எளிய தமிழில் CAD/CAM/CAE 21. 3D CNC நிரல் இயற்றல்

By | December 14, 2019

பலவிதமான சிஎன்சி இயந்திரங்கள்

ணினி ண்ணிம ட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களை சுருக்கமாகக் கயெக (CNC) எந்திரம் என்று கூறலாம். சந்தையில் கீழ்க்கண்டவாறு பலவிதமான கயெக (CNC) இயந்திரங்களும் அவற்றுக்கான கட்டுப்படுத்திகளும் உள்ளன.

  • கயெக துருவல் எந்திரங்கள் (CNC mills)
  • கயெக கடைசல் எந்திரங்கள் (CNC lathes)
  • இழுவை கத்தி எந்திரங்கள் (DragKnife Cutters)
  • சீரொளி வெட்டு எந்திரங்கள் (Laser Cutters)
  • செதுக்கும் எந்திரங்கள் (Engravers)
  • மின்ம வெட்டு எந்திரங்கள் (Plasma Torch Cutters)
  • கம்பி வளைக்கும் எந்திரங்கள் (Wire Benders)
  • மின்பொறி அரிப்பு எந்திரங்கள் (Electrical Discharge Machining – EDM Cutters)

பிற்செயலாக்கம் (postprocessor)

ஒவ்வொரு மாதிரியான எந்திரக் கட்டுப்படுத்திக்கும் G நிரல் எழுதுவதில் சில வேறுபாடுகளும் இருக்கும். திறந்த மூல G நிரல் இயற்றிகள் (CAM) பெரும்பாலும் திறந்த மூல EMC2 (LinuxCNC) கட்டுப்படுத்திக்கு G நிரல் இயற்றுகின்றன. மற்ற கயெக எந்திரத் தயாரிப்பாளர்கள் தேவைக்குத் தகுந்தாற்போல் நாம் G நிரலை பிற்செயலாக்கம் (postprocessor) மூலம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஃப்ரீகேட் வெட்டுப்பாதை பணிமேடை (Path Workbench)

ஃப்ரீகேட் வெட்டுப்பாதை பணிமேடையில் கடைசல், துருவல் சீரொளி வெட்டு போன்ற பல இயந்திரங்களுக்கு சிஎன்சி நிரல் எழுதலாம். G நிரல் பின்வருமாறு இயற்ற முடியும்:

ஃப்ரீகேட் வெட்டுப்பாதை பணிமேடை

ஃப்ரீகேட் வெட்டுப்பாதை பணிமேடை

  • பாகம், பாகம் வடிவமைப்பு மற்றும் உருவரைவுப் பணி மேடைகளில் தயாரித்த 3D மாதிரியிலிருந்து தொடங்கலாம். 
  • வெட்டுப் பாதை பணி மேடையில் ஒரு வேலையைத் (job) தொடங்க வேண்டும். எம்மாதிரி கச்சாப் பொருளிலிருந்து தொடங்கப் போகிறோம், எந்திரத்தில் எம்மாதிரி கருவிகள் உள்ளன, எவ்வளவு வேகம் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அடுத்து வேலைக்குத் தேவைப்படும் கருவிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • வெளிவெட்டு (Contour) மற்றும் உள்வெட்டு (Pocket) செயல்பாடுகளை வைத்து வெட்டுப் பாதைகள் உருவாக்கப்படும். இந்த G நிரல் நாம் மேலே பார்த்தபடி திறந்த மூல EMC2 (LinuxCNC) கட்டுப்படுத்திக்கு ஏற்றதாக இருக்கும்.
  • இதை பிற்செயலாக்கம் (postprocessor) பயன்படுத்தி உங்களின் இயந்திரத்துக்கு ஏற்ற G நிரலாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இயற்றிய வெட்டுப் பாதைகளை சரிபார்த்தல்

இயற்றிய வெட்டுப் பாதைகளை சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி Inspect.png என்ற கருவியைப் பயன்படுத்துவது. இயற்றிய G நிரலில் நாம் வரிகளைத் தேர்வு செய்தால் அதையொத்த வெட்டுப்பாதை முன்னிலைப் படுத்தப்படும் (highlighted). இரண்டாவது வழி வெட்டுப் பாதையை முழுமையாக, படத்தில் கண்டவாறு, பாவனையாக்குதல்.

நன்றி தெரிவிப்புகள்

  1. FreeCad 0 18 PATH Workbench and G-code simulation

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பாகங்களின் பட்டியல் (Bill of Materials)

பாகங்களின் பட்டியல் – இன்டபாம் (Indabom). தயாரிப்பு மேலாண்மை (PLM/PDM). தயாரிப்பு வாழ்க்கை வட்ட மேலாண்மை – டாக்டோகு பிஎல்எம் (DocDoku PLM). தயாரிப்பு வாழ்க்கை வட்ட மேலாண்மை – ஓடூ (Odoo PLM).

ashokramach@gmail.com