ற மென்பொருள் , பைதான், நிரலாக்கம் பற்றிய ஒரு உரை

இன்று காலை பயிலகம் மாணவர்களுடன் கட்டற்ற மென்பொருட்கள், வரலாறு, தேவை, பைதான், நிரலாக்கம் செய்தல் ஆகியன பற்றி பேசினேன். 30 நாட்களாக தொடர்ந்து பைதான் மொழியை இணைய வழியில் கற்பித்துள்ளனர். நிகழ்வை ஏற்பாடு செய்த பயிலகம் குழுவினருக்கு நன்றி. அதன் பதிவு இங்கே – த.சீனிவாசன்

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – ஆவணப்படம்

‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற இந்த ஆவணப் படத்தை அதன் இயக்குனர் வெ.பி. வினோத் குமார் அவர்கள் யாவரும் எங்கும் இலவசமாகப் பகிரும் வகையில் Creative Commons Attribution license உரிமையில் வெளியிட்டுள்ளார். அவருக்கும், இதற்கான முன்னெடுப்புகளைச் செய்த நண்பர் அன்வர் அவர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள். காண்க – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/39