GParted என சுருக்கமாக அழைக்கப்பெறும் ஜினோம் பகிர்வு பதிப்பாளர்(GNOME Partition Editor)என்பது கணினியின் நினைவகங்களில் பாகப்பிரிவுகளை உருவாக்குவதற்கும், மறுசீரமைப்பதற்கும்,அவற்றை நீக்குவதற்கும் பயன்படுகின்றது. நினைவகங்களில் ஏற்கனவே உள்ள பாகப்பிரிவு அட்டவணைகளைக் கண்டறிந்து அவைகளை கையாளவும் இது பாகப்பிரிவு பிரிக்கப்பட்டதிலிருந்து libpartedஆக செய்யப்பட்டதைப் பயன்படுத்துகிறது. இதில் கோப்பு முறைமை வாய்ப்புகளின் கருவிகள் libparted இல் சேர்க்கப்படாத கோப்பு முறைமைகளை நிர்வகிக்க அனுமதிக்கின்றன. நம்முடைய வட்டுநினைவக பாகப்பிரிவுகளை வரைபடமாக நிர்வகிப்பதற்கான கட்டணமற்ற பாகப்பிரிவு பதிப்பாளராக இது திகழ்கின்றது. இதன் மூலம் நாம் தரவுகளின் இழப்பு எதுவும் இல்லாமல் கணினியின் நினைவகத்தில் பாகப்பிரிவுகளின் அளவை மாற்றலாம், நகலெடுக்கலாம், நகர்த்தலாம்: கணினியின் சி: எனும் இயக்ககத்தை விரிவுபடுத்திகொள்ளவும் அதனை சுருக்கவும் செய்யலாம்: அதாவது புதிய இயக்க முறைமை களுக்கான காலிநினைவகத்தை உருவாக்கவும், ஏற்கனவே நீக்கப்பட்ட பாகப்பிரிவுகளிலிருந்து தரவுகளை இதன்மூலம் மீட்டிடவும் முடியும் இந்த GParted ஐ நாம் சுதந்திரமாக யாருடைய தலையீடும் இல்லாமல் இயக்க, நகலெடுக்க, விநியோகிக்க, படிக்க, மாற்றியமைத்திட முடியும். இதனைப் பயன்படுத்துவதற்காகவென தனியாக கட்டணம் ஏதும் நாம் செலுத்திட தேவையில்லை . லினக்ஸ், விண்டோ, மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் x86 , x86-64 ஆகியவற்றின் அடிப்படையிலான கணினிகளில் இதனைப் பயன்படுத்திடமுடியும். இந்த பயன்பாட்டின் அனைத்து வசதி வாயப்பு களையும் பயன்படுத்திகொள்வதற்கு குறைந்தபட்சம் 320 MB ரேம் நினைவகம் தேவையாகும் இதுGPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது
MSDOS, GPT என்பனபோன்ற பாகப்பிரிவு அட்டவணைகளை உருவாக்கவும்
UUID அல்லது பாகப்பிரிவுவுகளை உருவாக்கவும், நீக்கவும், நகலெடுக்கவும், மறுஅளவாக்கவும், நகர்த்தவும், சரிபார்க்கவும், அமைக்கவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும்
btrfs, ext2 / 3/4, f2fs, FAT16 / 32, hfs / hfs +, linux-swap, luks, lvm2 pv, nilfs2, NTFS, reiserfs / 4, udf, ufs , xfs ஆகிய கோப்பு முறைமைகளை கையாளவும்
துவக்க, மறைக்கப்பட்ட பாகப்பிரிவு கொடிகளை( Flag) இயக்கவும் முடக்கவும் முடியும்
பாகப்பிரிவுகளை சீரமைக்கவும் , ஏற்கனவே அழிக்கப்பட்ட அல்லது நீக்கம் செய்யப்பட்ட பாகப்பிரிவுகளிலிருந்து தரவுகளைமீட்டெடுக்கவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் அதுமட்டுமல்லாது இது கணினியின் 512, 1024, 2048, 4096 ஆகிய அனைத்து அளவுகளையும் ஆதரிக்கின்றது. அதோடு வன்பொருள் RAID, BIOS RAID, லினக்ஸின் RAID ஆகியவற்றையும் இது ஆதரிக்கின்றது.
இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் gparted.org/ எனும் இணைதள முகவரிக்கு செல்க