கணியம் அறக்கட்டளை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன் 2020 மாத அறிக்கை

Report in Tamil

Report in English

தொலை நோக்கு – Vision

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

பணி இலக்கு – Mission

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

நிகழ்ச்சிகள்

1000 மின்னூல்கள்

Published a call for donation to buy 1000 ebooks in unicode format here – www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/

ஒரு இனிய செய்தி

கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும். இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் – டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னூல்களை பொதுக்கள உரிமையில் வெளியிடுவதற்கான அறிவிப்பு ஆவண உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கான பொது அறிவிப்பு – தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு

3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம்.

இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.

செயல்கள்

எண் செயல்கள் இந்த மாதம் மொத்தம் இம்மாதம் பங்களித்தோர்
1 FreeTamikEbooks.com வெளியீடுகள் 56 653 லெனின் குருசாமி – நவீன்ராஜ் – தமிழ்ச்செல்வன்- த.சீனிவாசன் – இராஜேஸ்வரி
2 கணியம் கட்டுரைகள் 68 1090 கலீல் – ச.குப்பன் – இரா. அசோகன்- முத்து
3 கணியம் காணொளிகள் 5 66 கலீல் – சீனிவாசன் – லெனின் குருசாமி

விக்கிமூலம்

விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். 36 மின்னூல்கள் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 12 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.

காண்க ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்

மென்பொருட்கள்

மின்னூல்களை வருட குறைந்த விலை வருடிப்பெட்டி செய்தல் Low cost ScanBox

மின்னூல்களை வருட குறைந்த விலை வருடிப்பெட்டி ஒன்று செய்துள்ளோம். github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/73 இதன் மூலம் எளிதாக, மொபைல் கொண்டே நூல்களை ஒளி வருடல் செய்யலாம்.

பெயர்ச்சொற்களைத் தொகுத்தல்

தமிழின் அனைத்து பெயர்ச்சொற்களையும் தொகுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். விவரங்கள் இங்கே

இந்த விரிதாளில் docs.google.com/spreadsheets/d/1FqiFLstsTo6DXsPKPKzp7iPKR49Ml2k81UPR6Nq6inQ/edit?usp=sharing மொத்தம் 90,811 பெயர்ச்சொற்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அயராது இப்பணிக்கு பங்களிக்கும் திவ்யா அவர்களுக்கு நன்றி.

இதுவரை சேகரமான அனைத்து பெயர்ச்சொற்களையும் இங்கே பகிர்ந்துள்ளோம் – github.com/KaniyamFoundation/all_tamil_nouns

வன்பொருள் நன்கொடைகள்

  • 2 மடிக்கணினிகள் – டேவிட் ராஜாமணி
  • 1 டேப்லட் – டேவிட் ராஜாமணி
  • 1 ஐபோன் – டேவிட் ராஜாமணி
  • 2 கிண்டில் – விஜயகுமார்
  • 2 வருடிப் பெட்டி – சீனிவாசன்
  • DSLR D70S கேமரா – சீனிவாசன்
  • 1 மடிக்கணினி – பேரா, பார்த்தசாரதி
  • 1 மடிக்கணினி – நித்யா

மேலும் விவரங்களுக்கு காண்க – github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/84

புதிய திட்டங்கள்

பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம். github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues

அவற்றுல் சில.

இம்மாத நன்கொடையாளர்கள்

எண் பெயர் தொகை
1 கமலா 3000
2 சிவகுமாரி ஆவுடையப்பன் 2,001
3 விஜய சந்தானம் 3000
4 சண்முகம் 200
5 அமேசான் மின்னூல் விற்பனை 690
6 சபாபதி 660
மொத்தம் ரூ 9,151

இணைய வளங்கள் நன்கொடைகள்

  • நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
  • த. சீனிவாசன் – சர்வர் ( ரூ 730/மாதம்)

செலவுகள்

எண் பெயர் தொகை விவரங்கள்
1 தாரகேஸ்வரி மின்னூலாக்கம் 16,000
2 சோபியா விக்கிமூலம் மெய்ப்பு 3530
4 பிரியா மின்னூலாக்கம் 6000
5 ஐஸ்வர்யா மின்னூலாக்கம் 12457
6 ஆதித்யா விக்கிமூலம் மெய்ப்பு 430
7 தீபா அருள் விக்கிமூலம் மெய்ப்பு 7301
8 சூரியா மின்னூலாக்கம் 6000
9 இரமேஷ் குமார் விக்கிமூலம் மெய்ப்பு 6545
10 சசி விக்கிமூலம் மெய்ப்பு 1265
11 லோகநாதன் விக்கிமூலம் மெய்ப்பு 1270
12 தமிழ் மண் பதிப்பகம் அடுத்த மின்னூல்களுக்கான முன்பணம் 50,000
மொத்த செலவுகள் ரூ 60,798

இருப்பு – ரூ 2,22,635

இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing

வங்கிக் கணக்கு விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618

  • உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
  • நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com

 

குறிப்பு

பல்வேறு காரணங்களால், சில மாதங்களாக, மாத அறிக்கை அனுப்பத் தவறி விட்டோம். அருள்கூர்ந்து மன்னிக்கவும். இனி ஒவ்வொரு மாதமும் அனுப்புவோம். தவறினால், தயங்காமல் சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். நன்றி.

%d bloggers like this: