சில நாட்களிற்கு முன்னர் நான் தமிழ்நாடு மாவட்ட ரீதியிலான literacy map ஐ வெளியிட்டிருந்தேன்.
இதனை நான் எவ்வாறு செய்தேன் என்பதை எழுதும்படி நண்பர் tshrinivasan கேட்டிருந்தார்.
Write a blog on how to create such maps.
— த.சீனிவாசன் (@tshrinivasan) December 29, 2018
இப்போது நாம் இங்கு இந்தியாவின் மாநில ரீதியிலான literacy map ஐ உருவாக்கப போகின்றோம்.
தேவையானவை
1 – QGIS
ஒரு open source software. இது புவியியல் தரவுகளை process செய்யவும், வரை படங்களை உருவாக்கவும் பயன்படுகிறது.
இதனை qgis.org என்ற வலை தளத்திலிருந்து download செய்து install செய்ய முடியும்.
2 – Base map
இந்தியாவின் digital வரைபடம் அதன் மாநில எல்லையுடன் shapefile ஆக உள்ளது.
நீங்கள் “India states shapefile” என இணையத்தில் தேடும் பொழுது பல files கிடைக்கும். அதில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Hindustan Times public repository என்ற repository இலிருந்து பெற்ற file ஐ நான் பயன்படுத்தப் போகின்றேன்.
[Shapefile/india/state_ut/india_2000–2014_state.zip இதனை unzip செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.]
நான் இங்கு pre-Telangana map ஐ தெரிவு செய்துள்ளேன்.ஏனெனில் அதில் தான் 2011 இலிருந்து தரவுகள் உள்ளன.
3 – இந்திய மாநிலங்களின் எழுத்தறிவு அளவு பற்றிய தகவல்கள்.
“India states literacy csv” என இணையத்தில் தேடினால் பல தரவுகள் கிடைக்கும்.
இதற்காக நான் 2011 சனத்தொகை கணக்கெடுப்பு website இலிருந்து ஒன்றைப்பயன்படுத்தப் போகின்றேன்.
censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/india/Statement5_Literate&LitRate_State.xls
தரவுகள் தயார்
இப்பொழுது நாங்கள் 2 மூலங்களிலிருந்து பெற்ற தரவுகளை வைத்திருக்கின்றோம்.
1- Hindustan Times இலிருந்து பெற்ற Geographic data
2- 2011 census website இலிருந்து பெற்ற Literacy data
எங்களுடைய இந்த map ஐ செய்வதற்கு இந்த 2 data வையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
1- QGIS ஐ open செய்து புதிய project ஐ உருவாக்க வேண்டும்.
Project -> New project
2- Layer -> Add layer -> Add Vector Layer என்பதைப் பயன்படுத்தி map ஐ சேர்க்கவும்.
3- Coordinate system ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.
Then WGS84 ஐ select செய்து ok ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Layer ஒரு தடவை add ஆகியதும் add layer button ஐ close செய்யவும்.
4- இப்பொழுது நீங்கள் main area இல் map ஐ load செய்ய வேண்டும்.
அத்துடன் legend entry data layer படத்தில் உள்ளவாறு காணப்பட வேண்டும்.
5- இப்பொழுது layer இன் மீது right click செய்து Open Attribute Table ஐ select செய்ய வேண்டும்.
6- நீங்கள் அங்கு 2 columns மட்டும் இருப்பதைக் கண்டு கொள்வீர்கள். – The id and the state name
நாங்கள் 3வதாக literacy rates என்ற column ஐ. உருவாக்க வேண்டும். இதற்கான தரவு census data இலிருந்து பெறப்படும். Attribute Table ல் மஞ்சள் நிற பென்சில் ஐகானை கிளிக் செய்யவும்.
7- Add Column button ஐ click செய்து literacy column ஐ decimal number ஆல் நிரப்பவும்.
8- அடுத்து புதிதாக add செய்யப்பட்ட column இல் excel sheet இலிருந்து literacy rates ஐ add செய்யவும். (குறிப்பு – Data Layer மூலமாக CSV கோப்பில் இருந்தும் தரவுகளை ஏற்றலாம். இப்போதைக்கு நாமாகவே தகவல்களை சேர்ப்போம்)
9- ஒரு தடவை நீங்கள் literacy values வை add செய்ததும் save edits icon ஐ click செய்யவும். இப்பொழுது yellow pencil button ஐ click செய்து மீண்டும் editing ஐ நிறுத்தவும். இது மிகவும் முக்கியம். இல்லையேல் வேறு எங்காவது கிளிக் செய்து தேவையற்ற மாற்றங்களை உருவாக்கி விடுவீர்கள்.
10- இப்பொழுது நீங்கள் இந்த படத்திலுள்ள table ல் உள்ளவாறு தரவுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
11- attribute table ஐ close செய்யவும்.
வரைபடத்தை அழகாக்குதல்
1- Layers sidebar இல் உள்ள map layer இல் வலது கிளிக் செய்து properties ஐ select செய்யவும்.
2- properties window இல் உள்ள side menu இல் உள்ள Symbology ஐ select செய்யவும்.
3- உங்களது Styling window இல் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள மாற்றங்களை செய்யவும்.
a.A- Style ஐ “single symbol” இலிருந்து Graduated க்கு மாற்றவும்.
b.B- “Literacy” ஐ column ஆக select செய்யவும்.
c.C- precision ஐ நீங்கள் விரும்பியவாறு set செய்யுங்கள்.(இது வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள மதிப்புகளின் தசம புள்ளிகளைக் குறிக்கின்றது ). நான் வழமையாக 0 அல்லது 1 ஐ விரும்புகிறேன்.
d.D- நீங்கள் விரும்பியவாறு ஒரு Color Ramp ஐ தெரிவு செய்யுங்கள். நான் wikipedia வை அடிப்படையாகக் கொண்ட wikipedia இற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்துள்ளேன்.
e.E- Mode என்பதை “Preety Breaks” இற்கு மாற்றுங்கள். வலதுபக்க மேல் மூலையில் “Classes” எனும் tab தானாக populate ஆகியிருக்கும். அடுத்ததாக நீங்கள் தான் தெரிவு செய்வீர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் F ஐ பயன்படுத்தவும்.
f.F- உங்களுடைய “Classes” தானாக தோன்றாவிட்டால் “Classify” button ஐ click செய்யவும்.
4- இங்கு நாங்கள் edit செய்த Legend precision and color ramp உங்களுக்கு திருப்தியாக இருந்தால் ok ஐ click செய்து styled choropleth map ஐ பார்க்கலாம்.
வரைபடத்தை Export செய்தல்
நமநு விருப்பத்திற்கு ஏற்றதான styled map இப்போது தயாராக உள்ளது.
இதனை பகிர வேண்டும் என்றால் நாம் முதலில் இதனை export செய்ய வேண்டும்.
1- “New print layout” button ஐ click செய்யவும். Name ஐ enter செய்யவும். Ok ஐ click செய்யவும்.
2- Empty page ஐ கொண்ட Layout window ஒன்றைப் பெறுவீர்கள்.
3- Menu வில் Add item இல் Add map ஐ select செய்யவும். தேவையான அளவுக்கு curser ஐ click செய்து இழுக்கவும்(drag).
4- இந்த படி முறை தேவையென்றால் செய்யவும்(optional)
Box இன் உள்ளே map ஐ சுற்றி தேவையற்ற white space காணப்படுகின்றன. அளவை(scale) குறைப்பதன் மூலம் எங்களால் வரைபடத்தை சிறிது பெரிதாக மாற்ற முடியும். வலது பக்கத்திலுள்ள Item properties tab இல் scale இன் value வை குறைக்க முடியும்.
5- Add item ஐ click செய்து Add legend ஐ select செய்யவும். Legend ஐ create பண்ண curser ஐ click செய்து இழுக்கவும்(drag).
பொதுவாக இந்திய வரைபடங்கள் இதற்காக வங்காள விரி குடாவை பயன்படுத்துகின்றன.நானும் இங்கு அதனைத்தான் செய்யப் போகின்றேன்.
6- இங்கு legend title ஐ layer name குறிப்பிடுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
ஆனால் Literacy map என்பது என்னவென்றுதான் நாம் உண்மையில் சொல்ல வேண்டும். இதனை சரி செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யவும்.
a. வலது பக்கமுள்ள Item properties tab இன் கீழ் உள்ள Main properties இல் உள்ள Title இல் “Literacy Rate” என type செய்யவும்.
b. வலது பக்கமுள்ள Item properties tab இல் Main properties இன் கீழே உள்ள layer name இல் double click செய்து Literacy name என type செய்யவும்.
7- இப்பொழுது வலது பக்கத்தில் மேலதிக white space காணப்படும். அதனை இப்பொது edit செய்ய வேண்டும்.
அதற்கு வலது பக்கத்திலுள்ள Latout tab ஐ select செய்து scroll doqn செய்து Resize Layout to content இல் Resize Layout ஐ click செய்யவும்.
இப்போது map மட்டும் resize ஆகியிருக்கும்.
8- அடுத்ததாக menu இல் Layout ஐ click செய்து Export as Image ஐ select செய்யவும்.
நீங்கள் விரும்பிய இடத்தில் file name ஐ type செய்து save செய்யவும்.
அழகிய வரைபடம் இதோ
மூலக்கட்டுரை – arunmozhi.in/2019/01/01/india-literacy-map-with-a-how-to/
எழுதியவர் – அருண்மொழி
தமிழாக்கம் – இன்பநாதன் கேந்திரன் – kenthiran06@gmail.com