ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்பன போன்ற சமுதாய வலைபின்னல்கள் நமக்கு போதுமானவையாக இல்லை. இன்னும் மேலும் சாதிக்கவேண்டும் என விரும்பினால் OSSN என சுருக்கமாக அழைக்கப்படும் கட்டற்ற சமுதாயவலை பின்னல்(Open Source Social Network) எனும் கருவியைகொண்டு நாம் விரும்பியவாறான, மிகச்சிறந்த, நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை, நாமே வடிவமைத்து உருவாக்கி கொள்ளமுடியும். இவ்வாறான நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை, உருவாக்குவதற்கென தனியாக குறிமுறைவரிகள் எதுவும் எழுதவேண்டிய அவசியமில்லை.
இதை கட்டமைவு செய்வது, பராமரிப்பு செய்வது, பிற்காப்பு செய்வது, ஆகிய பணிகளுக்காகவென நமக்கு தனியான தொழில்நுட்பமோ, அனுபவமோகூட தேவையில்லை. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக, மிகஎளிதாக AppStore ஐ அனுகமுடியும். விண்டோ செய்தியாளர் ஆண்ட்ராய்டு கைபேசி பயன்பாடுகள் போன்றவை கட்டணமில்லாமல் கிடைக்கின்றன. இதில் இணையும் நபர்கள் தங்களுடைய சொந்த நண்பர்களின் குழுவை தாமே எளிதாக உருவாக்கி கொள்ளமுடியும்.
அதுமட்டுமல்லாது படங்களின் தொகுப்பு போன்ற சமுதாய வலைபின்னலின் அனைத்து பணிகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். நாம் விரும்பினால் மேலும் கூடுதலான உள்ளடக்கங்களை இதில் சேர்த்து கொள்ளமுடியும். இது மிகவிரைவாக திறனுடன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி செயல்படுகின்றது. ஆங்கிலம் மட்டு மல்லாது நாம் விரும்பும் எந்தவொரு மொழியிலும்செயல்படுமாறு இதனை கட்டமைத்து கொள்ள முடியும் .இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக, நம்முடைய சொந்த சேவையாளர் கணினியெனில் 512MB ரேமும் , 10GB வன்தட்டும் அதனோடு JSON , XML ஆகியவற்றை அதரிக்ககூடிய PHP பதி்ப்பு 5.6உம் அதற்குமேலும் கொண்டது அவ்வாறே MYSQL 5 உம் அதற்குமேலும் கொண்டது 1v CPU உடன் x64 bits. சேவையாளர் இயக்கமுறைமை ஆகியவை போதுமானவையாகும். இந்த கட்டற்ற பயன்பாட்டினை www.opensource-socialnetwork.org/download எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய சொந்த வலைபின்னலை உருவாக்கி பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்-படுகின்றது