i3 window manager

சமீபத்தில் KDE ல் இருந்து i3 window manager க்கு மாறி உள்ளேன்.

எனது பழைய கணினியில் 8 GB RAM இருந்தாலும், linux mint cinnamon மெதுவாக வேலை செய்கிறது. அலுவலக கணினியில் 16 GB RAM இருப்பதால் KDE வேகமாகப் பறக்கிறது.

இரு கணினிகளிலும் மாறி மாறி வேலை செய்வதால், இரண்டின் வேக மாறுபாடு காரணமாக, சோர்வு நேரிடுகிறது.

இதனை தீர்க்க வழி தேடியபோது, i3 window manager பற்றி அறிந்தேன். இது மிகவும் குறைவான RAM எடுத்துக் கொள்கிறது. ஆடம்பர வசதிகள் ஏதுமில்லை. தேவையெனில் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வசநிகள் உண்டு.

பொதுவான விண்டோ இயக்க முறைகள் ஏதும் இங்கு இல்லை. எல்லாமே விசைப்பலகை மூலம் தான். config file மூலம் மட்டுமே எல்லா வசதிகளையும் சேர்க்க இயலும். கற்க சற்றே சவாலாதுதான். புதியவருக்கு உகந்தது அல்ல. ஆயினும் முயன்றால் சில மணி நேரங்களில் கற்றுக் கொள்ள இயலும்.

i3 window manager க்கு மாறிய பின், பழைய கணினியும் பட்டாசாகப் பறக்கிறது.

KDE இயங்கும் போது, என் மடிக்கணினியில் அரிசி மாவு அரைக்கும் அரவைச்சாலைகளில் கேட்கும் டொர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பல வகைகளில் முயன்றும் நீக்க முடிய வில்லை. அப்படியே பழகி விட்டேன்.

i3 window manager ல் எந்த இரைச்சலும் இல்லை. மடிக்கணினி சமர்த்தாக, அமைதியாக இயங்கி வருகிறது.

லினக்சில் புது நுட்பங்கள் கற்ற ஆர்வமுள்ளோர் i3 window manager பழக வேண்டுகிறேன்.
இன்னும் இன்னும் என வேண்டுவோர், Emacs எடிட்டர் காண்க.
அதெல்லாம் பத்தாது என்போர் Arch Linux பக்கமாக ஒதுங்கி, ஆராய்ச்சிக் கடலில் மூழ்கி இன்புறுக.

த. சீனிவாசன்

 

%d bloggers like this: