எளிய செய்முறையில் C/C++ -1

C/C++ – கணிப்பொறி மொழி இயல்பிலேயே மிகவும் எளிதான ஒரு மொழியே. இந்த தொடரில் நாம் எளிய செய்முறையில் இந்த மொழியை கற்றுக் கொள்வோம்.

முதலில் C/C++ நிரல்களை(Programs) இயக்க நமக்குத் தேவையான மென்பொருட்களைப் பார்ப்போம்.

1. ஒரு இயங்குதளம் (OS). இங்கு காணப்படும் நிரல்கள் அணைத்தும் சென்ட் ஓ.எஸ்-லினக்ஸ் (CentOS-Linux) என்னும் இயங்குதளத்தில் சரிபார்க்கப்பட்டது.

2. ஒரு தொகுப்பி(Compiler) – நாம் gcc என்னும் ஒரு தொகுப்பியை உபயோகிப்போம். இது எல்லா முழுமையான இயங்குதள நிறுவலிலும் காணப்படும்.

C – நிரலின் கட்டமைப்பு

ஆவணப் பிரிவு (Documentation Section)

இணைப்புப் பிரிவு(Link Section)

வரையறைப் பிரிவு (Definition Section)

முழுமை அளாவிய பிரிவு (Global Declaration Section)

Main செயல்கூறு (Main Function)

{

அறிவிப்புக் கூற்று (Declaration Statements)

செயல்பாட்டுக் கூற்று (Executable Statements)

}

துணை நிரல் பிரிவு (Function Definitions)

துணை நிரல்1() – Function1()

{

}

துணை நிரல்2 – Function2()

{

}

புதிதாக இந்த மொழியை கற்பவர்கள் இதைப் பார்த்து பயந்து போக வேண்டாம். நாம் ஒவ்வொன்றாக கற்க கற்க, இது மிகவும் எளிதாக புரியும்.

இந்தப் பிரிவுகளில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய இரு பிரிவுகள்

1. இணைப்புப் பிரிவு(Link Section)

2. Main செயல்கூறு(Main Function)

இணைப்புப் பிரிவு:

இந்தப் பிரிவில் இந்த நிரலியில் இணைக்க வேண்டிய தலைப்புக் கோப்புகளை (Header Files) சேர்க்க வேண்டும்.

எ.கா.

<stdio.h>

இங்கு stdio.h என்பது தலைப்புக் கோப்பு. இந்தக் கோப்பில் நிலையான உள்ளீடு, வெளியீட்டுக்கான கூற்றுகள் செயல்கூறுகளாக பதியப்பட்டிருக்கும்.

உள்ளீட்டிற்கான கூற்று:

scanf

வெளியீட்டிற்கான கூற்று:

printf

முதல் நிரல்

முதலில் நமது பெயரை எப்படி வெளியீடாக திரையில் காண்பிப்பது என்பதை பார்ப்போம்.

printf(“MY NAME”);

இங்கு “MY NAME” என்பதில் என்ன உள்ளதோ அது அப்படியே திரையில் தெரியும்.

முழுமையான நிரல்

<stdio.h>

int main()

{

printf(“MY NAME\n”);

}

இதனை vi அல்லது emacs போன்ற ஏதேனும் ஒரு உரை திருத்தியில் எழுதி, ‘.c’ எனும் நீட்டிப்பில் சேமிக்க வேண்டும்(எ.கா myname.c)

நிரலை செயல்படுத்த

1. முதலில் நிரலைத் தொகுப்பியில் கொடுத்து, தொகுக்க வேண்டும்

$ gcc myname.c

2.இது a.out என்னும் ஒரு கோப்பு ஒன்றை புதிதாக நிறுவியிருக்கும்.

3.இப்பொழுது ./a.out என்னும் கட்டளையைக் கொடுப்பதன் மூலம் உங்களது பெயரை திரையில் காணலாம்.

$ ./a.out

MY NAME

$

அடுத்த பதிப்பில்…..

\n என்பது என்ன?

உள்ளீடு (scanf) வாங்குவது எப்படி?

வேறு ஒரு பெயரில் இயங்கக்கூடிய(executable in other names than a.out) கோப்பை நிறுவுவது எப்படி?

இன்னும் சில…….

நான் செ.ஜான் கிறிஸ்டோபர், ஒரு Software Company யில் Team Leader ஆக வேலை செய்கிறேன்.

tamilanjohn.blogspot.in/ ilugdharmapuri.blogspot.in/

sjchristopher@gmail.com

%d bloggers like this: