வணக்கம்.
காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
1. பங்கு பெறுவோர் அறிமுகம்
2. Emacs Editor – பயிற்சிப் பட்டறை
Emacs Editor என்பது 45 ஆண்டுகளாக பெரிதும் பயன்பட்டு வரும் ஒரு உரைத்திருத்தி ஆகும். ஈமேக்சின் பல நூறு பயன்பாடுகளில் உரைத் திருத்தம் என்பதும் ஒன்று.
இது கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் தந்தையென அழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மனால் உருவாக்கப்பட்டதாகும்.
இம்மென்பொருளானது, குனூ பொதுமக்கள் உரிமம்(GPL) உரிமத்தின் கீழ் வெளிவந்த முதல் மென்பொருள் ஆகும்
இது வெறும் உரைதிருத்தி /உரைத்தொகுப்பி மட்டுமல்ல. அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்ல திறன்களைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள் எனலாம்
இன்றைய நிகழ்வில், ஒரு பயிற்சிப் பட்டறையாக, ஈமேக்சு மென்பொருளைப் பயன்படுத்தி, OrgMode மூலம் எப்படி நமது அன்றாட வாழ்வின் செயல்களை சிறப்பாக திட்டமிடுவது, நமது பலவகை குறிப்புகளை எளிதில் எழுதுவது ஆகியன பற்றி நேரடியாக செய்து பார்த்து கற்கலாம்.
காண்க
www.fugue.co/blog/2015-11-11-guide-to-emacs.html
betterprogramming.pub/15-reasons-why-i-use-emacs-with-gifs-5b03c6608b61
காலம்: 1 மணி
பயிற்சியாளர் பெயர்: த. சீனிவாசன்
நிகழ்வு மொழி : தமிழ்
ஈமேக்சு எல்லா இயக்குதளங்களுக்கும் இலவசமாகவே கிடைக்கிறது.
பயிற்சியில் கலந்து கொள்ளும் முன், உங்கள் கணினியில் ஈமேக்சு மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள்.
3. Q & A மற்றும் பொது விவாதங்கள்
ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமாக இணையலாம்.
நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.
நிகழ்வில் சந்திப்போம்.
அஞ்சல் பட்டியலில் சேரவும்: www.freelists.org/list/kanchilug
வலை: kanchilug.wordpress.com