ஈ கலப்பை மென்பொருளை C++ இலிருந்து Python மொழிக்கு மாற்ற உதவுங்கள்

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். கடந்த வாரம் நடந்த virtual conference மிகச் சிறப்பான முயற்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். Opensourceஇல் பங்களிக்க புதிய உத்தவேகத்தை கொடுத்துள்ளது.
தற்போதைய இ-கலப்பை மென்பொருள் C++ மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதனை பைத்தான் மொழியில் மாற்றுவதற்கான வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்தோம். நன்பர்கள் விஜய்(github.com/gvijaydhanasekaran) மற்றும் மோகன்(github.com/mohanrex) ஆகியவர்களின் சிறப்பான பங்களிப்பினால் பைத்தான் மொழியினாலான core funcionalities அனைத்தும் எழுதப்பட்டன. திரு. விக்கிபீடியா இரவி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க வேறு மொழிகளில் தட்டச்சு செய்யும் வகையிலும் இது எழுதப்பட்டது . பைத்தான் வெர்சனில் எந்த ஒரு scimm table file கொடுத்தாலும் வேலை செய்யும். தற்போது, இது வின்டோஸ் இயங்குதளத்தில் மட்டும் வேலை செய்யும். இதனுடைய github repo – github.com/thamizha/pykalappai. சில சோதனைகள் மற்றும் மேலதிக மேம்படுத்துதலுக்குப் பிறகு மெயின் ekalappai repoவில் இது சேர்க்கப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் Open Tamil Libraryக்கான GUI Gopi Converterஐ எழுதும் வேலையும் சில காலங்களுக்கு முன்பு முன்னெடுத்தோம். அதிலும் core logicகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனை இங்கு காணலாம் – github.com/thamizha/gopiconverter/tree/develop. இ-கலப்பையுடன் சேர்ந்த Encoding Converterஆக இதனை மாற்றுவதற்கான திட்டம்.
இந்த அனைத்து முன்னெடுப்புகளிலும் உடன் நின்ற நண்பர் செல்வம் (github.com/selvamjp) அவர்களுக்கும்  நன்றிகள்.
இவற்றில் பங்களிக்க விருப்பமிருந்தால் திரு. முகுந்த் அவர்களையோ அல்லது என்னையோ மின்ஞ்சலில் தொர்பு கொள்ளலாம்.
நன்றி,
மாணிக்
மேலதிக விவரங்களுக்கு தமிழா வின் மின்னஞ்சல் குழுவில் சேருங்கள்.
%d bloggers like this: