GNU Octave எனும் உயர் நிலை கணினிமொழி ஒரு அறிமுகம்

குனு ஆக்டேவ் என்பது ஒரு உயர் நிலை கணினி மொழியாகும், இது முதன்மையாக எண் கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திடும் நோக்கத்திற்கு உருவாக்கபபட்டதாகும் . இது பொதுவாக நேரியல் (linear) , நேரியல் அல்லாத (nonlinear) சமன்பாடுகளைத் தீர்வுசெய்வதற்கும், எண்களாலான நேரியல் இயற்கணிதம், புள்ளிவிவர பகுப்பாய்வு ,பிற எண்களாலான சோதனைகளைச் செய்வது என்பன போன்றவைசிக்கல்களை எளிதாக தீர்வு செய்வதற்காகப் பயன்படுத்திகொள்ளப்படுகிறது. இது தானியங்கி தரவுகளின் செயலாக்கத்திற்கான தொகுப்பினை சார்ந்த மொழியாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இதனுடைய தற்போதைய பதிப்பானது ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தில் (GUI) செயல்படும் திறன்கொண்டதாகும். இது ஒரு ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலை (IDE) வழங்குகிறது, இதில் தொடரியல் சிறப்புவசதிகள், உள்ளமைக்கப்பட்ட பிழைத்திருத்தி, ஆவணப்படுத்தல் உலாவி , பிற மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளருடன் ஒரு குறிமுறை திருத்தி உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதனுடைய வரைகலை இடைமுகத்திற்கு பதிலாக கட்டளைவரி இடைமுகத்தினையும் பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவான எண்களாலான நேரியல் இயற்கணித சிக்கல்களைத் தீர்வுசெய்வதற்கும், நேரியல் அல்லாத சமன்பாடுகளின் வேர்களைக் கண்டுபிடிப்பதற்கும், சாதாரண செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், பல்லுறுப்புக் கோவைகளைக் கையாளுவதற்கும், சாதாரண வேறுபாடு , வேறுபட்டஇயற்கணித சமன்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும் இது விரிவான பல்வேறு கருவிகளைக் கொண்டுள்ளது. இது சொந்த மொழியில் எழுதப்பட்ட பயனாால் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளின் மூலமாகவோ அல்லது சி ++, சி, ஃபோட்ரான் அல்லது பிற மொழிகளில் எழுதப்பட்ட மாறுதல் ஏற்றப்பட்ட தொகுப்புகள் மூலமாகவோ எளிதில் விரிவாக்கக்கூடியதும் தனிப்பயனாக்கக்கூடியதும் ஆக அமைந்துள்ளது. இது ஒரு கட்டணமற்ற மறுபங்கீடு செய்யக்கூடிய மென்பொருளாகும். இதுகுனு பொது பொது உரிமத்தின் (GNU General Public License (GPL)) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது நாம் அதை மறுபகிர்வு செய்யலாம் அல்லது மாற்றலாம். இது அறிவியிலிற்கான சக்திவாய்ந்த கணிதம் சார்ந்த தொடரியல், உள்ளமைக்கப்பட்ட காட்சிப்படுத்தல் கருவிகளை கொண்டதொரு நிரலாக்க கணினிமொழியாகும் , இது macOS, BSD, Windows ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கது இது வரைகலை செயலாக்கம், சமிக்ஞை செயலாக்கம், தெளிவில்லாத தருக்கம், இணையான கணினி, கருவி கட்டுப்பாடு, புள்ளிவிவரங்கள், இடைவெளி எண்கணிதம், குறிமுறைவரி கணக்கீடு, என்பனபோன்ற 60 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட தொகுப்புகளை கொண்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு www.gnu.org/software/octave/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: