நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக இருந்ததுதான் மெமரி அட்டைகள்(Memory cards).
ஆம்! தற்காலத்தில் மெமரி அட்டைகளை பயன்படுத்துவோர் மிகவும் குறைந்து விட்டனர். இருந்தபோதிலும், கேமராக்கள் போன்றவற்றில் இன்னும் மெமரி அட்டைகளை பார்க்க முடிகிறது.
நான் சிறுவனாக இருந்த போது யோசித்ததுண்டு!
எப்படி இவ்வளவு சிறிய ஒரு பிளாஸ்டிக் துண்டிற்குள், இத்தனை புகைப்படங்களை சேகரித்து வைக்க முடியும்?
இத்தனை பாடல்களை சேகரித்து வைக்க முடியும்? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன்.
அப்பொழுது, இரண்டு ஜிபி மெமரி கார்டை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அப்பொழுது மொபைல் போன்களில் சில எம்பிகளுக்குள்ளாகவே மெமரி வசதி(inbuilt memory)இருக்கும்.
நம்மில் பலரும் இதை கடந்து வந்திருப்போம்.
ஆனால், மெமரி அட்டைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் மிக மிக எளிமையானது.
அதற்கு முன்பாக, என்னுடைய பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் பார்வையிட விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
அடிப்படையில் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன? கொஞ்சம் வினோதமான கேள்விதான்.
அடிப்படையில் தரவுகள் சேமிக்கப்படுவதற்கு இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று பூஜ்ஜியம் மற்றொன்று ஒன்று ( 0 1)
நாம் பள்ளிகளில் லாஜிக் முறையில் படித்திருப்போம். பூஜ்ஜியம் என்றால் ஆப்(off ) என்று அர்த்தம் ஒன்று என்றால் ஆன்(ON) என்று அர்த்தம்.
அடிப்படையில், இந்த முறையில் தான் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட முறையில் ஆன்-ஆப் செய்யும் போது ஒரு தரவை உங்களால் சேமிக்க முடியும்.
அடிப்படையில், உங்களிடம் எட்டு ஸ்விட்ச்(bit) இருந்தால், உங்களால் ஒரு பைட்(byte) அளவிலான தரவை சேமிக்க முடியும்.
நீங்கள் கணினி அறிவியல் படித்திருந்தால் bit, byte தகவல்கள் குறித்து அறிந்திருப்பீர்கள்.
8bit என்றால் ஒரு பைட்(byte) என்று அர்த்தம்.
இப்பொழுது, உதாரணத்திற்கு வருவோம். உங்களுடைய மொபைல் போனில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் குறைந்தபட்சம் எத்தனை எம்பிகளுக்கு உள்ளாக இருக்கும்?
எப்படியும் ஐந்து எம்பிக்கு குறைந்து இப்பொழுது இருக்கக்கூடிய மொபைல் கேமராக்களில் புகைப்படம் எடுக்க முடியாது.
நீங்கள் கூகுளில் இருந்து ஒரு புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தால், குறைந்தபட்சம் 10 கேபி(kb)க்குள் ஒரு புகைப்படத்தை உங்களால் பெற முடியும்.
பத்து கேபி என்றால் பத்தாயிரம் பைட்கள்(10000 bytes) என்று அர்த்தம்.
அந்த பத்தாயிரம் பைட்டுகளையும் சேகரிக்க, உங்களுக்கு 80 ஆயிரம் ஸ்விட்ச்கள்(80,000 switches or bits) தேவைப்படும்.
இந்த ஸ்விட்ச் கள் என்னும் வார்த்தையை நான் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு காரணம் ட்ரான்சிஸ்டர்கள் கட்டுரையில் நீங்கள் படித்திருப்பீர்கள். டிரான்சிஸ்டர்கள் ஸ்விட்ச் போல வேலை செய்யும் என்று!
ஆம்! நீங்கள் கணித்தது சரிதான்
உங்களுடைய மிகச் சிறிய மெமரி அட்டைகளுக்குள் இருப்பது ட்ரான்சிஸ்டர்களும், கெப்பாசிட்டர்களும் அடங்கிய ஒரு ஆகச் சிறந்த உள்ளார்ந்த மின் சுற்றுதான்(best integrated circuit).
உதாரணத்திற்கு, நான் இணையத்தில் இருந்து திரட்டிய தகவலின் படி இன்டெல் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை இரண்டு ஜிபி ப்ராசஸரில்(intel third gen processor) இருக்கக்கூடிய, ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று உங்களுக்கு ஏதேனும் கணிப்பு இருக்கிறதா?
நூரெல்லாம் கிடையாது ,ஆயிரமும் அல்ல, லட்சமும் அல்ல.
சுமார் 148 கோடி ட்ரான்சிஸ்டர்கள் intel மூன்றாம் தலைமுறை சிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
கேட்கும்போதே தலை சுற்றுகிறது அல்லவா?
நீங்கள் வைத்திருக்கக் கூடிய மெமரி அட்டைகளில் இது போல கோடிக்கணக்கான ட்ரான்சிஸ்டர்கள், கோடிக்கணக்கான கெபாசிட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வெளியில் படிக்கும் போது ஒரு ட்ரான்சிஸ்டர் என்று படிப்போம். ஆனால், எவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் அதன் உள் புதைந்து இருக்கிறது என்று பார்க்கிறீர்கள் அல்லவா?
எலக்ட்ரானிக் உலகம் விந்தை நிறைந்தது, என்று சொல்வதற்கு பின்னால் இதுதான் முக்கியமான காரணம்.
அந்த கெபாசிட்டர்கள் மற்றும் ட்ரான்சிஸ்டர்களை ஆன் மற்றும் ஆப் செய்வதன் மூலமாக உங்களால் தரவுகளை சேமிக்க முடியும்.
ஆனால், ஒரு மெமரி அட்டையை இயக்குவதற்கு அதிகப்படியான மற்றும் குறிப்பிட்ட(particular environment) வெப்பநிலை மற்றும் மின்னழுத்தம் தேவைப்படும்.
அதை வழங்குவதற்கு ஏற்றார் போல, உங்களுடைய கருவிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவேளை அத்தகு விதிமுறைகளை செய்யாமல் போயிருந்தால், நீங்கள் வெளியில் வைத்திருக்கும் போது கூட உங்கள் மெமரி அட்டையில் தரவுகள் சேமிக்கப்பட்டு விடும்.
இதன் காரணமாகத்தான் மெமரி அட்டைகளை பொதுவாக வெயிலில் வைக்க கூடாது! என வெளிஅட்டைகளில் போடப்பட்டிருக்கும்.
மேலும், சில நேரம் அதிகமாக சூடாகும்போது உங்களுடைய தரவுகள் தானாக அழிந்து போய் விடுவதும் நடக்கும்.
ஆனால், இந்த காலத்தில் தொழில்நுட்பம் நீங்கள் கற்பனை செய்து பார்ப்பதை விடவும் மிக வேகமாக வளர்ந்துவிட்டது.
இன்றைக்கு கடலுக்குள் கிளவுட் ஸ்டோரேஜ் நிலையங்களை(under sea cloud stronge chambers)அமைக்கின்ற அளவுக்கு எலக்ட்ரானிக் துறையின் வளர்ச்சி மலைக்க வைக்கிறது.
ஆனால், இந்த எலக்ட்ரானிக் உலகின் அடிப்படையே, நாம் முதல் பத்து கட்டுரைகளில் கடந்து வந்த கெபாசிட்டர்கள்,டிரான்சிஸ்டர்கள், டையோடுகள் உள்ளிட்ட சிறு சிறு சாதனங்கள் தான்.
ஏன்! இரண்டு லட்சம் டான்சிஸ்டர்களில் ஒரு பாதியை ஆன் மற்றும் ஒரு பாதியை ஆப் செய்து, ஒரு குறிப்பிட்ட முறையில் ஒருங்கிணைக்கும் போது உங்களால் உங்களுக்கு பிடித்த சினிமா பாட்டின் சில வரிகளை கூட உருவாக்க முடியும்.
இந்த எலக்ட்ரானிக் உலகில் இரண்டே வார்த்தைகள் தான் ஒன்று ஆன் மற்றொன்று ஆப்.
இந்த இரண்டை மட்டும் வைத்துக் கொண்டுதான் எலக்ட்ரானிக் உலகமும், கணினி உலகமும் நாம் வாழும் புவியை ஆட்டி படைக்கின்றன.
சரி இந்த கட்டுரையின் மூலமாக புதுவிதமான தகவலை அறிந்து கொண்டிருப்பீர்கள்! என்று நம்புகிறேன்.
மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் ஏற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com