இலவச செயற்கை நுண்ணறிவு இணைய வகுப்புகள் தொகுதி 2

ஏற்கனவே இலவச செயற்கை நுண்ணறிவு இணைய வகுப்புகள் குறித்து தொகுதி ஒன்று கட்டுரையை பார்த்திருந்தோம்.

அந்த கட்டுரையை படிக்கவில்லை எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தி படித்துப் பார்க்கவும்.

இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக மூன்று செயற்கை நுண்ணறிவு இலவச வகுப்புகள் குறித்து பார்க்கலாம்.

4.செயல்முறை ஆழ்ந்த கற்றல் (practical deep learning):-

Fast ai நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில், உங்களால் செயற்கை நுண்ணறிவு குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே நிரலாக்கத்தில்(programming) சிறிதளவு அனுபவம் கொண்டவர்களுக்கு, இந்த வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கணினி தொழில்நுட்பம் இயல்பான மொழி செயல்பாடுகள் மற்றும் இன்ன பிற தகவல்கள் குறித்து உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

இதில்  ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால், இந்த ஏழு வார வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் google நிறுவனத்திற்கே சவால் விடும் வகையில் , ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியை தயாரித்திருந்தனர்.

சிறப்பம்சங்கள்:-

1. ஏழு வார கால வகுப்புகள்

2. உலகின் தலைசிறந்த ஆசிரியர்கள்

3. கருவி கற்றல் குறித்த ஆழ்ந்த அறிவை பெற முடியும்

4. கற்றவர்களின் சான்றுரைகள்

5. நிரலாக்கமின்றி செயற்கை நுண்ணறிவு இயலிகள் (chat bots)

உலகின் புகழ்பெற்ற கணினி தயாரிப்பு நிறுவனமான ஐபிஎம்(IBM) நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்படும் பயிற்சி வகுப்பாகும்.

சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் சிறப்பம்சம்.

ஐபிஎம்(IBM )நிறுவனத்தின் சொந்தமான செயற்கை நுண்ணறிவு கருவி “வாட்சன்’ கொண்டு இயங்குகிறது.

Edx தளத்தில் இலவசமாக படிக்க முடியும். உங்களுக்கு சான்றிதழ் தேவைப்படும் பட்சத்தில் அதற்குரிய தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.

சிறப்பம்சங்கள்

1. செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

2. அரட்டை இயலிகள் உருவாக்க கற்றுக் கொள்ள முடியும்.

3. செயல்முறையில் பயன்படுத்துவது தொடர்பாக அறிந்து கொள்ள முடியும்.

6. செயற்கை நுண்ணறிவை உங்கள் தொழிலில் புகுத்துங்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பாகும்.

வெறும் மூன்று மணி நேரத்தில் நிறைவு செய்யக்கூடிய இந்த வகுப்பில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உங்களுடைய வர்த்தகத்தில் பயன்படுத்துவது தொடர்பாக எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள்:-

1. மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவை வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக அறிந்து கொள்வது.

2. குறுகிய கால வகுப்பு

3. செயற்கை நுண் அறிவு தொடர்பாக அறிந்து கொள்ள முடியும்

மேற்படி இந்த கட்டுரையானது ITSFOSS  இணையதளத்தில் sai swayam das அவர்களால் எழுதப்பட்டது இந்த கட்டுரையை எளிமைப்படுத்தி மொழிபெயர்த்து வெளியிடுகிறேன்.

மேற்படிகின்ற கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காது என்னுடைய மின்மடல் முகவரிக்கு தெரிவிக்கவும். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

மொழிபெயர்த்தவர்:

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

இளநிலை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

%d bloggers like this: