தற்போது பயன்பாட்டில் உள்ள Dayon என்பது கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூர உதவித்தீர்வாகும் .இது பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென பதிவுஎதுவும் செய்யத்தேவையில்லை , தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் கட்டணம்எதுவுமில்லாமல் கிடைக்கின்றது
தொலைநிலை உதவி சேவை
இது தொலைதூரத்திலிருந்து கணினியின் செயலை காணவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்ற ஒருதிறமூல, குறுக்கு-தள JAVA தீர்வாகும். இந்த அர்த்தத்தில், இது ஏற்கனவே இருக்கின்ற பல்வேறுதொலைநிலை மேசைக்கணினி தீர்வுகளைப் போன்றே உள்ளது.ஆனால் இது அவைகளைவிட மதிப்புமிக்ககூடுதலான சில வசதிகளையும், கொண்டுள்ளது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
எளிய அமைப்புமுறை
கணினி உலகில் மிகவும் புதியவர்களுக்காகவே இது(Dayon) அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. எந்தவொரு கணினியையும் மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டி வலைபின்னல் அமைப்பு எதையும் கட்டமைக்க வேண்டிய அவசியம் இல்லை (அதாவது ஃபயர்வால் அமைப்பு இல்லை, திசைவி உள்ளமைவு இல்லை, NAT அமைப்பு இல்லை). இது கண்காணிப்பு கணினியுடன் இணைக்கின்றவொரு வாடிக்கையாளராக மட்டும் அங்கு செயல்படுகிறது.
குறைந்த வலைபின்னல் அலைவரிசை
இது(Dayon) இணையத்தில் நிகழ்நேர பட்டறிவை வழங்குகின்ற வலைபின்னல் பயன்பாட்டைக் குறைக்க சுருக்கப்பட்ட , தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட சாம்பல் வண்ண (256 நிலைகள் வரை) உருவப்படங்களை அனுப்புகிறது. வெவ்வேறு பட்டிகள், உருவப்பொத்தான்கள் , கணினி அமைப்புமுறை ஆகியவற்றினைக் கண்டறிதல் போன்றவற்றைக் கண்காணிக்கவும் விளக்கமளிக்கவும் அந்தப் உருவுப்படங்களே போதுமானவைகளாகும்…
பன்மொழி வரைகலைபயனர்இடைமுகப்பு(GUI (de/en/es/fr/It/ru/tr/zh)), பாதுகாப்பான, மறைகுறியாக்கப்பட்ட தொடர்பு (TLS). மிகக் குறைந்த அலைவரிசை பயன்பாடு, விண்டோ, லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் இயங்குகின்ற திறன், மிக எளிமையான உள்ளமைவு, பயன்படுத்தத் தயார் நிலையிலான binary தொகுப்புகள் ஆகியவற்றுடன்,இது வணிகப் பயன்பாட்டிற்கு கட்டணத்துடனான, ஒரு திற மூல பயன்பாடாகும்
விரைவானதுவக்கம்
பொதுவாக, பயனாளர் தற்போது பயன்படுத்திவருகின்ற Skype, செல்பேசி, தமக்குப் பிடித்த IM ஆகியவை அல்லது தாம் விரும்பும் கருவியைப் பயன்படுத்தி இந்தஉதவியாளருடன் தொடர்பு கொள்ள இது அனுமதிக்கின்றது. பின்னர் இது செயல்படத் துவங்குகிறது! இந்த கருவியின்மூலம் உதவிபெறுகின்ற கணினித் திரையை நேரடியாக நாம் காணுமாறு அனுமதிக்கிறது.
. இந்தபயன்பாடு முற்றிலும் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் , ரஷ்ய ஆகியமொழிகளில் செயல்படுகின்ற திறனுடன். கட்டமைக்கப் பட்ட பயனர் மொழியை கொண்டுள்ளது பயனாளரின் மொழி மேலே கூறிய இந்நான்கு மொழிகளுக்குள் எதுவுமில்லை என்றால், இது ஆங்கிலத்தில் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.
கவனித்திற்கு: இந்த கட்டுரையானது மிக சமீபத்திய பதிப்பைக் குறிக்கிறது.
உதவியாளர்கணினியை கட்டமைத்தல்
Dayon! Assistedஎன்பது வெளி உலகத்தை அதாவது தான் செயற்படுகின்ற சாதனத்தி லிருந்து வேறுொரு கணினியின் திரையின் காட்சியை நேரடியாககாண அழைக்கின்ற ஒரு வாடிக்கையாளர் பயன்பாடாகும்,இதனை நி்றுவுகை செய்வதற்காகவென தனியாக வலைபின்னலின் உள்ளமைவு எதுவும் தேவை யில்லாமலேயேஇது செயல்படுகிறது.
இந்த டேயோன்உதவியாளர்(Dayon! Assisted) எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் இதனை பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திடுக! . பின்னர் இந்த பயன்பாட்டினைஇயக்கத் தொடங்குக! (இந்த பயன்பாடு மேசைக்கணினியில் செயல்படுத்திடுவதற்காகவென தனியாக இதனுடைய ஒரு உருவப்பொத்தானை அமைத்துகொள்வது நல்லது)பிறகு “play” எனும் பொத்தானை சொடுக்குக .
உடன் விரியும் திரையில் இந்த உதவியாளரால் தெரிவிக்கப்பட்ட டோக்கனை உள்ளிட்டு OK என்ற பொத்தான சொடுக்குதல் செய்து இதன் உதவியை ஒப்புக் கொள்க:
(ஏற்கனவே இந்த உதவியாளருடன் சமீபத்தில் இணைந்திருந்தால்,இந்த புலத்தை காலியாக விட்டிடலாம்)
மாற்றான செயல் (டோக்கன் இல்லாமல் இணைத்தல்): OK என்ற பொத்தான சொடுக்குதல் செய்து ஒப்புக்கொண்டவுடன் இந்த உதவியாளரால் தெரிவிக்கப்பட்ட IP முகவரி, வாயில் (port) எண் ஆகிய இரண்டையும் உள்ளிடுக
(இவ்விரண்டு உள்ளீட்டு புலங்களையும் இருமுறை சொடுக்குதல் செய்வதன் மூலம் இந்த உதவியாளரை நீக்கம்செய்திட முடியும்)
உடன் நம்முடைய கணினியின் திரையைக் கண்காணிக்கின்ற இந்த உதவியாளருடன் விரைவாக இணைக்கப்படுவோம்.
உதவியாளர்கணினியை நிறுவுகைசெய்திடுதல்
டேயோன்! உதவியளர்:ஆனது ஒரு பொதுவான சேவையகப் பயன்பாடாகச் செயல்படுகிறது மேலும் நம்முடைய வலைபின்னலிலுள்ள ஒருகணினியை வேறொரு சாதனத்திலிருந்து நேரடியாககாணுமாறு நிறுவுகைசெய்திட வேண்டும்.
இயல்பாக, சேவையகம் Port 80800 ஐ கோருகிறது, ஆனால் நமக்குத் தேவையெனில் இதை மாற்றியமைத்திடலாம். இதன்பதிப்பு 12 முதல், இந்த பயன்பாடானது தொடர்புடைய தொடர்புவாயிலின் பகிர்தல் விதியை சுதந்திர மானதாக உருவாக்குகிறது. இதற்கு முன்நிபந்தனையாக UPnP செயல் படுத்தப் படுகின்றது. அவ்வாறு இல்லையெனில், திசைவியில் உள்ள NAT வழியான வாயிலை (TCP) தொடர்புடைய கணினிக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் மிகவும் பொதுவான வழிசெலுத்தி மாதிரிகளுக்கான வழிகாட்டியை படிப்படியாக அறிந்துகொள்வதற்கு portforward.comஎனும் இணையதளபக்கத்தைப் பார்வையிட்டு சரிபார்த்துகொள்க.
வாய்ப்புகளின்த்தேர்வு: உள்வரும் இணைப்புகளுக்கான வாயிலைச் சரிசெய்தல்: ( இதன் இடதுபுறம்UpnPஉடன் இணைந்த வலைபின்னல் அமைப்புகள் :வலதுபுறம் UPnP இல்லாத வலைபின்னல் அமைப்புகள் ஆகிய இருவாய்ப்புகளை கொண்டுள்ளது )
ஏதேனுமொரு விசையைஅல்லது சுட்டியைக் சொடுக்குதல் செய்வதன் மூலம் அணுகல் டோக்கனை உருவாக்கிடுக:
சுட்டியை சொடுக்குதலின் மூலம் உருவாக்கப்பட்ட அணுகல் டோக்கனை நகலகத்திற்கு நகலெடுத்திடுக:
அவ்வளவுதான் – இந்த டோக்கனின் விவரத்தினை உதவியாளர்களுக்கு மின்னஞ்சல், IM அல்லது செல்பேசி மூலம் தெரிவித்திடுக.
மாற்று மாறுபாடு (டோக்கன் இல்லாமல் இணைத்திடுக): உதவியாளருடன் இணைக்க, உதவியாளருக்கு எந்த IP முகவரியைக் கொடுக்க விரும்புகின்றோம் என்பதை தீர்மானிக்க வேண்டும்; பொதுவாக பொது IP முகவரியை கொடுக்க வேண்டும். ஆனால் வளாகஇணைப்பில் பரிசோதனை செய்ய வேறு ஒன்றைப் பயன்படுத்த விரும்பலாம். பின்னர்விரிகின்ற பட்டியின் மூலம் பொது IP முகவரியை மீட்டெடுக்கலாம்:
பட்டியில் உண்மையான IP முகவரி வாயில் (port) எண் ஆகியஇரண்டிையும் நகலகத்திற்கு நகலெடுக்க ஒரு உருப்படி உள்ளது. பின்னர் அதை அரட்டை அமர்வில் (எ.கா., ஸ்கைப்) அல்லது மின்னஞ்சலில் ஒட்டுவது எளிது.
இந்த IP முகவரி, கிடைக்கக்கூடிய அனைத்து பிணைய இடைமுகங்களிலும் கோரப்படுவதால், உதவியாளர் பயன்பாட்டிற்கு இந்த IP முகவரி தேவையில்லை என்பதை நினைவில் கொள்க; ஆனால்அதை உதவியாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
அவ்வளவுதான் இதனுடையபிணைய உள்ளமைவைப் பற்றிய செயலாகும் ;
ஆனால் முதலில் இதனுடைய மேம்பட்ட உள்ளமைவு வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
உதவியாளர் நிறுவகையில்மேலும் சில செயல்கள்
உதவியாளரானது திரைபடப்பிடிப்பு எவ்வாறு செய்யப் போகிறது என்பதை நிறுவைகசெய்திட அந்தப் படிவத்தைப் பயன்படுத்திகொள்க; இரண்டுதிரைபட பிடிப்புகளுக்கு இடையே (மில்லி விநாடிகளில்) நேரத்தையும் (aka. tick) சாம்பல் வண்ண நிலைகளின் எண்ணிக்கையையும் கட்டமைக்கலாம்.
கோப்புகளைசுருக்கியைமைத்தல் வழிமுறையில் கட்டமைக்கலாம்; அதற்காக ZIP , XZ.ஆகிய இரண்டு வழிமுறைகள் உள்ளன: XZ ஒரு (அதிக) சிறந்த சுருக்க விகிதத்தைப் பெறுகின்றது, ஆனால் இது ZIP ஐ விட மிகவும் சிக்கலானது , இது JAVA இல் செயல்படுத்தப்படுவதால் அதிக CPU , RAM தேவைப்படுகிறது (JDK இல் சில சொந்த குறிமுறைவரிகளைப் பயன்படுத்தி ZIP செயல்படுத்தப்படுகிறது).
கூடுதலாக, ஒரு தற்காலிகநினைவகம் பயன்படுத்தப்படுகிறது, இது பட்டியைத் திறக்கும்போதும் வழிசெலுத்தும்போதும் அதே bitmapஐ அதனளவின பல மடங்கு உயர்த்தி அனுப்பாமல் இருக்க அனுமதிக்கிறது (அதாவது, பட்டியின் கீழ் உள்ளவை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அனுப்பப்படாது). திரை பல பகுதிகளாக(tiles ) பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றது. தற்காலிக சேமிப்பில் உள்ள அதிகபட்ச பகுதிகளை(tiles ) வரையறுக்க வேண்டும். ஒரு பகுதி (tile) தற்போது 32×32 பிக்சல்கள் 256 நிலைகளில் உள்ளது, அதாவது 1K அளவில்.
தொடர்ந்து play எனும் பொத்தானைக் சொடுக்குதல் செய்த பிறகு (இடமிருந்து முதல்) உதவியாளர் உள்வரும் இணைப்புகளை ஏற்கத் தயாராக உள்ளார்:
இப்போது உதவியாளரை இணைத்திடுமாறு கோரமுடியும். ஆயினும்உள்வரும் இணைப்பை ஏற்கும்படி விரைவில் கோரப்படுவோம்:
இப்போது இணைக்கப்பட்டு தொலைநிலையிலான கணினியை நேரடியாக கண்காணித்திட துவங்குகின்றது.
உதவியாளரானது மேசைக்கணினி சாளரத்தின் திரைக்கேற்ப பொருந்தவில்லை எனில், அதன்அளவைக் குறைத்து அல்லது கூட்டி சரிசெய்திடமுடியும்:
முன்னிருப்பாக, தொலைநிலை கட்டுப்பாட்டு பயன்முறை முடக்கப்பட்டுள்ளது; பின்வரும் உருவப்பொத்தானைப் பயன்படுத்தி அதை செயல்படுத்துதல் (on) ,செயலைமுடக்குதல் (off) செய்யலாம்:
மேம்பட்ட செயலிகள்
முன்நிபந்தனைகள்: பின்வரும் செயலிகளுக்கு உதவிசெய்வதற்காகவென ஒரு நிறுவுகைசெய்யப்பட்ட இணைப்பு தேவைப்படுகிறது.
நகலகபலகை பரிமாற்றம்(Clipboard transfer)
மேல்நோக்குஅம்புக்குறிஅல்லது கீழ்நோக்குஅம்புக்குறி பொத்தானைக் சொடுக்குதல் செய்வதன் மூலம், உதவியாளரின் நகலகபலகையின் உதவிக்கு (மேல்நோக்குஅம்புக்குறி(up)) அல்லது உதவியாளரின் நகலகபலகைக்கு (கீழ்நோக்குஅம்புக்குறி(down)) மாற்றி கொள்ளலாம்.
தற்போது ஆதரிக்கப்படுகின்ற பரிமாற்றங்கள்:
உரை: வளாகத்தில் அல்லது உதவி சாளரத்தில் உரையைத் தேர்ந்தெடுத்து (Ctl + c) ஆகிய குறுக்குவழிவிசைகளை அழுத்துவதன்மூலம் நகலெடுத்திடுக, மேல்நோக்கு அம்புக்குறியை அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை சொடுக்குக . பின்னர், அனுப்பப்பட்ட உரையை வளாகத்தில் அல்லது தொலைநிலை பயன் பாட்டில் (Ctrl + v) ஆகிய குறுக்குவழிவிசைகளை அழுத்துவதன்மூலம் செருகலாம்.
கோப்புகள்: வளாககணினியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளைத் தேர்ந்தெடுத்திடுக அல்லது உதவியாளரின் சாளரத்தில் (Ctl + c) ஆகிய குறுக்குவழிவிசைகளை அழுத்துவதன்மூலம் நகலெடுத்திடுக, மேல்நோக்கு அம்புக்குறியை அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை சொடுக்குக . அதன் பிறகு, கோப்பு(களை) தேவையான இலக்கில் வைத்து(Ctrl + v) ஆகிய குறுக்குவழி விசைகளை அழுத்துவதன்மூலம் செருகலாம்.
எச்சரிக்கை: display/windows manager , JDK ஆகியவற்றின் கலவையைப் பொறுத்து, நகலக பலகையின் உள்ளடக்கம் பெறுநர்களின் நகலகபலகையில் நகலெடுக்கப்படாது. எனவே (Ctrl + v) ஆகிய குறுக்குவழிவிசைகளை அழுத்துவதன் மூலம் ஒட்டுவதால் எந்தப் பலனும் இல்லை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உள்ளடக்கம் மாற்றப்படாது .அதன்பின்னர் மாற்றப்பட்ட நகலகபலகையின் கோப்புகளை அங்கு காணலாம்.
ஒரு விண்டோ விசையின் அழுத்தத்தை பரிமாறுதல்
இதற்காகவிண்டோ விசையை அழுத்தி அதன்செயலைஅனுப்ப, கட்டுப்பாட்டு உதவியாளர்பலகத்தில் உள்ள விண்டோ முத்திரையைசொடுக்குதல் செய்க:
மீண்டும் சொடுக்குதல் செய்யும் வரை இந்த விசை அழுத்தப்பட்டிருக்கவேண்டும். இதன் மூலம் விண்டோவின் குறுக்குவழிவிசைகளைகளை அனுப்ப முடியும்.
எடுத்துக்காட்டாக, உதவிப் பக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களின் அளவையும் குறைக்க வேண்டும் என்றால், விண்டோ முத்திரையை சொடுக்குதல் செய்தபின்னர், விசைப்பலகையில் M விசையை அழுத்திய, பின்னர் விண்டோ முத்திரையைமீண்டும் சொடுக்குக .
கட்டளை வரி அளவுருக்கள் வழியாக உதவியாளரின் தானியங்கி இணைப்பு
புரவலர் பெயர் அல்லது ஐபி முகவரி, உதவியாளரின் வாயில் எண் ஆகியவை கட்டளை வரி அளவுருக்கள் வழியாக அனுப்பலாம்:
dayon_assisted.sh ah=example.com ap=4242 (Linux/macOS)
dayon.assisted ah=example.com ap=4242 (Linux Snap)
./assisted.sh ah=example.com ap=4242 (Linux Quick Launch)
java -jar dayon.jar ah=example.com ap=4242 (Windows/Linux/macOS)
assisted.exe ah=example.com ap=4242 (Windows Quick Launch)
உதவியாளர் இந்த அளவுருக்களுடன் தொடங்கப்பட்டால், வேறு எதையும் கோராமல் நேரடியாக கொடுக்கப்பட்ட புரவலருடன் இணைக்கின்றது.
உள்ளமைவு கோப்பு வழியாக
பதிப்பு v11.0.5 முதல், இணைப்பு அளவுருக்கள் YAML கோப்பில் சேமிக்கப்படுகின்றது. இதன் எளிமையான கட்டமைப்பி்ற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
host: “an.example.com”
port: 8080
இந்தக் கோப்பை assisted.yaml என்ற பெயரில் டேயோன் உதவியாளரில் சேமிக்கலாம்! முகப்பு அடைவு, பயனர் கோப்பகத்தில் அல்லது அதே கோப்பகத்தில் .jar, resp. .exe போன்ற . பல கோப்பமைவுகளாக இருக்கும் பட்சத்தில் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது முன்னுரிமைக்கும் இந்த வரிசைமுறை பொருந்தும். (இதுவே நமதுமுதல் வெற்றியாகும்)
இதன் செயலின் துவக்கத்திற்குப் பிறகு, இந்த உதவியாளர் தானாக இணைக்கப் படுவதைத் தடுக்க, இந்த assisted.yaml இல்பின்வரும் கட்டளைவரியைச் சேர்க்கலாம்:
autoConnect: false
இது (GPLv3)எனும்உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப் பெற்றுள்ளது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://retgal.github.io/Dayon/index.html/எனும் இணையதள முகவரிக்கு செல்க..