முதல் ஐலக்சி மீட்டப்
‘பா, நானா கட்டிக்க மாட்டேன்னு சொல்றேன், என் ஜாதகத்துல அப்படி இருந்தா அதுக்கு நான் என்ன பண்றது. போன் பண்றப்பல்லாம் இந்த டாபிக் எடுக்காம இருக்க மாட்டீங்களா? வைப்பா போன, நான் அப்புறம் பேசுறேன்’ கார்த்திகா தன் தந்தையிடம் கடுப்பாக பேசிவிட்டு தன் மொபைலை வைத்தாள், ‘என்னடி வழக்கம்போல கல்யாண புலம்பலா?’ இது கார்த்திகாவின் தோழி கயல்விழி, ‘கடுப்பேத்றாங்க, பேசாம எவனாச்சும் கூட்டிட்டு ஓடிடலாமான்னு இருக்கு’ இது கார்த்திகா ‘எத்தனை பேர் உனக்கு ப்ரொபோஸ் பண்ணாங்க, யாரையாச்சும் ஒருத்தன பிக்கப் பண்ணியிருக்கலாம்ல, அத விட்டுட்டு அவங்க கிட்ட எல்லாம் எனக்கு மாமா பையன் இருக்கான்னு பொய் சொல்லிட்டு திரிஞ்ச, இப்ப படு,’ இது கயல் ‘சும்மா இருடி, நீ வேற கடுப்பேத்தாத, எனக்கு உண்மையிலேயே ஒரு மாமா பையன் இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லாமல் இருந்திருக்கும்’ இது கார்த்திகா ‘கிழிஞ்சிருக்கும், எங்க வீட்ல கிழியுதே அப்படி, அதர் சைட் ஆப் த ரிவர் இஸ் ஆல்வேஸ் கிறீன் பேப்’ இது கயல் ‘தத்துவம் சொன்னதெல்லாம் போதும் உன் மாமா என்ன சொல்றாரு, அப்பா பேச்சை மீறி உன்னை கட்டிக்கிட்டா சொத்து போயிடுமோன்னு பயப்படுறாரா?’ இது கார்த்திகா ‘பெரிய மாமாவுக்கு என்ன சின்ன வயசுலருந்தே பிடிக்கும்டி அதனாலதான் அவ்வலவு பிரச்சன நடந்தும் மாமாக்கு வேர ஒரு பொண்ண பாக்கல. பிராப்ளம் இஸ் மை மாம். இந்த முறை மாமா லீவ்ல வீட்டுக்கு வரும்போது ஒன்னு என் அம்மா சம்மதத்துடன் கல்யாணம், இல்லன்னா லீவ் முடிஞ்சு ஜம்முவுக்கு ரிடர்ன் போகும்போது நானும் எஸ்கேப். ஆர்மி கோட்ரஸ்ல மாமாவும் நானும் ஒன்னா வரணும்னு ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்காங்கலாம்’ இது கயல் ‘போகும்போது ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு போ, லிவின் டுகெதர்னு சொல்லிட்டு திரிஞ்ச செருப்படி வாங்குவ’ இரு கார்த்திகா ‘சாட்சி கையெழுத்து போட போறவளே நீதாண்டி, சீக்கிரம் இன்னொரு சாட்சி கையெழுத்தையும் ரெடி பண்ணு’ இது கயல் ‘அசிங்கமா பேசாதடி, வா சாப்பிட போகலாம் பசிக்குது’ கார்த்திகாவும் கயலும் காலை உணவுக்கு கேன்டீன் சென்றனர்.
‘வாட் எ சர்ப்ரைஸ், சார்ட்டடே அதுவுமா ஆபிஸ்ல?’ மதனின் நண்பன் சுரேஷ் கார்த்திகா அமர்ந்திருந்தது கண்டு அருகில் வந்து பேசினான் ‘ஹாய், வாங்க, டேக் எ சீட், போர் அடித்தது அதன் ஆபிஸ் போலாம்னு வந்துட்டோம்’ கார்த்திகா சுரேஷை அமர சொன்னாள் ‘கயல் இது சுரேஷ், மதனோட பிரண்ட்’ கார்த்திகா அறிமுகப்படுத்த ‘மதன்?’ கயல் கேட்க ‘ஐ ஆல்ரெடி டோல்ட் யூ ரைட்? தட் யுனிக்ஸ் கய்?’ கார்த்திகா புரியாமல் திகைக்க ‘ஓ அந்த தேவ்தாஸ்? கல்யாணம் பண்ணிக்க தாடி வளக்குறாரே? சாரி, ஐ மீன், எங்க உங்க பிரண்ட், வரலையா?’ கயல் சமாளிக்க ‘அவன் எங்கயாச்சும் ஒரு மீட்டப்ல மொக்க போட்டுட்டு இருப்பான், மாசத்துல இருக்குற நாலு சார்டடேவும் ஆலு பிஸி, பர்ஸ்ட் சாட்டர்டே எந்த மீட்டப்னு தெறியல, செகண்ட் சார்டடே ஐலக்சி, தேர்ட் சார்ட்டடே மேட்-ராஸ், போர்த் சாட்டர்டே சொன்னைபை’ சுரேஷ் கூற ‘ஐலக்சி தெரியும், மத்த குருப்லாம் இப்பத்தான் கேள்வி படுறேன். நீங்க போகலையா?’ கார்த்திகா கேட்க, ‘நீங்க வேற, அவன் ரூம்ல போடுற மொக்க போதாதா, நம்மாளுதான் ஒரு ஆதிவாசி, எப்ப பாத்தாலும் பிளாக் அண்ட் வொயிட் டெர்மினல்ல இருப்பான், எப்பவாச்சும் படம் பார்க்கறப்ப அவன் லேப்டாப் கலர்புல்லா இருக்கும், ஆனா அங்க போனா இவன விட பெரிய ஆதிவாசிங்கல்லாம் இருக்கானுவ, படத்த கூட ஆஸ்கி கேரக்டர்ல பாக்குறானுவ,’ சுரேஷ் சொன்னதை கேட்டதும் கார்த்திகாவும் கயலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். ‘உண்மையாவா? டெர்மினல்ல படம் பாக்க முடியுமா?’ கார்த்திகா ஆர்வத்துடன் கேட்க ‘இத அவன் கிட்ட கேட்றாதீங்க, அதுக்கு ஒரு ஹிஸ்டரி வெச்சிருப்பான்’ சுரேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கைபேசியில் மணி அடித்தது, மறுமுனையில் தீப்தி கூப்பிட ‘ராட்சஷி கூப்பிட்டா, போல கொண்றுவா, நான் வரேன்’ சுரேஷ் நகர ஆரமிபித்தான்.
இன்று மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை. கார்த்திகா தன் கைபேசியின் மீட்டப் செயலியில் ஐலக்சி மீட்டப் குருப்பின் மீட்டிங் எங்கு எப்பொழுது என்று கண்டு தெரிந்துகொண்டாள். ‘பேப் இன்னைக்கு ஈவினிங் மூணு மணிக்கு எங்கயும் போகாத, நாம IIT போரோம்’ கார்த்திகா கயலிடம் கூற ‘எங்க மீட்டப்பா? ஆள விடு, நான் துங்கனும், வேனும்னா வண்டிய எடுத்துட்டு போ’ கயல் மறுக்க ‘தூங்குறதுலயே இருக்காதடி குண்டச்சி,’ கார்த்திகா கூற ‘ஆமா நா குண்டு, நீ அப்படியே சைஸ் ஜீரோ ஹிப் வெச்சிக்கிட்டு திரியற, நான் குண்டுன்னா நீயும் குண்டுதான்டி,’ கயல் கூற ‘என்ன இப்பவும் அழகா இருக்கன்னு சொல்றவங்க இருக்காங்கடி’ கார்த்திகா கூற ‘அழகுதான், ஆனா ஒல்லியில்ல, உன்ன அழகுன்னு சொன்னவங்களையே வேனும்னா மறுபடியும் கேட்டுப்பாரு’ கயல் வாதாடினாள். ‘நான் போயிட்டு வறேன்’ கார்த்திகா தன் ரூமிலிருந்து கிளம்பினாள்.
IIT மெட்ராஸ் கேம்பஸ், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பில்டிங், ரூம் நம்பர் 3, மதன் உள்ளே வந்து வழக்கம் போல தன் லேப்டாப் விரித்து அதில் மூழ்கினான். முதல் டாக் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கையில் ஃபுல் ஸ்லீவ் வொயிட் ஷார்ட் குர்தி, பிளாக் ஜீன்ஸ், ரிம்லெஸ் ஸ்பெக்ட்ஸ், ஷோல்டர் ஸ்ரேப் லேப்டாப் பேக் வெச்சிகிட்டு ஒரு பொண்ணு உள்ள வர அந்த ருமே ஸ்டன் ஆச்சு. அதுல ஒருத்தனுக்கு மட்டும் ஹார்ட் பீட் ஏகத்துக்கும் எகிறி இருந்துச்சு. ஆனா அந்த பொண்ணோட கண்கள் தேடினதும் அந்த ஒருத்தனத்தான். அவள் அவனை பார்த்துவிட்டு அருகில் வந்து அமர்ந்ததும் அவன் ஹார்ட் பீட் இரு மடங்கு உயர்ந்தது, சிறிது புன்னகையுடன் முதல் டாக் பிரசன்டர் தன் லைவ் டெமோவை தொடர்ந்தார். அங்கிருந்த சீனியர்கள் மதனை பார்த்து புன்னகைத்து விட்டு லைவ் டெமோ கவனிக்க தொடர்ந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் மதன் யார் என்று, அவன் அருகில் ஒரு அழகான பெண் அமர்வது ரிச்சர்டு ஸ்டால்மேனுக்கு பக்கத்தில் மேக்புக் ப்ரோ இருப்பதற்கு சமம்.
முதல் டாக் முடிந்து இரண்டாவது டாக்கிற்கு அடுத்த பிரசன்டர் தயாராகிக் கொண்டிருந்தார், அப்போதுதான் கார்த்திகாவும் மதனும் பேச ஆரம்பித்தனர். ‘என்ன மிஸ்டர் மதன் கண்டுக்கவே மாட்டென்றீங்க?’ கார்த்திகா ஆரம்பிக்க ‘தட் என்ட்ரீ, அப்படியே சினிமால ஹீரோயின் காலேஜ் கிளாஸ் ரூமில என்டர் ஆகும்போது ஒரு கேமரா ஆங்கிள் வைப்பாங்களே, அவ்வலவு பியூட்டி புல்லா இருந்துச்சு’ மதன் கூற, ‘ஆங்கிள் மட்டும்தான் ப்யூடிபுல்லா?’ கார்த்திகா கேட்க ‘நீங்க அழகா இருக்கீங்கன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா. அதான் இந்த ரூமே ஸ்டன் ஆச்சே’ மதன் கூற ‘இருந்தாலும் உங்க ரெஸ்பான்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கனும்ல’ கார்த்திகா வெட்கத்துடன் கேட்க ‘இந்த இடத்துல இத சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன், இந்த பிளாக் அண்ட் வொயிட் ட்ராஸ் செம்மையா இருக்கு. அதுவும் இந்த ஸ்பெக்ட்ஸ், இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் நீங்க ஸ்பெக்ட்ஸ் போட்டு பாக்குறேன்’ மதன் கூற ‘யாரையாவது இம்ப்ரஸ் பண்ணனும்னா இப்படி ஸ்பெக்ஸ் போட்டு வருவேன்’ கார்த்திகா கூற ‘அந்த யாரோ இம்ப்ரஸ் ஆனாரா?’ மதன் கேட்க ‘அத நீங்கதான் சொல்லனும்’ கார்த்திகா கூற ‘ஸ்பெக்ட்ஸ் போட்டா நீங்க வேற லெவல்’ மதன் கூற ‘போதுங்க, டாக் ஆரம்பிச்சாச்சு’ கார்த்திகா மதனின் கவனத்தை திசை திருப்பினாள்.
ஒரு வழியாக எல்லா டாக்குகளும் முடிவுக்கு வந்தது. வழக்கப்படி ஒருங்கிணைப்பாளர் மீட்டிற்கு வந்த எல்லோருடைய பெயர், பனி மற்றும் புதியவறாக இருந்தால் எவ்வாறு ஐலக்சியின் அறிமுகம் கிடைத்தது என்பதை வரிசையாக கேட்டுக்கொண்டிருந்தார். மதனின் தருணம் வந்தது. ‘நான் மதன், ஒரு பிரைவேட் கம்பெனியில் டெவலப்பரா வொர்க் பண்றேன், ரெகுலராக மீட்டப்புக்கு வருவேன்,’ சபைக்கு சொல்லி முடித்துக் கொண்டான். இப்போது பக்கத்தில் இருந்த கார்த்திகாவின் தருணம். ‘நான் கார்த்திகா, மதன் வொர்க் பண்ற அதே பிரைவேட் கம்பெனியில் லினக்ஸ் அட்மினாக இருக்கேன். காலேஜ் படிக்கும்போது ஐலக்சி பற்றி தெரியும், ஆனா இப்பத்தான் லினக்ஸில் இண்ட்ரஸ்ட் வந்திருக்கு, சோ, நிறைய கத்துக்க வந்திருக்கேன்’ கார்த்திகா முடிக்க ‘மதன் கம்பல் பண்ணி கூட்டி வந்தானா?’ ஒருங்கினைப்பாலர் கேட்க ‘இல்லைங்க, அவருக்கு நான் வருவேன்னு தெரியாது’ கார்த்திகா பதில் கூற ‘எனிவே வெல்கம் டு தி அதர் சைட், தேரார் லாட்ஸ் ஆப் ஆப்பர்சூனிட்டி இன் ஓப்பன் சோர்ஸ் பார் உமன், லைக் அவுட்ரீச், பை லேடிஸ், ரெயில்ஸ் கர்ல்ஸ், யு கேன் லுக் அட் ஒப்பன் சேர்ஸ் டைவர்சிட்டி வெப்சைட், உங்களுக்கு ஆர்வம் மட்டும் இருந்தா போதும், நீங்க நிறைய கான்றிப்யூட் பண்ணலாம், வருங்காலத்துல நீங்களும் இங்க ஒரு பிரசண்டரா வருவீங்கன்னு நம்புரேன்’ ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாவிடம் சொல்லிவிட்டு மற்றவர்களை கேட்க ஆரம்பித்தார்.
மீட்டப் முடிந்து எல்லோரும் கிளம்ப, மீட்டப்புக்கு வரும் வொர்கிங் புரபஷ்னல்ஸ், அங்கு வரும் ஸ்டூடன்டுகளுக்கு ஒரு மினி ட்ரீட் வைப்பது வழக்கம். அன்றும் மதனும் சீனியர்களும் அருகில் இருக்கும் IIT கேண்டீனில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வாங்க எத்தனை ஜூனியர்கள் வருகிறார்கள் என கணக்கெடுக்க ஆரம்பித்தனர். ‘ நீங்களும் டீ சாப்பிட கேன்டீன் வறீங்களா? டிரஸ்ட் மீ, யூ கெட் லாட் ஆப் நாலேஜ் இன் திஸ் கைன் டாப் ஆப்லைன் டிஸ்கஷன்ஸ்’ மதன் ஆர்வத்தை தூண்ட ‘அப்கோர்ஸ் எஸ்,’ கார்த்திகா கூற ‘வண்டி வச்சிருக்கீங்களா? இல்ல லிப்ட் வேணுமா? ஏன்னா கேன்டீன் கொஞ்சம் தூரம் போகனும்’ மதன் கேட்க ‘ஐ ஹவ்’ கார்த்திகா கூறிவிட்டு தன் டியோவை காட்டினாள். ‘என் பின்னாடி பாலோ பண்ணுங்க, ‘ மதன் சொல்லிவிட்டு தன் ஹார்னெட்டை கிளப்பினான். இருவரும் கேன்டீன் வந்தடைந்தனர். அங்கு இவர்களுக்கு முன்பு டீ பார்ட்டி ஆரம்பித்து இருந்தது ‘வாடா மொக்க, ஸிட், நீங்களும் உட்காருங்க கார்த்திகா’ ஒருங்கிணைப்பாளரும் மதனின் தோழருமனவர் இருவரையும் அமர சொன்னார். ‘அப்புறம், எங்கிருந்து வரீங்க? மதன் கொலீகா? ஒரே ப்ராஜக்ட்டா? எங்க படிச்சீங்க? ஐலக்சி எப்படி தெரியும்?’ ஒருங்கிணைப்பாளர் கேள்விகளை தொடுக்க ‘என்னோட நேட்டிவ் ஆசனூர், சத்தியமங்கலம் பக்கத்துல இருக்கு, படிச்சது பிஐடில பிஇ, அப்போ அங்க ஐலக்சி ஒரு வொர்க்ஷாப் நடத்துனாங்க, அது மூலமா தெரியும். வேல கிடச்சு லினக்ஸ் அட்மினா இருக்கேன், அப்ப ஒரு டாஸ்க் ஹேண்டில் பண்ணும்போது மதன் இன்றடியூஸ் ஆனார். அவர் ஒரு நாள் லினக்ஸ் எப்படி உருவாச்சுன்னு சொன்னாரு, அதுல இருந்து புல் டைம் லினக்ஸ் யூசரா மாறிட்டேன், இன்னைக்கு ஐலக்சி போகலாம்னு தோனுச்சு, வந்தேன்’ கார்த்திகா மதனுடனான அறிமுகத்தை விவரித்தாள் ‘வி நீட் லாட் அப் விமன் டு பார்டிசிபேட் இன் ஓப்பன் சோர்ஸ், அவங்க வராததுக்கு என்ன காரணம்னு தெரியல’ ஒருங்கிணைப்பாளர் கூற ‘இன்ட்ரஸ்ட் இல்லாததுதான் காரணம். நானே மதன் மீட் பண்ணாம இருந்திருந்தா இங்க வந்திருப்பேனான்னு சந்தேகம்’ கார்த்திகா விலக்கினாள். ‘எனிவே, நைஸ் டாக்கிங் டு யு கார்த்திகா’ ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாவிடம் கூறிவிட்டு ‘என்னடா மொக்க, வாட் யூ ஆர் அப் டூ?’ மதனை பார்த்து கேட்டார். ‘போன வாரம் இன்ட்ரஸ்டிங்கான ஒரு ப்ராப்ளம்னா,’ மதன் தன் கான்வர்சேஷன்னை ஆரம்பித்தான். மதனும் அங்கு கூடியிருந்தவர்களும் லினக்ஸ் உலகத்தில் நடக்கும் தற்போதைய நடப்பு களிலிருந்து அவர்கள் சந்தித்த தொழில்நுட்ப பிரச்சனைகள் வரை அலசினர். இதை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திகாவுக்கு அவளும் ஒரு நாள் இவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.
ஒரு வழியாக மினி டீ பார்ட்டியும் முடிவுக்கு வரும் போது இரவு மணி ஒன்பது. மதனும் கார்த்திகாவும் எல்லோரிடமும் விடைபெற்று தங்கள் வாகனங்களிடம் வந்தனர். ‘ப்பா, எவ்ளோ டாபிக் டிஸ்கஸ் பண்றீங்க, அமேசிங்’ கார்த்திகா டிஸ்கஷனில் விவாதித்ததை என்னி வியப்படைந்தாள். ‘இது என்ன பிரமாதம், கான்ப்ரன்ஸ் எல்லாம் வந்து பாருங்க விடிய விடிய பேசுவோம்’ மதன் பொருமிதப்பட்டான். ‘ஆமா, அப்பவே கேட்கனும்னு இருந்தேன், நான் இங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?’ மதன் கேட்க ‘சுரேஷ் காலையில கேன்டீன்ல மீட் பண்ணாரு அவர் சொல்லித்தான் நீங்க இங்க வருவீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன், வந்தேன், இருந்தீங்க’ என்று கார்த்திகா கூறினாள். ‘சரி இப்படியே வண்டி தள்ளிகிட்டு ரெண்டு கிலோமீட்டர் நடந்தா கிண்டி கேட் வந்துரும் போலாமா?’ மதன் கேட்க ‘ஏன் வண்டிய ஓட்டிக்கிட்டு போனா வராதா?’ கார்த்திகா பதில் கேள்வி கேட்க ‘சீக்கிரம் வந்துடும்’ மதன் புன்னகையுடன் கூற ‘பரவால்ல ஓட்டிக்கிட்டே போகலாம், வேணும்னா டின்னர் எங்கயாச்சும் போகலாம்’ கார்த்திகா சிரிப்புடன் கூறினாள். மதனும் கார்த்திகாவும் அங்கிருந்து கிளம்பினர்.
இருவரும் ஓஎம்ஆர் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். ‘நீங்க நான் வெஜ் சாப்பிடுவீங்களா?’ மதன் கேட்க ‘நீங்க சாப்பிடுவீங்களா?’ கார்த்திகா கேட்க ‘எவ்வளவு சாப்பிட சொன்னாலும் சாப்டுவேன், பட் நீங்க சாப்பிடலனா நானும் சாப்பிடல’ மதன் கூற ‘நல்ல வேல எங்க தயிர்சாதம்ன்னு சொல்லிடுவீங்லோன்னு இருந்தேன்’ கார்த்திகா நிம்மதியானாள். இருவரும் ஒரு நல்ல முஸ்லிம் ரெஸ்டாரன்டில் நுழைந்தனர். இருவருக்கும் ஒரு டேபிள் ஒதுக்கப்பட்டது. ‘என்ன சாப்பிடுறீங்க?’ மதன் கேட்பதற்குள் ‘ஒரு பெப்பர் பார்பிக்யூ சிக்கன், ஒரு மட்டன் பிரியாணி’ கார்த்திகா முந்திக்கொள்ள மதன் சிரித்துக்கொண்டே சர்வரை பார்த்து ‘இன்னொரு மட்டன் பிரியாணி சேர்த்து கொண்டு வாங்க’ என்று ஆர்டரை கொடுத்தான். ‘பார்பிக்யூ சிக்கன் எனக்கு மட்டும் தான் நீங்க கை வைக்க கூடாது’ கார்த்திகா ஆணையிட மதன் கார்த்திகாவின் ஆர்வத்தை பார்த்து ‘நான் வெஜ் அவ்வளவு புடிக்குமா?’ கேட்க ‘பாய் கடை பிரியாணின்னா சும்மாவா?’ கார்த்திகா கூற இருவரும் சிரித்தனர். ‘செம க்யூட்டா இருக்கீங்க’ மதன் கூற ‘அதான் அப்பாவே சொல்லிட்டீங்களே இப்ப என்ன?’ கார்த்திகா கேட்க ‘அப்ப கண்ணுக்கு அழகா தெரிச்ச கார்த்திகாவை பார்த்து சொன்னேன் இப்ப பார்பிக்யூ சிங்கனுக்காக சன்ட போட்ற கார்த்திகாவை பார்த்து சொல்றேன்’ மதன் கூற ‘போதும்,’ கார்த்திகா வெக்கத்தில் தலை குனிய என்றென்றும் புன்னகை படத்தில் இருந்து எனை சாய்த்தாளே பாடல் ஒலித்தது. ‘இதுல சிச்சுவேஷன் சாங் வேர, யூ ஆர் மேட்’ கார்த்திகா வெக்கத்துடன் கூற மதன் சிரித்தபடி கார்த்திகாவையும் தன் செல்போனிலிருந்து வரும் பாடலையும் ரசித்துக்கொண்டிருந்தான்.
‘எனிவே ஐ மஸ்ட் அப்பாலஜைஸ் ஃபர்ஸ்ட், இத்தன நாளா பழகி இருக்கேன், ஆனா உங்க நேட்டிவ் எது, உங்க பேமிலி பத்தி எதுவும் கேட்டதில்லை. ஐம் சாரி’ மதன் மன்னிப்பு கேட்க ‘இட் இஸ் ஆல் ரைட், நான்தான் உங்க கிட்ட சொல்லி இருக்கணும், அப்பவே சொன்ன மாதிரி, நேட்டிவ் சத்தியமங்கலம் பக்கத்தில் இருக்கும் ஆசனூர், அப்பா ஸ்கூல் எட் மாஸ்டர், அம்மா அதே ஸ்கூல்ல டீச்சர், நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு, கேம்பஸ்ல செலக்ட் ஆகி நம்ம கம்பெனில வேல, சோழிங்கநல்லூர்ல ரூம், ரூம்ல ஒரு பிரண்ட் தூங்கிக்கிட்டு இருப்பா, இங்க ஒரு பிரண்ட் கூட டின்னர்’ கார்த்திகா விவரிக்கும் போதே அவள் செல்போன் அடித்தது, மறுமுனையில் கயல் ‘எங்கடி இருக்க? சீக்கிரம் வண்டி எடுத்துட்டு வா சாப்பிட போலாம்’ கயல் கூற ‘ஆல்ரெடி பிரியாணி உள்ள போயிட்டு இருக்கு, மதன் கூட’ கார்த்திகா கூற ‘இது எப்ப, சொல்லவேல்ல?,’ கயல் கூற ‘வரும்போது வாங்கிட்டு வரேன், என்ன வேணும்?’ கார்த்திகா கேட்க ‘தாங்காது, பக்கத்துல போய் சாப்பிட்டுக்குறேன், எப்ப வருவ? வருவியா?’ கயல் கலாய்க்க ‘சரி வை,’ கார்த்திகா காதோடு காதாக பேசிவிட்டு வைத்தாள். ஆர்டர் வந்தது, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். ‘எப்படி இருந்தது மீட்டப்?’ மதன் கேட்க ‘மோர் தன் ஐ எக்பெக்டட், அதுவும் அந்த கேன்டீன்ல நடந்த கான்வர்சேஷன், வேர லெவல், நீங்களும் டாக் கொடுப்பீங்களா?’ கார்த்திகா கேட்க ‘சம்டைம்ஸ், ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா பண்ணிட்டு இருந்தா மீட்டப்ல அத பத்தி டாக் கொடுப்பேன்’ மதன் விலக்கினான். ‘உங்களுக்கு எப்படி லினக்ஸ் இன்றடியூஸ் ஆச்சு?’ கார்த்திகா கேட்க ‘அப்ப நான் பிளஸ் ஒன், சி ப்ரோக்ராமிங் சிலபஸ்ல இருந்துச்சு, அது வரைக்கும் விண்டோஸ்ல போர்லாண்ட் சி கம்பைலர் யூஸ் பண்ணி மட்டும் ப்ரோக்ராம் பண்டிருந்த நான் முதன் முதலா cc கமாண்ட யூஸ் பண்ணியும் சி ப்ரோக்ராம் கம்பைல் பண்ணலாம்னு பாலகுருசாமியின் ப்ரோக்ராமிங் இன் ஆன்சி சி புக் முலமா தெரிஞ்சிக்கிட்டேன், அந்த cc கமாண்ட பத்தி ஆராயும்போது தான் கம்ப்யூட்டர்னா விண்டோஸ் மட்டும் இல்ல அதுக்கும் மேல யுனிக்ஸ் அப்படின்னு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன், அப்புறம் B.Sc., Computer Science படிக்கும்போது எங்க காலேஜ்ல இருந்த லைப்ரெரி எனக்கு யுனிக்ஸ் பத்தி படிக்க உதவுச்சு’ மதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார்த்திகா குறுக்கிட்டு ‘B.Sc.? அப்ப உங்க புல் குவாலிபிகேஷன்?’ கார்த்திகா கேட்க ‘M.Sc., Computer Science, அதுவும் M.Sc. கரஸ்ல பண்ணது’ மதன் கூற ‘நம்பவே முடியல, நீங்க ஏதாவது ஒரு IIT ல BE ஆர் ME முடிச்சிருப்பீங்கன்னு இருந்தேன்’ கார்த்திகா கூற ‘IIT னா என்னன்னே எனக்கு காலேஜ் பைனல் இயர் படிக்கும் போது தான் தெரியும், அதுவும் இல்லாம எனக்கும் மார்குக்கும் ரொம்ப தூரம்’ மதன் சிரிக்க ‘இன்ட்ரஸ்டிங், ஏன் M.Sc. கரஸ்ல?’ கார்த்திகா கேட்க ‘B.Sc. முடிச்சதுமே கூலிக்கு வேலை செய்ய ஆள் தேவைன்னு என்ன கூப்டாங்க நானும் போயிட்டேன் அப்புறம் எங்கிருந்து M.Sc. ரெகுலர்ல படிக்குறது’ மதன் கூற ‘சுத்தமா புரியல, கூலிக்கு வேலை செஞ்சீங்களா? அப்புறம் எப்படி ஐடி இண்டஸ்ட்ரில?’ கார்த்திகா கேட்க ‘நான் கூலி வேலைன்னு சொன்னது B.Sc. முடிச்சிட்டு மெட்ராஸ்ல வேலை தேடி அலஞ்சிட்டிருந்தப்ப ஆப் கேம்பஸ்ல செலக்ட்டாகி ஜாயின் பண்ண என்னோட ஃபர்ஸ்ட் ஐடி கம்பெனில நான் பண்ண வேலைய தாங்க’ மதன் விளக்கி கூறினான். ‘ஏன் B.Sc. முடிச்சதுமே வேலை தேடி அலஞ்சீங்க, யூசுவலா ஹையர் ஸ்டடீஸ் முடிச்சிட்டு தானே வேலை தேடுவாங்க?’ கார்த்திகா கேட்க ‘“வாங்கியிருக்கும் மார்க்குக்கு ஆயிரம் ஆயிரம்மா செலவு பண்ணி இவன நான் மேல படிக்க வைக்கனுமாடி? மறியாதையா கடையில வந்து உட்கார சொல்லு, தொழில் கத்துக்கட்டும், படிச்சு கிழிச்சது போதும்” இது எங்கப்பா என் அம்மாகிட்ட நான் பிளஸ் டூ முடிச்சதுமே சொன்னது, எப்படியோ என் அம்மா கன்வென்ஸ் பண்ணி அப்பாவ நான் B.Sc. படிக்க ஒத்துக்க வெச்சாங்க, B.Sc. கே அவ்லோ, M.Sc. ன்னு எங்கப்பா முன்னாடி போய் நின்றிருந்தேன் என்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பாரு’ மதன் கூற கார்த்திகா முகத்தில் புன்னகை ‘மெயினா ஹயர் ஸ்டடிஸ் படிக்க எனக்கே இன்ட்ரஸ்ட் இல்ல, அதான் வேலை தேட மெட்ராஸ் வந்தேன், நாயா பேயா அலைஞ்சு ஒரு வேலை வந்தது, அப்புறம் M.Sc. கரஸ்ல போட்டு இரண்டு வருடம் வேலை பாத்துக்கிட்டே படிச்சு முடிச்சேன்’ மதன் முடித்தான். ‘படிக்க புடிக்கலைன்னா அப்பா சொன்ன மாதிரி கடைய பாத்துட்டு இருந்திருக்கலாம்ல?’ கார்த்திகா கேட்க ‘எனக்கு எக்ஸாம் மனப்பாடம் பண்றது இதெல்லாம் தாங்க வராது, ஆனா ப்ரோக்ராமிங்னா உயிர், அதுவும் C ரொம்ப பிடிக்கும், கூடவே யுனிக்ஸ், லினக்ஸ், ஓப்பன் சோர்ஸ் எல்லாம் வந்து ஒட்டிக்கிச்சு, விட முடியல, அதுக்காக எங்க கடைய எனக்கு புடிக்கலைன்னு அர்த்தம் இல்ல, கடையை விட என்னோட இண்ட்ரஸ்ட் முக்கியமா பட்டது, இதெல்லாம் வீட்ல சொன்னா புரியுமோ இல்லையோ அதான் பைனான்ஷியல் இன்டிபென்டன்ஸ் வேணும்னு வேலைக்கு வந்துட்டேன்’ மதன் தன் கதையை கூறினான். ‘இப்படியும் பசங்க இருக்கீங்களா? அன்பிலீவபில்’ கார்த்திகா மதனின் கதையை கேட்டு வியந்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தனர். மதன் பில் கட்டிவிட்டு இருவரும் தங்கள் வண்டிகளின் அருகாமையில் வந்தனர். ‘தேங்ஸ்’ மதன் கூற ‘எதுக்கு’ கார்த்திகா கேட்க ‘யூ மேட் திஸ் டே மெமரபில்’ மதன் புன்னகையுடன் கூற ‘பார் மீ டூ, டுடே இஸ் ஸ்பெஷல்’ கார்த்திகா சொல்லி முடிப்பதற்குள் மரியான் படத்திலிருந்து இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன பாடல் மதனின் செல்போனில் இருந்து ஒலிக்க கார்த்திகாவின் முகம் மீண்டும் வெக்கத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது. பாடல் முடியும் வரை இருவரும் படலை கேட்டபடி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். ‘என்ன போக விட மாட்டீங்க போல, டேம் தட் விஜய் பிரகாஷ் வாய்ஸ், ஐ லவ் திஸ் சாங்’ கார்த்திகா கூற ‘ஹவ் எ குட் ஸ்லீப்’ மதன் தன் வண்டியில் அமர ‘யூ டூ’ கார்த்திகாவும் வண்டியில் அமர்ந்தாள். இருவரும் கை அசைத்துவிட்டு விடைபெற்றனர்.
கார்த்திகா தன் ரூமிற்கு வந்தாள். கதவை திறந்த கயலுக்கு கார்த்திகாவை பார்த்ததும் ஆச்சரியம் ‘பேப், என்னடி இப்படி இருக்க? போமோது நார்மலா தானடி போன? பார்லர் போனியா? யூ லுக் அமேசிங்,’ கயல் கூறிக் கொண்டிருக்கும் போதே புதிய முகம் படத்திலிருந்து நேற்று இல்லாத மாற்றம் என்னது பாடலை பாடிக்கொண்டே கார்த்திகா உள்ளே சென்றாள். பாடிக்கொண்டே உள்ளே போகும் கார்த்திகாவை பார்த்துக்கொண்டிருந்த கயல் ‘இவளே இப்படி போரான்னா அந்த பையன் இப்ப எப்படி இருக்கானோ?’, கயல் மதனை எண்ணி வருத்தப்பட்டாள்.
மதனும் தன் ரூமை அடைந்தான். கதவை திறந்த சுரேஷ் மதன் தானாக சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்து ‘என்னடா ஆச்சு, தனியா சிரிச்சிக்கிட்டு இருக்க?’ சுரேஷ் கேட்க ‘ரொம்ப தேங்க்ஸ்டா,’ மதன் மொட்டையாக பதில் அளிக்க ‘எதுக்கு?’ சுரேஷ் கேட்க மதன் எதுவும் சொல்லாமல் சுரேஷின் கன்னத்தை கிள்ளி விட்டு உள்ளே சென்றான். சிரித்துக்கொண்டே உள்ளே செல்லும் மதனை பார்த்து ‘சரக்க மோந்து பார்த்துட்டானோ?’ சுரேஷ் புலம்பியவாரே உள்ளே சென்றான்.
தொடரும்..
நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]