KanchiLUG மாதாந்திர சந்திப்பு – ஏப்ரல் 9, 2023

KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 09, 2023 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது

சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet

எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம்.
அனைத்து விவாதங்களும் தமிழில்.

பேச்சு விவரங்கள்:

பேச்சு 0:
தலைப்பு: i3 விண்டோ மேனேஜர் – ஒரு அறிமுகம்

விளக்கம் : லினக்ஸ் இயக்குதளத்தில், பல்வேறு செயல்களை எளிதில் விசைப்பலகை வழியே செய்யலாம். மவுஸ் (சுட்டி) யின் துணை இல்லாமல், விசைப்பலகை வழியே மிக விரைவாக, எல்லா செயல்களையும் செய்து விட முடியும். புதிதாக கணினி கற்போருக்கு சுட்டி எளிதாக இருக்கலாம். ஆனால், கணினியை திறம்பட பயன்படுத்த விரும்புவோருக்கு, விசைப்பலகையே சிறந்தது.

லினக்சில், விசைப்பலகை மூலமே இயக்கப்படும் பல விண்டோ மேனேஜர்கள் உள்ளன. அவற்றின் பயன்பற்றியும், அவற்றை நிறுவி, இயக்குதல் பற்றியும் இந்த உரையில் காண்போம்.

i3 window manager என்பது பற்றி காண்போம்

காலம்: 30 நிமிடங்கள்
பேச்சாளர் பெயர்: பரமேஷ்வர் அருணாசலம்
பேச்சாளர் பற்றி: ஒரு BTW பயனர் மற்றும் Linux Fanboy

பேச்சு 1:
தலைப்பு : loopback device – ஒரு அறிமுகம்

 

விளக்கம்:  லினக்சில் loopback device மூலம் ISO கோப்புகளை திறந்து, அவற்றை mount செய்து எளிதில் அணுக இயலும். இதன் செயல் முறை விளக்கத்தை இந்த உரையில் காண்போம்

காலம்: 30 நிமிடங்கள்
பேச்சாளர்: இரா. மோகன்
பேச்சாளர் பற்றி: பன்னெடுங்கால லினக்ஸ் பயனர்

 

பேச்சுக்குப் பிறகு: கேள்வி பதில், பொது விவாதம்

KanchiLUG பற்றி : காஞ்சி லினக்ஸ் பயனர்கள் குழு [ KanchiLUG ] நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரத்தில் இலவச/திறந்த மூல மென்பொருள் (F/OSS) பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருகிறது.

யார் வேண்டுமென்றாலும் இணையலாம்! (நுழைவு இலவசம்).
அனைவரும் வருக.
இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

%d bloggers like this: