Sim அட்டைகள் எவ்வாறு வேலை செய்கிறது ?  | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 15.

நான் எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத தொடங்கி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்த வகையில் இது என்னுடைய 15 வது எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை.

கடந்த கட்டுரையில் உள்ளார்ந்த மின்சுற்றுகள் குறித்து பார்த்திருந்தோம். அதுபோன்று என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய தலைப்பு சிம் கார்டுகள்.

சிம் கார்டுகளுக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கு போகிறது? என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.

அடிப்படையில், சிம் அட்டைகள் ஒரு தேர்ந்த உள்ளார்ந்த மின்சுற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சிம் அட்டைகளால், தொலைதொடர்பு கருவியோடு இணைக்கப்படும் போது அழைப்புகளை பெறுவதற்கும் மேற்கொள்வதற்கும் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றிற்கான அனுமதியை வழங்க முடியும்.

ஆம் நீங்கள் கேட்பது சரிதான் சிம் அட்டைகள் என்பது அனுமதியை வழங்கக்கூடிய ஒரு கடவுச்சீட்டு போல தான்.

சிம் அட்டைகளில் ஒரு மிகச்சிறிய தங்க நிறத்திலான அமைப்பு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்தில் நீங்கள் பயன்படுத்தி இருக்கக்கூடிய நோக்கியா போன்களில் பெரிய அளவிலான சிம் அட்டைகளை பார்த்திருப்பீர்கள்.

ஒரு காலத்தில் ஐந்தாறு சிம் போடக்கூடிய மொபைல் ஃபோன்கள் கூட சந்தையில் கிடைத்தன.

சிம் அட்டைகளும் குறை கடத்திகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.

அவற்றின் உள்ளாக ஒரு தேர்ந்த மின்சுற்று வரையப்பட்டுள்ளது.

அந்த உள்ளார்ந்த மின்சுற்றைக் கொண்டு உங்களால் அலைபேசி தொடர்புகளுக்கான அனுமதிகளை பெற முடிகிறது.

வழக்கமாக, சிம் அட்டைகள் இயங்குவதற்கு 5,3,1.8 ஆகிய மூன்று வோல்டேஜ் நிலைகளில் வடிவமைக்கப்படுகின்றன.

நாம் தற்பொழுது பயன்படுத்தக்கூடிய சிமட்டைகள் பெரும்பாலும் 1.80வோல்டேஜ் ன்னழுத்தத்திலேயே இயங்கக் கூடியது.

சிலர் சிம் அட்டைகளில் தங்கம் இருப்பதாக கூறி, புரளி கிளப்பி விடுவதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால், உண்மையிலேயே மிக மிகச் சிறிய அளவில் தங்கமானது சிம்ம அட்டைகளில் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, ஒரு நாலாயிரம் அட்டைகளுக்கு, ஒரு கிராம் அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என ஒப்பீட்டு அளவில் கொள்ளலாம்.

அடிப்படையில் தங்கமும் ஒரு குறை கடத்தி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

சிம் அட்டைகளுக்கு என சிறப்பு குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத் துறையில் சிம் கார்டுகள் ஐ எம் எஸ் ஐ (IMSI) என அறியப்படுகிறது.

அதன் முழு பொருள் ஆனது சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள அட்டை என பொருள்படும்.

சிம் கார்டுகளில், உங்களால் தரவுகளை சேமித்து வைக்க முடியும். உண்மையில் கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம். ஆனால், அடிப்படையில் சந்தையில் காணப்படக்கூடிய சிம் கார்டுகளில் 8 கேபி முதல் 256 கேபி வரையிலான தொடர்புகளை சேமித்து வைக்க முடியும்.

பொதுவாக சிம்கார்டு களுக்கு என சர்வதேச மொபைல் குறியீடு (MCC) முறை பயன்படுத்தப்படுகிறது.

ICCID(integrated circuit card identifier) எனும் முறையை பயன்படுத்தி உலகளாவிய அளவில் சிம்கார்டுகள் கண்டறியப்படுகின்றன மற்றும் கவனிக்கப்படுகின்றன.

இதன் மூலமாக, போலியான சிம்கார்டுகளை உருவாக்குவது கடினமான ஒன்றுதான்.

மேலும், நமக்கு தொலைதொடர்பு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அலைவரிசையிலான தொலைத்தொடர்பு இணைப்புகள் முன்பே ஏலத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதைக் கொண்டு அந்த நிறுவனங்கள் சிம் கார்டு எண்களை கொண்ட சிம்கார்டுகளை வெளியிடுகின்றன.

பொதுவாக, இத்தகைய தொலைதொடர்பு நிறுவனங்கள் carrier providers எனும் பெயரில் அறியப்படுகிறது.

அதேபோல, ஒவ்வொரு நாட்டுக்கும் என சிறப்பு குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளன உதாரணமாக, இந்தியாவிற்கு +91 என்பதை குறியீட்டு எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வரக்கூடிய மொபைல் எண் 6 முதல் 13 எண்கள் வரை இருக்கக்கூடியது.

இந்தியாவில் 10 எண்கள் கொண்ட முறையை பயன்படுத்தி வருகிறோம்..

சிம் கார்டுகள் ஒரு மொபைல் போனில் செறுகப்பட்டவுடன், அந்த மொபைல் போனில் உள்ள ஐ எம் இ ஐ  தரவுகளை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அனுப்புகிறது.

தொலைத் தொடர்பு நிறுவனம் சரி பார்த்து மொபைல் எண்ணில் சிம் கார்டுக்கான இணைப்பு அனுமதி வழங்குகிறது.

அதேபோல, தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த தரவுகளைக் கொண்டு ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை ரத்து செய்கிறது.

அல்லது ஒரு குறிப்பிட்ட நாளுக்கான டேட்டா நிறைவடைந்த உடன் இணைப்பை துண்டிக்கிறது.

மேலும், உங்களுடைய சிம் கார்டில் இருந்து ஏதேனும் சட்ட விரோதமான செயல்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் அந்த இணைப்பை அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனமும் தடை செய்கின்றன.

பொதுவாக, சிம்கார்டுகள் 128bit பாதுகாப்பு அம்சங்களோடு தான் வருகின்றன.

இருந்த போதிலும் சில திறன்மிகு உளவு மென்பொருட்களை கொண்டு தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால், உங்களுடைய அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இணைய தொடர்பு இல்லாத சாதாரண ஒரு மொபைல் போனை பயன்படுத்துங்கள்.

இணைய தொடர்பை கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை ஒட்டு கேட்பதை காட்டிலும் இதிலிருந்து ஒட்டு கேட்பது சற்றே கடினமான ஒரு காரியம்தான்.

அதேநேரம், உங்களுடைய தரப்புகளை தவறாக பயன்படுத்தி போலியான சிம்கார்டுகளை பெற்று அதிலிருந்து குற்ற செயல்களை செய்வதும் கடந்த காலங்களில் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் சரி உங்களுடைய அரசாங்கத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை தெரியாத நபர்களுக்கு அல்லது அங்கீகரிக்கப்படாத சிம்கார்டு விற்பனையாளரிடமும் வழங்க வேண்டாம்.

இவ்வாறு வழங்கும் பட்சத்தில் உங்களுடைய பெயரிலிருந்து சிம்கார்டுகளை பெற்று குற்ற செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் தொலைத் தொடர்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதில் சிம்கார்டுகளுக்கு ஒரு மிக முக்கிய பங்கு உள்ளது.

தற்காலத்தில், மென்பொருள் அடிப்படையிலான இ சிம்கள் மற்றும் மின்சுற்று அடிப்படையிலான ஐ சிம்கள் புழக்கத்தில் வர தொடங்கிவிட்டன.

பழமையான சிம்கார்டுகளை விடவும் இவற்றில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் கைகளில் எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும் சிம் கார்டுகள் முற்றிலுமாக மறைந்து விடும்.

சிம் அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்வதற்கு கடைகளில் பத்து ரூபாய் முதல் ரீசார்ஜ் கார்டுகள் கிடைத்து வந்தன.

அவற்றில் இருக்கக்கூடிய 16 இலக்கு எண்ணை உங்களுடைய தொலைபேசி வழங்குனரால் வழங்கப்பட்டுள்ள, சிறப்பு குறியீட்டோடு சேர்த்து தொடர்பு கொள்ளும்போது உங்களுடைய கணக்கில் அந்த ரீசார்ஜ் அட்டைக்கு உரிய தொகை ரீசார்ஜ் செய்யப்படும்.

அந்த 16 இலக்கு என்னை crack செய்வதற்காக நான் பலமுறை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது,ஒரே ஒருமுறை மட்டும் 10 ரூபாய்க்கு நான் உள்ளிட்ட 16 இலக்கு எண்ணின் மூலமாக ரீசார்ஜ் செய்யப்பட்டது.

ஆனால், தற்பொழுது கிடந்த ஐந்தாண்டுகளில் இருக்கக்கூடிய சிம் கார்டுகளின் வளர்ச்சி அபரிவிதமானதாக இருக்கிறது.

வருங்காலத்தில் சிம் கார்டுகளின் புது வடிவம் எப்படி இருக்கும்? என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் அனுமானங்கள் இருந்தால், என்னுடைய மின் மடலுக்கு மடல் இயற்றவும். உங்களுடைய கணிப்புகளையும் ஒரு கட்டுரையில் காணலாம்

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com

இணையம் : ssktamil.wordpress.com





%d bloggers like this: