GPT4All ஐ ஆய்வுசெய்தல், உள்ளூர் LLM மேசைக்கணினியின் செயலி

By | August 17, 2025

கற்காலம் முதல் தற்போதைய மின்னணு தகவல் காலம் வரை, வாழ்க்கையை எளிதாக்குகின்ற குறிப்பிடத்தக்க பல்வேறு வகைகளிலான தொழில்நுட்ப முன்னேற்றங்களை மனிதகுலம் கண்டுவருகின்றது. அவ்வாறான நிலையில் தற்போது பல்வேறு செய்யறிவு(AI) கருவிகள் நம் முடையவிரல் நுனியில் கிடைக்கின்றன,செய்யறிவு(AI) bots அல்லது உதவியாளர்கள் நமக்கு நினைவூட்டல்களை அனுப்புவதன் மூலமும், கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், மேலும் பலவற்றின் மூலமும் நம்முடைய ஒவ்வொரு நாளையும் திட்டமிட உதவுகின்றன. செய்யறிவு(AI) கருவிகளின் பயன்பாடுகளின் குறிப்பிடத்தக்க திறன்களில் மனிதனைப் போன்ற உரையை உருவாக்குதல், மொழி மொழிபெயர்ப்புசெய்தல், ஆக்கப்பூர்வமான உள்ளடக்க எழுத்து, உள்ளடக்க சுருக்கம் போன்ற பல அடங்கும்.
பெரிய மொழி மாதிரிகள் அல்லது LLMகள் மனிதனைப் போன்றே உரையை உருவாக்கக்கூடிய பாரிய தரவுத்தொகுப்புகளில் பயிற்சி பெற்ற சக்திவாய்ந்த மாதிரிகள். குறிமுறைவரிகளின் உருவாக்கத்தில் உதவிசெய்தல், அறிவியல் ஆய்விற்கு பங்களித்தல் போன்ற மேம்பட்ட மட்டத்தில் உள்ள நிபுணர்களுக்கு கூட அவை உதவ முடியும்.
அதிக நவீன LLMகள் சில வரம்புகளைக் கொண்டுள்ளன. அவற்றுக்கு விலையுயர்ந்த உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது, இணையத்தைச் சார்ந்துள்ளது, மேலும் அவை பாதுகாப்பானதாகவோ அல்லது பயனர் நட்பாகவோ இல்லாமல் இருக்கலாம்.வளாக கணினியில் இயங்கக்கூடிய மாற்று செய்யறிவு(AI) கருவி நம்மிடம் இருப்பதாக கற்பனை செய்துகொள்க, இது திறமூலமாகும், கட்டணமற்றதாகும், செயல்படுவதற்காக இணைய இணைப்பு எதுவும் தேவையில்லை, எந்த குறிமுறைவரிகளின் அறிவும் தேவையில்லை. ஆம், இந்த செயல்திறன்மாற்றியின் செய்யறிவு(AI) மாதிரியானது Nomic AI இன் ‘GPT4All’ ஆகும், இதுஒரு திறமூல, வளாகத்தில் செயல்படுகின்ற LLM மேசைக்கணினயின் பயன்பாடாகும்.
GPT4All என்றால் என்ன?


GPT4All என்பது Nomic AI தரவுத்தொகுப்புகளுடன் தொடர்பு கொள்வதற்கும் நுகர்வோர் கணினிகளில் செய்யறிவு(AI) மாதிரிகளை இயக்கு வதற்கும் கருவிகளை உருவாக்குகின்ற ஒரு நிறுவனம்) உருவாக்கிய ஒரு கட்டணமற்ற கட்டற்ற தளமாகும், இது கணினிகளில் வளாகத்தில் இயங்குகின்ற மிகவும்சக்திவாய்ந்த, தனிப்பயனாக்கப்பட்ட LLMகளைப் பயிற்றுவிக்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், இது கட்டணமில்லாமல் பயன்படுத்தக்கூடிய, வளாககணினியில் இயங்குகின்ற, தனியுரிமை-விழிப்புணர்வு கொண்ட அரட்டைஉதவியாளர் (chatbot.) ஆகும். இதன்முக்கிய சிறப்பு இயல்பு என்னவென்றால், இதற்கு எந்த வரைகலை செயலாக்க அலகு (GPU) அல்லது இணைய இணைப்பு எதுவும் தேவையில்லை.
தரவு மையங்களில் சக்திவாய்ந்த சேவையகங்கள் தேவைப்படும், பெரும்பாலும் மேககணினி அடிப்படையிலான பாரம்பரிய LLMகளுடன் ஒப்பிடும்போது GPT4All எவ்வாறு தனித்து நிற்கிறது என்பதிலிருந்து தொடங்குவோம். ChatGPT ஐப் பயன்படுத்தி ஒரு கேள்வி அல்லது அறிவுறுத்தலை ஒரு தூண்டுதலாக வழங்கும்போது, கோரிக்கை இணையம் வழியாக OpenAI இன் சேவையகங்களுக்கு அனுப்பப்படும். சேவையகங்களில் இயங்குகின்ற LLMகள் கோரிக்கையைச் செயல்படுத்துகின்றன, மேலும் அதற்கான பதில் பயனருக்குத் திருப்பி அனுப்பப்படும். இதற்கு நேர்மாறாக, GPT4All எந்த தொலைதூர சேவையாளரையும் நம்பியிருக்காது, LLMகளின் வளாக செயலாக்கத்தின் அடிப்படையில் செயல்பட முடியும், மேலும் சக்திவாய்ந்த செய்யறிவு(AI) மாதிரிகளை நேரடியாக பயனரின் மடிக்கணினிகள், தனிப்பட்ட கணினிகள் ,கைபேசிகள் அல்லது கைகணினி(tablets) போன்ற சாதனங்களில் இயக்குகிறது.
GPT4All இன் நன்மைகள்
தனியுரிமை
LLM ஆனது வளாகத்தில் இயக்கப்படும்போது, எந்த தொலைதூரசேவையாளருக்கும் விலைமதிப்பற்ற நம்முடைய தரவை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இதன் பொருள் தரவு நம்முடைய வளாக சாதனத்தில் பாதுகாப்பாக உள்ளது, இது தனியுரிமையை மேம்படுத்துகிறது.
செலவு
LLMகள் வளாகத்திலேயே இயக்கப்படுவதால், பயன்பாட்டின் அடிப்படையில் LLMகளை இயக்குகின்ற எந்த மேககணினி அடிப்படையிலான சேவையகங்களையும் அணுக பணம் செலுத்த வேண்டியதில்லை.இதனை வளாகத்திலேயே செயல்படுத்துதல் செலவுகளைக் குறைக்க உதவுகிறது.
இணையஇணைப்பில்லாதபோதும் அணுகுதல்
LLMகளின் வளாக செயல்படுத்ததுதல் இணைய இணைப்பு இல்லாமல் நம்முடைய கணினிகளிலிருந்து நம்முடைய தரவை நாம்நேரடியாக அணுக அனுமதிக்கிறது. இணைய இணைப்பு கிடைக்காதபோது அல்லது நம்பகத்தன்மையற்றதாக இருக்கும்போது இது நன்மை பயக்கும்.
கூடுதல் கட்டுப்பாடும் தனிப்பயனாக்கமும்
LLMகளை வளாகத்தில் இயக்குவது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. மாதிரியைத் தனிப்பயனாக்க, மாற்றியமைக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. தேவையெனில் நம்முடைய தேவைக்கேற்றவாற நாமே அதை நன்றாகச் சரிசெய்யலாம் அல்லது தேவைகளின் அடிப்படையில் பல்வேறு மென்பொருளுடன் ஒருங்கிணைக்கலாம்.
GPT4All உடன் தொடங்குதல்
நம்முடைய சாதனத்தில் உள்ள வேறு எந்தவொரு பயன்பாட்டிற்கும் வழக்கமாக நாம் செய்யும் வழியில் GPT4All ஐ அமைக்கலாம். முதல் படி பயன்பாட்டைப் பதிவிறக்கம்செய்து நிறுவுகைசெய்வதுஆகும்; அடுத்து, பகுப்பாய்வு செய்ய விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுத்திடுக, இறுதியாக, நமக்கு விடைதெரியவேண்டிய கேள்விகளைநாம் கேட்க தொடங்கலாம்.
GPT4All ஐ பதிவிறக்கம்செய்து நிறுவுகைசெய்திட பின்வருமாறான படிமுறைகளைப் பின்பற்றிடுக.


1. Windows, Mac அல்லது Linux ஆகிய இயக்கமுறைமைகளில் நிறுவுகை செய்து செயல்படுவதற்கு பொருத்தமான தேவையான பதிவிறக்கம்செய்வதற்கான கோப்புகளை , www.nomic.ai/gpt4all எனும் முகவரியில் தேடிக்கண்டறிந்திடுக.
2. இருக்கின்றவைகளில் ஏதேனும் ஒரு மாதிரியைப் பதிவிறக்கம் செய்திடுக. பொதுவாக Llama3 உடன் தொடங்குவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் (docs.gpt4all.io/gpt4all_desktop/models.html#example-models). எனும் இணையதளமுகவரிகளில் கூடுதல் மாதிரிகளை தேடி உலாவரலாம்
3. பதிவிறக்கம் செய்தவுடன், அரட்டைகளுக்குச் செல்க.
4. அதற்காக Load Default Model என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக (Llama3) அல்லது பதிவிறக்கிய எந்தவொரு மாதிரியிலும்).
5. எடுத்துக்காட்டு அரட்டைகள் அல்லது நம்முடைய சொந்த அறிவுறுத்தல்களை முயற்சித்திடுக.
நிறுவுகைசெய்தல், பல்வேறுசெயல்களை அமைத்தல், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ,சரிசெய்தல் உதவிக்குறிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, docs.gpt4all.io/index.html எனும் இணையதளமுகவரியில் உள்ள GPT4All ஆவணங்களைப் பார்வையிடுக.
GPT4All இன் வழக்கங்களையும் பயன்பாடுகளையும் பயன்படுத்திகொள்க
புதிய பயன்பாடுகளை உருவாக்குதல்
மேம்படுத்துநர்களின் சமூககுழுவால் இயக்கப்படுகின்ற வளர்ச்சியை மேம்படுத்துகின்ற GPT4All இன் திறமூல இயல்பைப் பயன்படுத்திகொள்ளலாம். புதிய பயன்பாடுகள் அல்லது சிறப்பு கருவிகளை ஏற்கனவே உள்ள குறிமுறைவரிகளின் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கலாம்.
ஆய்வும் பரிசோதனையும்
செலவு அல்லது API பயன்பாட்டு வரம்பைப் பற்றி கவலைப்படாமல், LLMகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்யலாம், மாதிரி சார்புகளைச் சரிபார்க்கலாம், புதிய உடனடி நுட்பங்களையும் உத்திகளையும் பரிசோதிக்கலாம்.
எழுத்து உதவி
ChatGPT அல்லது Gemini போன்ற பிறசெய்யறிவு(AI) கருவிகளைப் போன்றில்லாமல், மின்னஞ்சல் உள்ளடக்கத்தை எழுதுவது முதல் கவிதைகள் அல்லது உரைநிரல்கள் போன்ற படைப்பு எழுத்து வரை இணைய அணுகுதல் இல்லாமல் பல்வேறு எழுத்துப் பணிகளுக்கு GPT4All ஐப் பயன்படுத்திகொள்ளலாம்.
சுருக்கமாக கூறுவதெனில்
GPT4All ஐ விரைவான , திறமையான சுருக்கமான உரை எழுவதற்குப் பயன்படுத்தலாம். இது முழு உள்ளடக்கத்தையும் படிக்காமல் பெரிய புத்தகங்கள்/இணையபக்கங்களின் முக்கிய கருத்தை தெளிவுபடுத்த இதுஉதவுகிறது.
மொழி மொழிபெயர்ப்பு
இந்த கருவியின் இணையஇணைப்பில்லாதபோதும் செயல்படுகின்ற திறனை பயணாளர்களின் விரைவான மொழி மொழிபெயர்ப்புக்காக அல்லது இணைய இணைப்பு பற்றி கவலைப்படாமல் புதிய மொழியைக் கற்றுக்கொள்ள பயன்படுத்திகொள்ளலாம்.
கல்வியும் திறன் மேம்பாடும்
புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது, தரவை பகுப்பாய்வு செய்வது, கேள்விகளை உருவாக்குவது, சிக்கலான உள்ளடக்கத்தை எளிதாக்குவது, திறன் மேம்பாடு போன்ற பல்வேறு கல்வி பயில்கின்ற நோக்கங்களுக்காக மாணவர்கள் GPT4All ஐப் பயன்படுத்திகொள்ளலாம்.

Leave a Reply