ஏற்கனவே இந்த தலைப்பில் இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தோம்.
Itsfoss தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே எட்டு கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து தெரிவித்திருந்தேன்.
இந்தக் கட்டுரையிலும் மூலக்கட்டுரையில் உள்ள பிற ஐந்து இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம்.
9. ICFOSS
கேரள அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்று, கட்டற்ற தொழில்நுட்பங்களை நீங்கள் வளர்க்க முடியும்.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறக்கூடிய இந்த நிகழ்வு ஒன்றரை மாத காலம் வரை நடைபெறும்.
இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் போது கண்டிப்பாக கவனியுங்கள்.
ஆனால்,இதற்காக ஊக்கத் தொகை எதுவும் வழங்கப்படாது
10. ICFOSS Fellowship
இதுவும் கேரளா அரசாங்கத்தின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாளர் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் உங்களுக்கு மாதம் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் இதில் விண்ணப்பிக்கலாம்.
11. FOSSEE Internships
கட்டற்ற தொழில்நுட்பத்தை வளர்க்கும் நோக்கில் ஐஐடி மும்பையால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் ஆகும்.
இரண்டு மாதங்கள் வரை நடைபெறும்.
ஊக்கத்தொகைகள் கிடைக்க வாய்ப்பில்லை.
வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.
12. Khan Academy
மேற்படி அமைப்பு முன்னெடுக்கக்கூடிய, கட்டற்ற மெய்நிகர் வகுப்பறைக்கான திட்டங்களில் நீங்கள் பங்களிக்க முடியும்.
வேலைக்கு ஏற்ற ஊக்க தொகைகளும் வழங்கப்படும்.
வழக்கமாக 10 முதல் 12 வாரங்கள் வரை நடைபெறும்.
13. Google Season of docs
கூகுள் நிறுவனத்தின் ஒரு சிறப்பான திட்டங்களில் ஒன்று.
இது தொடர்பான அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து வாருங்கள்.
திட்டத்திற்கு ஏற்ற அளவிலான சிறந்த ஊக்கத்தொகைகளை பெற முடியும்.
அவ்வளவுதான் இதோடு இந்த தொடர் முற்றுப்பெறுகிறது.
மீண்டும் ஒரு கட்டுரையோடு சந்திக்கலாம்.
இந்தத் தொடரின் பிற கட்டுரைகளை படிக்க: foss internship
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com இணையம்: ssktamil.wordpress.com