மேமாதம் பதினைந்தாம் நாள் அமெரிக்க நகரமான ராக்விவில்லிலிருந்து ஹல்க்ரெஸ்ட் லேப் hillcrestlabs நிறுவனம் அறிவித்து இருப்பதாவது,”கைலோ “Kylo தொலைக்காட்சிக்கான இணைய உலாவி என்ற இணைய உலாவியின் மூலக் குறியீடுகளை திறவூற்று மென்பொருள் படைப்பவர்களிடம் கொடுத்துள்ளது. பல விருதுகளைப் பெற்ற கைலோ இணைய உலாவி இலவசமாகக் கிடைக்கிறது. மோசில்லா இணைய உலாவியை அடிப்படையாக் கொண்ட கைலோ ஒரு சிறந்த தொலைக் காட்சி உலாவியாகும். இணையத்துடன் இணைக்கப்படும் வசதிகள் உள்ள தொலைக்காட்சிகாட்சிப் பெட்டிகளில் ஃப்ரீஸோர்ஸ் எனும் சுட்டி கொண்டி இணையத்தை உலா வரலாம் இணையத்தில் கிடைக்கும் காணோளிகளைத் தொலைக்காட்சியில் காணலாம். மேலும் பல இணைய விளையாட்டுக்களை தொலைக் காட்சியிலேயே விளையாடலாம். கைலோ இணைய உலாவி மூலம் ஒரு தொலைக் காட்சிப் பெட்டி ஒரு கணினியாகவும் செயல் படுகிறது.தற்போது மைக்ரோசாப்ட் விண்டாசிலும் ஆப்பிள் கணினிகளிலும் கைலோ செயல் படுகிறது.
கைலோவின் மூலக் குறியீடுகள் மோசில்லாவின் பொதுவுடமை உரிமம் இரண்டை அடிப்படையாக்க் கொண்டு வெளியிடப்படுகிறது. மென்பொருள் பொறியாளர்கள் கைலோவை இன்னும் மேம்படுத்தவும், இன்னும் பல உக்திகளை இணைத்து கைலோவை சிறப்படைய வைக்க முடியும் என்று ஹில்க்ரெஸ்ட் நிறுவத்தினர் நம்புகின்றனர்.விலை கொடுத்து வாங்கும் வியாபார உரிமம் இல்லாமலேயே மூலக் குறியீடுகளை நகலெடுக்கவோ, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ முடியும். கைலோ எதிர்காலத்தில் ஆக்கமான வளர்ச்சி பெற ஹில்க்ரெஸ்ட் நிறுவனமும் எல்லா உதவிகளையும் செய்வதோடு கணினிப் பொறியாளர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறது. திறவுற்று ஆர்வலர்களிடம் கைலோவை ஒப்படைப்பது மூலம் இன்னும் புதிய கண்டுபிடிப்புகளினால் இந்தத் தொலைக்காட்சி இணைய உலாவி இன்னும் மெருகேற்றப் படலாம் என்று நம்பப் படுகிறது. தொலைக்காட்சிக்கென்றே தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த இணைய உலாவியில் காணொளி காண்பதற்கென்றெ அதிகமான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. பெரிய எழுத்துருக்கள்,தொடர்புச் சுட்டிகள் மூலம் தொலைக் காட்சி வழி இணைய உலா எளிதானதாகவும், கண்களுக்கு சோர்வைத் தரா வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே கைலோ மற்ற இணைய உலாவிகளிலிருந்து வேறுபட்டு இருக்கிறது. திரையிலே தெரியும் விசைப் பலகை வழியாக பயனீட்டாளர்கள் கைலோவைப் பயன் படுத்துவதற்கும் வழி இருக்கிறது.
கைலோ ஒழுங்காக செயல் பட ஃப்ரிஸ்பேஸ் என்ற சுட்டித் தேவைப்படுகிறது. இன்று தொலைக்காட்சியை இணைய உலாவிற்கு என்று பயன் படுத்தும் நிறுவனங்களான சோனி, ரோக்கு, லாஜி டெக்ஸ், எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன. மேலும் விபரங்களுக்கு www.hillcrestlabs.com என்ற இணையத் தளத்தை அணுகவும்.
கைலோ திறவுற்றாளர்களின் கைகளில் தவழுவதால் மெள்ள மெள்ள இணைய உலாவிகளின் சரித்திரம் புதிதாய் உருவாக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது, கைலோ வளர்ச்சி பெற்றால் கணினி இல்லாமலே ஒருவரால் இணையத்தை எளிதாக உலாவர இயலும். அலைபேசிகளுக்குள் கணினிகள் ஒளிந்து இருப்பது போல தொலைக் காட்சிப் பெட்டிகளும் கணினிகளாகவும் செயல் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
~சுகந்தி வெங்கடேஷ்