a.Corona Tracker கோரானா பயனப்பாதைகண்டுபடிப்பாளர்
கோரானா நச்சுயிரி பயன்பாடானது iOS செயல்படும் கைபேசிகளில் தகவல் கள் அனைத்தையும் பெறுவதற்கான ஒரு கட்டணமற்ற கட்டற்ற பயன்பாடாகும் இதனுடைய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
கோரானா நச்சுயிரி தொடர்பான மிகச்சமீபத்திய அனைத்து தரவுகளையும் காண்பிக்கும் மேலும் அந்த தரவுகளை தானாகவே புதுப்பிக்கப்பட்டு காண்பிக்கும். இரண்டு நிலை விவரங்களுடன் விநியோக வரைபடமாக திரையில் தோன்றிடும் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளை பெரியதாக காண்பிக்கும் குறைவாக பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரங்களை குறைத்து சிறியதாக காண்பிக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரங்களை பெரியதாகவும் அதற்கான நாம் விரும்பிடும் வகையிலான விளக்கப்படங்களையும் காண்பிக்கும் பாதிக்கப்பட்ட
அனைத்து நாடுகளையும் அவற்றின்பாதிக்கப்பட்ட மாநிலங்கள் நகரங்கள் வாரியாக விளக்கபடத்தினை காண்பிக்கும் மேலும் நாள்வாரியாக பாதிக்கப்பட்ட விவரங்களை காலவரிசை விளக்கபடமாக காண்பிக்கும்
அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளை பற்றிய அனைத்து விவரங்களின் விளக்கப்படங்களையும் காண்பிக்கும்
தேவையெனில் மடக்கை அட்டவணையை பயன்படுத்திகொள்ளுமாறான வாய்ப்பினையும் இது வழங்குகின்றது இன்றைய நாளின் உலகளாவிய இந்த நச்சுயிரியின் தாக்குதல் விலரங்களின் புள்ளிவிவரங்களுக்கான வரைபடங்களை இது வழங்குகின்றது
இதிலுள்ள சிவப்பு வண்ண அளவுகோலின் வாயிலாக கூடுதலாக கொரானாநச்சுயிரியின் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கையை பிரதிபலிக்கின்றது
உறுதிப்படுத்தப்பட்ட, மீட்கப்பட்ட, இறப்புகளின் நபர்களின் எண்ணிக்கை அடங்கிய. விவரங்களை புள்ளிவிவரமாக வழங்குகின்றது
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்வதற்காக
gitlab.com/AuroraOSS/coronastats-worldwideஎனும் இணைதள முகவரிக்கு செல்க
b.கொரானா புள்ளிவிவரம் (CoronaStats)
உலகமுழுவதுமான கொரானநச்சுயிரியினால் பாதிக்கப்பட்டவிவரங்களை புள்ளியியில் தரவாக வழங்குவதற்காக தயாராக இருப்பதே கொரானா புள்ளிவிவர ம் CoronaStatsஎனும் பயன்பாடாகும்
இதுவும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும்.இது நாள்வாரியாக மாநிலம் வாரியாக நாடுகள் வாரியாக நாம் விரும்பியவாறு புள்ளிவிவரங்களை வழங்கும் திறன்மிக்கது இது அனைத்து திறன்பேசிகளிலும் செயல்படும் திறன் மிக்கது .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்வதற்காக gitlab.com/AuroraOSS/coronastats-worldwideஎனும் இணை.தள முகவரிக்கு செல்க