கட்டற்று இன்டர்ன்ஷிப் ( பயிற்சி) நிகழ்வுகள் குறித்து, itsfoss இணையதளத்தில் திரு.அபிஷேக் பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது.
அடிப்படையில் நானும் ஒரு கல்லூரி மாணவன் தான்.சரி, என்னை போன்ற மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த கட்டுரை இருக்கும் என்பதால்! அந்த தகவல்களை கணியத்தில் எழுதலாமா? என பொறுப்பாசிரியரிடம் கேட்டிருந்தேன்.
அதற்கு பொறுப்பாசிரியர் இன் முகத்தோடு ஒப்புதல் அளிக்கவே, அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 13 வெவ்வேறு விதமான இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து மூன்று கட்டுரைகளாக எழுதலாமே என முடிவு செய்திருக்கிறேன்.
அதன் முதல் கட்டுரைதான் இது.
இந்த கட்டுரையில் முதல் நான்கு இன்டெர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து பார்த்துவிடலாம்.
உங்களுக்கு மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் மூல கட்டுரையை பார்வையிடவும்.
1. கூகுள் கோடைகால நிரலாக்க நிகழ்வு
Google summer code என பிரபலமாக அறியப்படும், மூன்று மாதம் நடக்கக்கூடிய பயிற்சி நிகழ்வு தான் கூகுள் கோடைகால நிரலாக்க நிகழ்வு.
இந்த நிகழ்வில் 18 வயது நிறைவடைந்த அனைவரும் பங்கேற்றுக்கொள்ள முடியும்.
Debian, Fedora, GCC, FreeBSD, Git (Not GitHub), GNOME, OpenSUSE, Arduino போன்று பிரபலமான நிறுவனங்களில் உள்ள செயல்பாடுகளில் பங்கேற்க முடியும்.
நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு ஏற்ற, ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய அளவில் மிகவும் பிரபலமான கட்டற்ற நிரலாக்குபயிற்சி நிகழ்வு இதுவாகும்.
வழக்கமாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த நிகழ்வு தொடங்கும்.
2)FSF
தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக திகழும் எஃப் எஸ் எப் சார்பில் நடத்தப்படக்கூடிய இந்த நிகழ்வில், அமெரிக்காவில் வசிப்பவர்கள் எளிமையாக பங்கேற்றுக் கொள்ள முடியும்.
இந்தியாவில் உள்ளவர்கள் இதில் பங்கேற்க முடியுமா? என்பதை செயல்பாட்டைப் பொறுத்துதான் தீர்மானிக்க முடியும்.
இங்கும் கல்லூரி மாணவர்களால் பல நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்ள முடியும், மற்றும் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
இதில் பங்கேற்பதற்கு வயது வரம்பெல்லாம் ஒன்றும் கிடையாது.
ஆனால் கூகுள் சம்மர் கோடு போல இங்கு உங்களுக்கு ஊக்க தொகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
3. Linux Kernel Mentorship Program
Linux அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலமாக, kernal நிரலாக்க முறை குறித்து அறிந்து கொள்ள முடியும்.
மேலும், ஐந்தாயிரம் டாலர்கள் வரையினால ஊக்க தொகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால், இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு சில கல்வி தகுதி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
X.org அமைப்பாள் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பல அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் நடைபெறுகிறது.
4.X.org programme
ஆண்டு முழுவதும் நடத்தப்படும் இந்த பயிற்சி நிகழ்வில் பங்கேற்று, ஐந்தாயிரம் டாலர்கள் வரையிலான ஊக்க தொகைகளை பெற வாய்ப்பு உள்ளது.
வாய்ப்பிருந்தால் இதுகுறித்து அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.
சரி! இன்றைய கட்டுரையில் நான்கு பயிற்சி நிகழ்வுகள் குறித்து பார்த்து விட்டோம். வரக்கூடிய, அடுத்த இரண்டு பகுதிகளிலும் பிற நிகழ்வுகள் குறித்தும் விரிவாக காணலாம்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com