இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் தொகுதி 3

இது தொடர்பான இரண்டு தொகுதி கட்டுரைகள், ஏற்கனவே கணியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றையும் வாசகர்கள் அணுகி, இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

7. தரவு அறிவியல் : கருவி கற்றல்

ஏற்கனவே ஹார்ட்வட் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இணைய வகுப்புகள் குறித்து பார்த்து இருந்தோம். அந்த வகையில், இந்த வகுப்பு ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கம் தான்.

மிகவும் பிரபலமான கருவி கற்றல்(Machine Learning) வழிமுறைகள் குறித்து உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

கருவி கற்றலில் குறுக்கீடு சரிபார்ப்பு(cross validation)முறையை எவ்வாறு பயன்படுத்துவது? இதன் மூலம் தேவையற்ற அதிகப்படியான கற்றல்குறைத்தல்(Avoid over training) குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.

புதிதாக கற்பவர்களுக்கு மிகவும் எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

வாரத்திற்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் செலவிட்டால் போதுமானது.

இதன் மூலம், உங்களுக்கான  செயற்கை நுண்ணறிவு வழிமுறையை(Artificial intelligence algorithms) உருவாக்க முடியும்.

8. ஆழ்ந்த கற்றலோடு கூடிய இயற்கை மொழி செயலாக்கம் ( Natural language processing with deep learning)

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும், இந்த வகுப்புகளை யூடியூப் தளத்திலேயே உங்களால் இலவசமாக படிக்க முடியும்.

இயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் மனித மொழி உணர்திறன் மேம்பாடு(human language processing) தொடர்பாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த வகுப்புகளின் இறுதியில், உங்களால் உங்களுக்கான இயற்கை மொழி செயலாக்க மாதிரியை(NLP) உருவாக்க முடியும்.

ஆனால், இந்த வகுப்புகள் புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கு எளிமையானதாக அமையாது.

ஏற்கனவே பைத்தான் நிரல் ஆக்க மொழி, இயற்கணிதம், புள்ளியியல், உள்ளிட்ட கணித தொடர்பான துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்களுக்கு, மிகவும் எளிமையானதாக இந்த வகுப்புகள் அமையும்.

உலகின் தலைசிறந்த பேராசிரியர்களால் இந்த வகுப்பு தயார் செய்யப்பட்டு இருப்பது! மேலும் ஒரு சிறப்பு அம்சம்.

9. ஆக்கப்பூர்வ செயற்கை நுண்ணறிவு( Generative AI) : மேலோட்டம் சிறப்பம்சம் மற்றும் தாக்கம்

மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இணைய வகுப்பு ஆகும்.

ஆக்கபூர்வ செயற்கை நுண்ணறிவின் திறன்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும், அதன் செயல்படும் விதம் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.

Coursera தளத்தில் இலவசமாக படிக்க முடியும்.

உங்களுக்கு சான்றிதழ் தேவைப்படும் பட்சத்தில், அதற்காக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.

புதிதாக கற்பவர்களுக்கு எளிமையாகவும் மேலும் ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களாலும் கற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

மூன்று மணி நேர அளவிலான வகுப்புகள் மட்டுமே உள்ளது என்பதும் கூடுதல் அம்சம்.

இத்தோடு, இலவச இணைய வகுப்பு களுக்கான இந்த தொடர்  இனிதே நிறைவடைகிறது.

கற்போம் கற்பிப்போம்!

மேற்படி இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது இணைய வகுப்புகள் தொடர்பான தரவுகள், ITSFOSS இணையதளத்தில் திரு sai swayam das அவர்களால் எழுதப்பட்டது. அதை தொகுத்து மொழிபெயர்த்து எளிமைப்படுத்தி, கணியம் இணையதளத்தில் நான் வெளியிடுகிறேன்.

இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு தெரிவிக்கவும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புக்கு:-

ஸ்ரீ காளீஸ்வரர்.செ

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தெ.தி.இந்து கல்லூரி, நாகர்கோவில்)

இளநிலை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: