உங்கள் லினக்ஸ் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு

லினக்ஸ் மீது ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அது தொடர்பாக உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா?

அதற்கான சிறந்த வாய்ப்பை humble bundle ஏற்படுத்தியிருக்கிறது.

லினக்ஸ் தொடர்பான, ஐந்து இணைய புத்தகங்களை(e-books) வெறும் ஒரு அமெரிக்க டாலர் (1$) விலையில் உங்களால் வாங்க முடியும்.

டிஜிட்டல் காப்புரிமையற்ற, லினக்ஸ் மற்றும் devops குறித்து விரிவாக விளக்கும் இந்த புத்தகங்களை humble bundle by O’Reilly வெளியீடு செய்கிறது.

எந்தெந்த புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கவிருக்கின்றன?  வாருங்கள் பட்டியலை பார்க்கலாம்.

1. புதிய தலைமுறை லினக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்

2. தொலைத்தொடர்பு நிரலாக்கம் மற்றும் தானியங்கி

3.kubernetes up & running

4. Git கற்றுக்கொள்ளுங்கள்

5. GitHub செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொள்ளுங்கள்

(மேற்படி புத்தகங்களின் பெயர்கள் தமிழில் வழங்கப்பட்டிருந்தாலும், உண்மையில் புத்தகங்கள் ஆங்கில மொழியிலேயே கிடைக்கின்றன.)

உங்களால் 18 டாலர்கள்(18$) செலவு செய்ய முடிந்தால், இன்னும் ஐந்து புத்தகங்களை பெற முடியும். அந்தப் புத்தகங்கள் கீழ்காணும் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

25 டாலர்களை செலவு செய்கிறீர்களா? 15 புத்தகங்கள் மொத்தமாக உங்களுக்கு  கிடைக்கும்.

இந்த அனைத்து புத்தகங்களுமே  Code for America எனும் லாப நோக்கமற்ற அமைப்பு மூலம் வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சம்

மேற்குறிப்பிடப்பட்ட எந்த புத்தகத்திற்கும், டிஜிட்டல் புத்தக காப்புரிமை(DRM ) கிடையாது. எனவே, உங்களுடைய அனைத்து கருவிகளிலும் இந்த புத்தகங்களை படிக்க(பயன்படுத்த) முடியும்.

மேலும், லினக்ஸ் தொடர்பான உங்களது அறிவை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேற்குறிப்பிட்ட புத்தகங்களை, நீங்கள் தனியாக வாங்கினால் ஒரு புத்தகத்திற்கு பல டாலர்கள் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்! என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்! உங்கள் லினக்ஸ் அறிவை பெருக்கிக் கொள்ள உடனே இந்த புத்தகங்களை வாங்கி படியுங்கள்.

இந்த சலுகை இன்னும் ஒரு வார காலத்திற்கு மட்டுமே இருக்கும்! என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் இணைய பிரதிக்கு முந்திக் கொள்ளுங்கள்.

மேற்படி இந்த கட்டுரையானது, ITSFOSS இணையதளத்தில் அபிஷேக் அவர்களால் எழுதப்பட்டது. இந்த கட்டுரையை மொழிபெயர்த்து  வெளியிடுகிறேன்.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு தெரிவிக்கவும். உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

மொழி பெயர்த்தவர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின் மடல் முகவரி:-

srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: