கடந்த 2023 ஆண்டு ஜனவரி மாதத்தில் ChatGPT ஆனது 100 மில்லியன் மாதாந்திர சந்தா செலுத்துகின்ற பயனாளர்களை எட்டியுள்ளதாக தெரிய வருகின்றது, அதாவது இது கணினிவரலாற்றில் மிகவேகமாக வளரும் நுகர்வோர் செயலியாக மாறியுள்ளதாக தெரியவருகின்ற செய்தியாகும். மிகமுக்கியமாக வணிக உலகம் முழுவதும் இந்தChatGPTஐ பயன்படுத்தி கொள்வதில்மிக ஆர்வமாக உள்ளது, அதனோடு பல்வேறு தொழில்கள் குறித்து எழுதும் திறன்மிக்கAIக்கான பயன் பாடுகளைக் கண்டறிய முயற்சிக்கிறது. அவ்வாறு மிகவேகமாக வளர்ந்து வருகின்ற ChatGPT எனும் செயலி குறித்தும் அதன் போட்டியாளர்கள் குறித்தும் நம் மனதில் எழுகின்ற பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்களுமாக உங்களுக்கு எழும் சந்தேகக்களை களைந்து இந்தChatGPT எனும் செயலியை பயன்படுத்தி கொள்வதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்த கட்டுரை அமையும்.
ChatGPT என்றால் என்ன?
ChatGPT என்பது திறமூலசெயற்கைநினைவகம்(OpenAI)எனும் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI இன் அரட்டைதளத்திற்கான(chatbot) தயாரிப்பாகும். ChatGPT ஆனது தற்போதுGPT-4 இன் பதிப்பாக கட்டமைக்கப் பட்டுள்ளது. GPT என சுருக்கமாக அழைக்கப்பெறும் உருவாக்கு தலி்ற்கான முன் பயிற்சி பெற்ற மின்னனுமாற்றி (generative pre-trained transformer )என்பது நாம் நம்முடைய நடைமுறையில் பேசுகின்ற ஒரு பெரிய மாதிரிமொழி என்பதை குறிக்கிறது, இது எந்தவொரு உரைநடையிலும் வரிசையாக அடுத்தடுத்து என்னென்ன சொற்கள் வரக்கூடும் என்பதற்கான நிகழ்தகவை மிகவும் விரைவாக சரிபார்த்து கொண்டுவந்து சேர்க்கிறது. இந்த பெரிய மாதிரிமொழி என்பது ஒரு ஆழ்கற்றலின் தருக்கபடிமுறையாகும் – அதாவது ஒரு வகை மாதிரி மின்னனு மாற்றியாகும் , இதில் ஒரு நரம்பியல் வலைபின்னலின் எந்தவொரு மொழி வடிவத்தின் அமைப்பையும் நன்கு கற்றுக்கொள்கிறது. அதாவது மனிதர்களாகிய நாம் பேசும் மொழியாகவோ அல்லது கணினியின் நிரலாக்க மொழியாகவோ எதுவாகவும் இருக்கலாம்.
இம்மாதிரியானது அது என்ன சொல்கிறது என்று அதற்கு “தெரியவராது”, ஆனால் அது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தரவுத் தொகுப்பின் அடிப்படையில் ஒன்றன் பின் ஒன்றாக என்னென்ன குறியீடுகள் (சொற்கள்) வரக்கூடும் என்பதை அது அறிந்துகொண்டுள்ளது. தற்போதைய தலைமுறை செயற்கை நுண்ணறிவு அரட்டைதளங்களானவை(chatbots) , அதாவது இந்த ChatGPT, அதன் Google போட்டியாளரான Bard போன்றவை, நமக்கு தெரிந்த புத்திசாலித்தனமாகத் முடிவுகளை எடுப்பதில்லை; மாறாக, அவை நாம் பேசுவதையே திரும்ப பேசுகின்ற கிளிபோன்ற இணையத்தின் கிளிகளாகும், இந்த இணையத்தின் கிளிகளானவை நம்முடைய இயல்பான பேச்சின் போக்கில் ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து நாம் எவ்வாறெல்லாம் பேசக்கூடும் என்தற்கான சொற்களை மீண்டும் மீண்டும் கூறுகின்றன. இது ஒரு அடிப்படைக் கணித நிகழ்தகவு பற்றியதாகும். அவற்றை உருவாக்கி பயன்படுத்துகின்ற நிறுவனங்களுக்காக, உற்பத்தித்திறனுடனான அறிவாற்றலுடையவைகளாக மாறி, , தனிநபர் ஒருவர் சிலமணிநேரம் அல்லது சிலநாட்கள் எடுத்துகொண்டு தயார் செய்திடும் பக்கம் பக்கமான உரையைஇது சில நொடிகளில் அவ்வுரையை உருவாக்கி திரையில் கொண்டுவந்துவிடுகின்றது.
ChatGPT என்பது, இணையத்தின் தரவுத் தொகுப்பில் பெரும்பகுதியாகும். அதில், மனிதர்கள் AI இன் வெளியீடு குறித்து தெரிவிக்கின்ற கருத்துகளை கொண்டு, அது தான் பயன்படுத்துகின்ற சொற்கள் இயல்பாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திகொள்கிறது.
தற்போது பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய சில மென்பொருளிலுள்ள வசதிகளிலும் நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனை உருவாக்கியுள்ளன. மேலும் இந்தOpenAIக்கு நிதியுதவி வழங்குகின்ற மைக்ரோசாப்ட் நிறுவனமானது, முன்னோட்டமாக Bing தேடுதலில் ChatGPTஐ வெளியிட்டது. மேலும் Salesforceஆனது அதன் சில CRM இயங்கு தளங்களில் ஐன்ஸ்டீன் எண்ணிம உதவியாளர் வடிவத்தில் ChatGPT ஐச் சேர்த்துள்ளது.
ChatGPTயை உருவாக்கிய நிறுவனம் எது?
ChatGPT ஆனது OpenAI ஆல் உருவாக்கப்பட்டது, இந்த OpenAI ஆனது ஒருஇலாப நோக்கமற்ற எதிர்காலத்தில் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த OpenAI ஆனது 2015 ஆம் ஆண்டு நிறுவுகை செய்யப் பட்டது, அமேசான் இணைய சேவைகள், InfoSys , YC ஆராய்ச்சி முதலீட்டாளர், Elon Musk , Peter Thiel ஆகியமுதலீட்டாளர் கள் இந்த OpenAI ஐ உருவாக்குவதற்கான நிதியை வழங்கியுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட தற்போது இந்தOpenAIக்கு $10 பில்லியன் அளவு நிதியுதவியை வழங்கியுள்ளது அதனால், தற்போதுElon Musk இந்நிறுவனத்துடனான உறவை முறித்துக் கொண்டார்.
ChatGPTஐ பயன்படுத்தி கொள்வதற்கு எவ்வளவு செலவாகும்?
ChatGPT இன் அடிப்படைப் பதிப்பு ஆனது நம்முடன் கட்டணமில்லாமல் உரையாடலைத் தொடங்குகின்றது தொடர்ந்து. மாதமொன்றிற்கு $20க்கு, ChatGPT Plus ஆனது சந்தாதாரர்களுக்கு தனிப்பட்ட நிகழ்வுகளில் முன்னுரிமை அணுகலையும், விரைவான மறுமொழி நேரத்தையும் புதிய வசதிகளையும் மேம்படுத்துதல்களையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, தற்போது ChatGPT Plus சந்தாதாரர்கள் GPT-4ஐ இயக்கிபயன்படுத்தி கொள்ளலாம், அதே நேரத்தில் அவர்கள் கட்டணமற்ற GPT-3.5 எனும் அடுக்கில் உள்ள அனைவருடனும் கலந்துரையாடலாம்.
ChatGPT ஐ எவ்வாறு பயன்படுத்துவது
ChatGPT இன் கட்டணமற்ற பதிப்பைப் பயன்படுத்துவது எளிது. முதலில் இதில் நாம் இணைவதற்கான உறுதிப்படுத்தலின் குறியீட்டினை நம்முடைய மின்னஞ்சலில் பெற்றிடுக அதனை தொடர்ந்து OpenAIஇல் நமக்கென ஒரு கணக்கினை உருவாக்கிடுவதற்காக பதிவுசெய்திட வேண்டும்; அதற்காக அங்கு நம்முடைய பெயர் தொலைபேசி எண் என்பன போன்ற அங்கு கோரும் விவரங்களை உள்ளீடுசெய்து சொடுக்குதல் செய்திடுக. உடன் இது ChatGPT இன் ஒரு கட்டணமற்ற பதிப்பு என “a free research preview.” என்ற செய்தியுடன் நம்மை எச்சரிக்கை செய்திடுகின்றது.அதனை தொடர்ந்து ChatGPT இன் Plus பதிப்பினை பயன்படுத்தி கொள்வதற்காக, முகப்புப் பக்கதிரையின் இடது பக்கத்தில்“upgrade to Plus” எனும் பொத்தானைக் காணலாம்.
, ChatGPT ஐ வணிகநிறுவனங்களுக்கென குறிமுறைவரிகளை எழுதிடவும் ,பிழைத்திருத்தம் செய்திடவும் பயன்படுத்திகொள்ளலாம், அத்துடன் அறிக்கைகள், விளக்கக்காட்சிகள், மின்னஞ்சல்கள் , இணையதளங்கள் ஆகியவற்றை தங்களுக்கென உருவாக்கி கொள்ளலாம். பொதுவாக, ChatGPTஐ கொண்டு நம்முடைய வழக்கமான அலுவலக பணிக்குப் பயன்படுத்தக்கூடிய அனைத்து உரையையும் உருவாக்க முடியும் (“சைபர் செக்யூரிட்டி மாநாட்டில் பேசுவதற்கான அழைப்பை ஏற்று அதற்கான மின்னஞ்சலை எழுதவும்.” எனக்கோரினால் உடன் அதற்கான கட்டுரையை சில வினாடிகளில் இந்த . ChatGPT ஆனதுதிரையில் கொண்டுவந்துவிடும்). ChatGPT ஆல் (“[…xyz] போன்ற புத்தகங்கள் எவை?”) என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். இவ்வசதிகளை Word ,வேறு சில பகுதிகள் 365எனும்,வணிகத்தொகுப்பு ஆகியவற்றுடன் OpenAI இணைந்து கொண்டுவருகின்றது என மைக்ரோசாப்ட் நிறுவனும் அறிவிப்பு வெளியி்ட்டுள்ளது.
iOSக்கான ChatGPT பயன்பாடு
மே 18, 2023 அன்று, iOSக்கான கட்டணமற்ற ChatGPT பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக OpenAI அறிவித்தது. இந்தபயன்பாடு அவ்வாறான சாதனங்கள் முழுவதும் நம்முடைய வரலாற்றை ஒத்திசைக்கிறது, மேலும் இது அதன் திறமூல பேச்சு-அங்கீகார அமைப்பு Whisper உடன் ஒருங்கிணைக்கிறது என இந்நிறுவனம் கூறியுள்ளது. iOS பயன்பாட்டில், ChatGPT Plus சந்தாதாரர்கள் GPT-4 இன் திறன்களுக்கான தனிப்பட்ட அணுகலைப் பெற முடியும், இதன் முக்கிய வசதிகளுக்கான ஆரம்ப அணுகல், விரைவான மறு மொழிக்கான நேரம் ஆகியவற்றைப் பெறமுடியும் என்று OpenAI கூறியுள்ளது.
OpenAIஆனது மே 24 இல் அமெரிக்காவில் இந்த வெளியீடானது துவங்கிய – பின்னர் இது அல்பேனியா, குரோஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஜமைக்கா, கொரியா, நியூசிலாந்து, நிகரகுவா, நைஜீரியா, பிரி்ட்டன் ஆகிய 11 நாடுகளுக்கு விரிவடைந்தது.
Androidக்கான ChatGPT பயன்பாடு
OpenAI நிருவனமானது IOSக்கான ChatGPT பயன்பாட்டிற்கான அறிவிப்பில், , “Android பயனாளர்களே, அடுத்து உங்களுக்குத்தான்! விரைவில் ChatGPTஆனது உங்களுடைய சாதனங்களுக்கு வந்துசேரும். என்று அறிவிப்பு செய்துள்ளது
ChatGPT புதுப்பிப்புகளும் OpenAI API செய்திகளும்
OpenAI ஆனது ChatGPT, அதன் பிற சேவைகளை மேம்படுத்துநர் சார்ந்த மாற்றங்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படுறது.
OpenAI இன் பிழையறியும் ஊக்கப்பரிசுதிட்டம்
OpenAIஆனது ஏப்ரல் 12 அன்று ஒரு பிழையறியும்ஊக்கப்பரிசு( bug bounty) எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது, இதன் குறிமுறைவரிகளில் குறிப்பிட்டபகுதி தாக்குதல் செய்பவர்களால் மிகமோசமாக பாதிப்பு ஏற்படும் எனக் கண்டறிந்து சுட்டிகாட்டுபவர்களுக்கு $200 முதல் $20,000 வரை ஊக்கபபரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மிக முக்கியமான பெரிய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டுகின்ற பிழைகளுக்கு அதைவிட மிக அதிக பரிசுத்தொகை வழங்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
ChatGPT இன் உள்ளடக்கத்தில் உள்ள சிக்கல்களுக்கு OpenAI தீர்வுகளைத் கோரவில்லை (எ.கா., அறியப்பட்ட “மாயத்தோற்றங்கள்”); அதற்குப் பதிலாக, தாக்குதல்செய்பவர்கள் அங்கீகாரச் சிக்கல்கள், தரவு வெளிப்பாடு, கட்டணச் சிக்கல்கள், உட்செருகி உருவாக்கும் அமைப்பில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் போன்ற பலவற்றைப் புகாரளிக்க வேண்டும் என்று இந்நிறுவனம் விரும்புகிறது. இந்த பிழையறியும் ஊக்கப்பரிசு ( bug bounty) திட்டத்தைப் பற்றிய மேலும் விவரங்களை Bug crowd எனும் பகுதியில் காணலாம்.
இணைய உலாவலும் செருகுநிரல்களும்
GPT இன்Plus பயனாளர்கள் மே 12 ,2023 இல் இணைய உலாவல் , செருகுநிரல்களின் பீட்டா பதிப்பிற்கான அணுகலைப் பெற்றனர். பீட்டாவில் இணைய உலாவல் பயன்முறை உள்ளது, இதில் ChatGPTஆனது சில சமயங்களில் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பெற இணையத்தை அணுகுகின்றது.
இரண்டாவதாக, ChatGPT இன் பீட்டா பதிப்பு மூன்றாம் தரப்பினரின் செருகுநிரல்களை பயனாளர் செயல்படுத்தினால், பொருத்தமான நேரத்தில் அவற்றை அழைக்கின்றது. மூன்றாம் தரப்பு செருகுநிரல்களை மாதிரி மாற்றியில் உள்ள செருகுநிரல்களின் கீழ் உள்ள செருகுநிரல் அங்காடியில் அணுகலாம். இது 70 க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு செருகுநிரல்கள் வரை ChatGPT ஐ திறக்கின்றது.
ஜூன் 2023 API , விலை அறிவிப்புகள்
ஜூன் 13, 2023 அன்று, OpenAI ஆனது Chat Completions API க்கு செயலி அழைப்புகளைச் சேர்த்தது; அவற்றின் உட்பொதிவு மாதிரியின் விலையைக் குறைத்தது (இது மாதிரி டோக்கன்களை விளக்க உதவுகிறது); , GPT 3.5 மாதிரிக்கான சந்தா மாதிரிகளில் ஒன்றான GPT-3.5 -turbo க்கான உள்ளீட்டு டோக்கன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
செயலி அழைப்பின் மூலம், மேம்படுத்துநர்கள் GPT-4 அல்லது GPT-3.5turbo ,இற்கு பயன்படுத்தி கொள்வதற்காக அதுகுறித்துவிவரிக்க முடியும் , AI அந்த செயலிகளை அழைக்கக்கூடிய JSON objectஐ வழங்குகின்றது. வெளிப்புற செருகுநிரல்களை அழைக்கின்ற அரட்டைதள(chatbot) கருவிகளை உருவாக்க, இயல்பானமொழியை தரவுத்தள வினவல்கள் அல்லது API அழைப்புகளாக மாற்ற அல்லது உரையிலிருந்து கட்டமைக்கப்பட்ட தரவைப் பிரித்தெடுக்க இதனை பயன்படுத்திகொள்ளலாம்.
OpenAI இன் ஜூன் 13,2023இன் வலைப்பதிவு இடுகையின் பிற அறிவிப்புகள்:
GPT-4 , GPT-3.5-turbo இன் புதுப்பிக்கப்பட்ட , மிகவும் நிலையான பதிப்புகள்
GPT-3.5-turboஇன் புதிய 16K சூழல் பதிப்பு (நிலையான 4Kபதிப்புடன் ஒப்பிடும்போது)
GPT-3.5-turbo, GPT-4 ,GPT-4-32K ஆகியவற்றைப் பயன்படுத்திகொள்கின்ற பயன்பாடுகள் ஜூன் 27,2023 அன்று தானாகவே புதிய மாதிரிகளுக்கு மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
ChatGPT போன்ற generative AI பற்றிய பொதுவான விமர்சனங்கள்
பொதுவாக ஏராளமான வணிக நிறுவனங்கள் இந்தChatGPTஐ ஏற்றுக் கொள்வதால், உடன் நமக்கு அதுகுறித்து பின்வருமாறான பல்வேறு கேள்விகள் எழுகின்றன. தற்போது மனிதர்களால் செய்யப்படுகின்ற பல்வேறு பணிகளை இந்தChatGPT ஆல் செயற்படுத்திநிரப்ப முடியுமா?
அதனால் தனியுரிமை , ஒழுங்குநெறிமுறை மீறல்கள் ஏதேனும் உருவாகிடுமா?
இந்த கேள்விகள் ChatGPT மட்டுமன்று, அதன் போட்டியாளர்களான மற்ற generative AI களுக்கும் பொருந்தும், ஏனெனில் எந்தவொரு AIஆலும் இது போன்ற பணிகளைமிகவிரைவாக செய்துமுடிக்கமுடியும்.
ChatGPTயால் பொதுமக்களுக்கு வேலை இழப்பு எனும் பாதிப்புஏற்படுமா?
தற்போதையை நிலையில ChatGPT ஆனது வேலைகளை மனிதர்களிடமிருந்து பறிக்குமா என்பதை கணிக்க இயலாது.ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் என்பவர் கடந்த ஏப்ரல் 2023மாதத்தில் வெளியிடட அறிக்கை ஒன்றில், மனிதர்களின் வேலைச் சுமைகளில் கால்பகுதி முதல் அரைபகுதி வரை generative AI மூலம் தானியக்கமாக்கப்படலாம் என்று கூறுகிறார். ஆயினும் அந்த வேலைகள் மறைந்துவிடும் என்று அர்த்தமல்ல என்று ஒரு நிதி நிறுவனம் குறிப்பிடுகிறது – அதற்கு பதிலாக, பெரும்பாலானவை “ஓரளவு மட்டுமே தானியக்கத்திற்கு உள்ளாகும்” – மேலும் இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% வரை அதிகரிக்க வழிவகுக்கும்என்றும் கூறுகின்றது.
திரும்பத் திரும்ப வரும் அல்லது மிகவும் குறிப்பிட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட பணிகளை generative AI ஆனது செயற்படுத்திடுவிடும் என, சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகளின் எமரிட்டஸ் பேராசிரியர் ஸ்டீவன் மில்லர்,கூறுகின்றார்.
பொதுவாக எந்தவொரு புதிய பெரிய தொழில்நுட்ப மாற்றத்தையும் உருவாக்கி வெளியிடும்போது அதனால் நமக்கு பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமோ எனும் பயமும் குழப்பம் ஏற்படுவதை நாம் காணலாம்.உண்மையில் ChatGPT இன் வருகையானது வேறுபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும். குறைந்தபட்சம், ChatGPT போன்ற AI ஐத் தூண்டுவதற்கும், பயிற்சி செய்வதற்கும், தணிக்கை செய்வதற்கும் ஆட்கள் தேவைப்படுவார்கள். பெரும்பாலும், சில பணிகள் மாறினாலும் மற்றவை மாறாததால் பயம்கொள்ளத்தேவையில்லை,
சில வல்லுநர்கள் AI இன் தற்போதைய அலையை இணையபயன்பாட்டின் துவாக்க நாட்களைப் போலவே குறிப்பிடுகின்றனர். தொழில்நுட்ப வரம்புகள் இன்னும் உள்ளன, மேலும் தானியங்கிசெயல்கள் மூலம் எத்தனை வேலைகள் இழக்கப்படும் என்பது பற்றிய சில மதிப்பீடுகள் கடந்த காலத்தில் மிகைப்படுத்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வன்பொருள் வரம்புகள், செலவுகள் குறித்து AI தொழில் அறிந்திருக்க வேண்டும் என்று IEEE சுட்டிக்காட்டுகிறது. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பெரும் சதவீதத்தை மாற்றுவதற்காக AI சேவைகளில் போதுமான பணத்தை செலவழிப்பதை நடைமுறையில் காண முடியாது. ChatGPT ஐ செயல்படுத்துகின்ற பயனாளர்கள் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் அதிகபட்சமாக 25 GPT-4 வினவல்களை செய்யலாம், என IEEE சுட்டிக்காட்டுகிறது.
சில வேலைகளில், AI முதல் வரைவின் தேவையை நீக்கலாம் என்று MIT தொழிலாளர் பொருளாதார பேராசிரியர் டேவிட் ஆட்டோர் கூறுகின்றார். ஒரு மனிதன் ChatGPT இன் உரை வெளியீட்டை தமக்கு பொருத்தமானதாக மாற்றியமைக்க வேண்டும், ஒரு தனித்துவமான கோணத்தில் அல்லது மிகவும் மாறுபட்ட சொற்களில் சக மனிதர்கள் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறுகொடுக்க வேண்டும், ஆனால் ChatGPT ஆனால் ஒரு உரையாடல் அல்லது வலைப்பதிவு இடுகையின் வெற்று எலும்புகூடுகளின் பதிப்பை மட்டுமே எழுத முடியும் என்பதே உண்மையான கள நிலவராகும்.
ChatGPT பற்றிய நெறிமுறை தனியுரிமை கவலைகள்
AI பூமியைக் கைப்பற்றுவது பற்றிய அறிவியல் புனைகதைகளால் ஈர்க்கப்பட்டு, தொழில்நுட்பத்தில் சில உயர்மட்ட வீரர்கள் AI க்கு அதிக கட்டணமற்ற கட்டுப்பாட்டைக் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மார்ச் 22, 2023 அன்று, எலோன் மஸ்க் , போன்ற பலர் கையெழுத்திட்ட ஒரு மனுவில்,திறந்த கடிதத்தில், கூடுதல் பாதுகாப்புகள் கட்டமைக்கப்படும் வரை பெரிய அளவிலான AI இன் வளர்ச்சியை இடைநிறுத்தம் செய்திடுமாறு நிறுவனங்களை வலியுறுத்திடுகின்றது.
AI ஐப் பயன்படுத்தும் போது கேட்க வேண்டிய நெறிமுறைக் கேள்விகள்
தருக்கபடிமுறை மூலம் உருவாக்கப்பட்ட எழுதப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள் பற்றிய கேள்விகள் ChatGPT ஆல் எழுகின்றது. AI ஆல் உருவாக்கப்பட்ட இடுகைகள் தெளிவாகக் குறிக்கப்பட வேண்டும், ஆனால் மின்னஞ்சல்கள் போன்ற சாதாரண தகவல்தொடர்புகளைப் பற்றிய விவரம்யாது? பணியிடத்தில் ChatGPT அல்லது பிற AIஐப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வணிகநிறுவனங்களின் தலைவர்கள் எப்போது நிறுவுகைசெய்திட வேண்டும்.
OpenAI அதன் தயாரிப்புகள் சட்ட அமலாக்க அல்லது உலகளாவிய அரசியலில் முடிவுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்று எச்சரிக்கிறது. உலகளாவிய மேலாதிக்கத்தை விட தனியுரிமை என்பது மிகவும் முக்கியமாகும், இத்தாலி நாடானது ChatGPT ஐ தடை செய்ய வழிவகுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான தனியுரிமை விதிகளுக்குள் ChatGPT செயல்பட அனுமதிக்கும் வழியைக் கண்டறிய விரும்புவதாக OpenAI கூறியுள்ளது.
OpenAI இன் புதிய தனியுரிமை புதுப்பிப்பு பயனாளர்கள் பயிற்சி தரவிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள அனுமதிக்கிறது
ஏப்ரல் 25, 2023 அன்று, OpenAI ஆனது அரட்டை வரலாறு, பயிற்சி அமைப்பைச் சேர்த்துள்ளதாக அறிவித்தது, இது பயனர்கள் தங்களின் ChatGPT அரட்டை வரலாற்றை முடக்க அனுமதிக்கிறது, மேலும் OpenAI இன் பெரிய மொழி மாதிரிகளின் எதிர்கால பதிப்புகள் அந்த உரையாடல்களில் பயிற்சி பெறுவதைத் தடுக்கிறது. இந்த வாய்ப்பினைக் கண்டறிய, நம்முடைய மின்னஞ்சல் முகவரியாகக் காட்டப்படும் நம்முடைய கணக்கின் பெயரைக்சொடுக்குக.பின்னர் Settings > Data Controls > Chat History & Training என்றவாறு தேர்ந்தெடுத்திடுக.
OpenAI இன் ChatGPT ஐப் பயன்படுத்தி TechRepublic திரைபடபிடிப்பு.
தற்போது, இந்த அமைப்பு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், அதிக இயல்பான , பயனுள்ள பதில்களை உருவாக்குவதற்குப் பயிற்றுவிப்பதற்காக பயனர் தரவு AIக்கு மீண்டும் அளிக்கப்படும்.
பயிற்சித் தரவுகளிலிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை OpenAI ஆனது வடிகட்டுகிறது, OpenAI ஆனது Bloombergஇடம் பின்வருமாறு கூறியது. ஏப்ரல் 2023 நிலவரப்படி, பயனர்கள் தங்கள் ChatGPT அரட்டைகளின் நகலைப் பதிவிறக்கம் செய்து, அவர்கள் தயாரித்த பயிற்சித் தரவைப் பார்வையிடலாம். OpenAI ஆனது ஒரு நிறுவன சந்தா திட்டத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது, இதில் பயனர்களின் தரவு இயல்பாக பகிரப்படாது.
ChatGPTயின் போட்டியாளர்கள் யார்?
ChatGPT இன் முதன்மை போட்டியாளர்கள் Google இன் Bard,, Baidu’இன் Ernie, ., DeepMindஇன் Sparrow , Metaஇன் BlenderBot. ஆகியவைகளாகும்
Google’s Bard
இது ChatGPTயின் முக்கிய போட்டியாளராகும், இது கூகுளின் AI உருவாக்குகின்ற AI அரட்டைதளம்(chatbot) ஆகும். Bardஇன் அரட்டை செயலிமுயற்சிக்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திகொள்வதற்கான காத்திருப்புப் பட்டியலில் சேர வேண்டும்.
ஆயினும் தற்போது Google’s Bardஐ தேடுதலில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. ChatGPT உடன் ஒப்பிடுகையில், Google’s Bardஆனது உரைநடையை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றது, இதனால் ஒரு மனிதன் இயல்பாக பேசும்போது கேட்கூடிய. , எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க முடியாது. ஆயினும் Bardஐ உரையாடல் பயன்பாடுகளுக்கான கூகிளின் மொழி மாதிரியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித்திறன் மென்பொருளுக்கு அரட்டை செயல்பாடுகளை வழங்குவதில் மைக்ரோசாப்ட் இப்போது முன்னணியில் இருந்தாலும், அதன் தேடுபொறி Bingஇன் அடிப்படையில் நிறுவனம் பின்தங்கியுள்ளது. Bingஇன் தேடுதலில் generative AI ஐ சேர்க்கும் மைக்ரோசாப்டின் முடிவிற்கு ஒரு போட்டியாளரை விரைவில் வெளியிடுவதற்கு கூகுள் முடிவெடுத்துவிடும் என எதிர்பார்த்திடலாம் (இதற்கிடையில், ChatGPTஆனது Bingஇற்கு தினசரி 100 மில்லியன் பயனர்களை அடைய உதவியுள்ளது.)
Baidu’இன் Ernie
சீன தேடுபொறியான Baidu ஆனது Ernie என்ற அரட்டைத்தளத்தினை(chatbot) விரைவில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. Baidu மார்ச் 16,2023 அன்று வரவிருக்கும் மாற்றத்தை அறிவித்தது, அந்த நேரத்தில் ஆரம்பம் முதலீட்டாளர்களுக்கு பெரி. ஏமாற்றத்தை அளித்தது.
DeepMindஇன் Sparrow
Alphabet எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான DeepMind எனும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமானது OpenAIஉடன் போட்டியிடுகிறது. இரண்டு அமைப்புகளும் அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் கணிசமாக வேறுபடுகின்றன. DeepMindஆனது ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது, மிகமுக்கியமாக பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற அளவிற்கான இதனுடைய அரட்டைத்தளத்தினை(chatbot) இது இன்னும் வெளியிடவில்லை. DeepMindஆனது Sparrowஐக் கொண்டுள்ளது, இது AI க்கு “உதவிகரமான, சரியான, பாதிப்பில்லாத வகையில்” தொடர்பு கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அரட்டைத்தளத்தினை(chatbot) கொண்டுள்ளது.
Metaஇன் BlenderBot
Meta ஆகஸ்ட் 2022 இல் BlenderBot ஐ வெளியிட்டது. Facebookக்குப் பின்புலத்தில் உள்ள நிறுவனத்தின் BlenderBot என்ற முன்மாதிரியானது அரட்டைதளத்தில் அதிக கவனம் செலுத்துகிறது, உரையின் முழு பத்திகளைக் காட்டிலும் குறுகிய, உரையாடலை.யும் கேள்வி பதில்களையும் வழங்குகிறது.
Apple பற்றி என்ன செய்தி?
நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி Apple தன்னிடம் உள்ள தொழில்நுட்பத்தை, குறிப்பாக Siriஐ , ChatGPT இக்கு போட்டியாளராக உருவாக்குகின்ற பணிக்காக அதனை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இறுதி தயாரிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றிய கூடுதல் தகவல் தற்போதுவரையில் சரியாக தெரியவில்லை.
வணிகத்தில் AI இன் எதிர்காலம்
எதிர்காலத்தில் இணையத் தயாரிப்புகளில் ChatGPTஆனது பொதுவானதாக இருக்குமா அல்லது அதிக பயன்பாட்டுக்கான தேடலில் எப்போதும் போன்ற புதியதொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பாக இருக்குமா?
பொருத்தமற்ற உள்ளடக்கம் அல்லது தவறான “மாயத்தோற்றங்கள்” பற்றிய பொறுப்புத் துறப்புகளை உள்ளடக்கிய OpenAI உடன், இன்று அதன் “புலனாய்வு” தெளிவாக இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளது. ChatGPT ஆனது சொற்களை ஒரு ஒத்திசைவான வரிசையில் வைக்கலாம், ஆனால் அது உண்மையில் மிகச்சரியாக பொதுமக்கள் விரும்புகின்றவாறு இருக்குமா .
இதற்கிடையில், வைரலாகும் AI அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல அல்லது கெட்ட செய்தியாக இருக்கலாம். GPT-4 அறிவிப்புக்குப் பிறகு மைக்ரோசாப்டின் பங்கு விலை உயர்ந்தது, அதே நேரத்தில் Bard இன் ஒரு மாதிரிசெயல்பாட்டில் மோசமாக செயல்பட்டதால் கூகிளின் பங்கு குறைந்தது.
OpenAIக்கு அடுத்தது என்னவாகும்?
இப்போதைக்கு, OpenAI ஆனது GPT-5 க்கு பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கூறுகிறது, இது இன்றைய மாதிரிக்கு அடுத்ததாக இருக்கலாம்.- அதன் முந்தைய வரைவு 5வது தலைமுறை வரவிருக்கிறது என்று கூறியது; ஆனால்தற்போது”ஜிபிடி-4இல் அனைத்து வகையான பாதுகாப்பு சிக்கல்களையும் தீர்வுசெய்தவதற்கு முக்கியமான மற்ற செயல்கள் செய்யப்படுகின்றன.
அதனால் “சில காலத்திற்கு” GPT-5 பதிப்பு வெளியீட்டை யாரும் எதிர்பார்க்கமுடியாது