நிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்

 

அன்வர்

கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவரான திரு. அன்வர், எழுத்தாளர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி பரப்புரை செய்ய, கோவைக்கு பயணம் செய்தார். இதற்கான உரையாடலை இங்கே காணலாம் – github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/16

மார்ச்சு 16, 2019 முதல் மார்ச்சு 23, 2019 வரையிலான கோவை பயணத்தில், பின்வரும் எழுத்தாளர்களை சந்தித்தார்.

1. கோவை ஞானி
2. பாமரன்
3. நாஞ்சில் நாடன்
4. சம்சுதீன் ஹீரா

கோவை ஞானி அவர்கள் தமது படைப்புகளை பொதுக்கள உரிமையில் வெளியிட்டார்.

கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்

அன்வர் அவர்கள், பாமரன், நாஞ்சில் நாடன், சம்சுதீன் ஹீரா ஆகியோரிடம், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை, கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி உரையாடினார்.

சம்சுதீன் ஹீரா  – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/7

5. ஈழம் தமிழப்பனார்
github.com/KaniyamFoundation/Ebooks/issues/177

ஈழம் தமிழப்பனார் அவர்கள் 5000க்கும் அதிகமான நூல்களை Scan செய்து வைத்துள்ளார். அவரது மின்னூல்களைப் பெற்று, இணையத்தில் வெளியிட முயற்சி செய்தோம். அன்வர் தமிழப்பனாரை கோவைக்கு சென்று சந்தித்தார். தமிழப்பனார் நூல்களை இணையத்தில் மட்டுமே படிக்கும் வகையிலான ஒரு மின்னூலகம் அமைக்குமாறு கோருகிறார். யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்கிறார். இது ஒரு வகை Full DRM ஆகும். கணியம் அறக்கட்டளை DRM க்கு எதிரானது.
ஆகையினால் இத்திட்டத்தைக் கைவிடுகிறோம்.

 

அன்வர் அவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி!

2 thoughts on “நிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்

  1. Pingback: கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை – கணியம்

  2. Pingback: Kaniyam Foundation March, April 2019 Report | Going GNU

Leave a Reply