கூகுள் புகைப்படங்களுக்கு சிறந்த மாற்றாக அமையக்கூடிய, இரண்டு லினக்ஸ் செயலிகள்!

நாம் அனைவருமே புகைப்படங்களை சேமித்து வைக்க, google புகைப்படங்களை(Gphotos) பிரதானமாக பயன்படுத்துகிறோம்.

மாற்று செயலிகள் குறித்து நாம் யோசித்துக் கொண்டு பார்ப்பதில்லை. ஆனால், கூகுள் புகைப்படங்களோடு ஒப்பிடக்கூடிய, மேலும் அதைவிட சில சிறப்பம்சங்களை உடைய, இரண்டு புகைப்பட செயலிகள் பற்றி தான்  இந்தக் கட்டுரையில் விவாதிக்க இருக்கிறோம்.

இதற்கான தரவுகள் itsfoss இணையதளத்தில் திரு.அங்குஸ்தாஸ் அவர்களால் எழுதப்பட்ட, கட்டுரையிலிருந்து பெறப்பட்டுள்ளது.

1.IMMICH

கிட்டதட்ட பார்ப்பதற்கு google புகைப்படங்கள் செயலியை அச்சடித்து வைத்தது போல் தான் இருக்கும், இந்த immich செயலி.

இங்கே உங்களால் எளிமையாக புகைப்படங்களை ஒருங்கிணைக்கவும் பார்வையிடவும் முடியும்.

பயனர்களுக்கு மிகவும் எளிமையான பயனாளர் இடைமுகத்தை கொண்டு இருக்கிறது.

முகம் உணர்தல், பகிர்தல், தானியங்கி சேமிப்பு முறை மற்றும் ஆல்பங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களோடு வருகிறது.

             

2.PHOTO PRISM

மிகவும் எளிமையான பயனாளர் இடைமுகத்தை(User interface) கொண்ட  ஒரு புகைப்பட செயலி தான் இது.

எளிமையான வகையில் கையாளக்கூடிய இந்த செயலிலும், முகம் உணர்தல் ,தானியங்கி சேமிப்பு முறை உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை அனைத்து விதமான இயங்குதளங்களிலும் இயக்க முடியும், என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது பொதுவாக இணைய செயலி வடிவில் கிடைப்பது அறிய முடிகிறது.

கட்டுரை குறித்த கருத்துகளை என்னுடைய மின்மடல் முகவரிக்கு தெரிவிக்கவும்.

கட்டுரையாளர்:-

ஶ்ரீ காளீஸ்வரர்.செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தெ.தி.இந்து கல்லூரி , நாகர்கோவில்)

இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர்,

கணியம் அறக்கட்டளை.

%d bloggers like this: