கூட்டங்களில் குறிப்புகளை எடுப்பதற்கு உதவியாளர்கள் யாரும் இல்லை என்பவர்களுள் பெரும்பாலானோர் Evernote, Simplenote, Google Keep போன்ற பயன்பாடுகளை பயன்–படுத்தி கொள்வார்கள் இவை அவ்வாறான செயல்களுக்கு சிறந்த கருவிகள்தான் ஆயினும் இவையனைத்தும் தனியுடைமை பயன்பாட்டுகருவிகளாகும் அதனால் இவைகளுக்கு மாற்றாக அதிலும் முக்கியமாக Evernote என்பதற்கு மாற்றாக கற்றற்ற பயன்பாடுகள் உள்ளனவா என கோருபவர்களுக்கு கைகொடுக்க ஏராளமான அளவில் உள்ளன அவைகளுள் Laverna என்பது இணையத்தின் அடிப்படையில் செயல்படும் சிறந்த கட்டற்ற பயன்பாடாகும் இந்த Laverna என்பது தனியான கணினியில் இயங்கும் வகையிலும் இணையபதிப்பாகவும் கிடைக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக laverna.cc/ எனும் முகவரியிலான இதனுடைய முகப்பு பக்கத்திற்கு செல்க அதில் Start using nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் பக்கத்தில் Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து நம்முடைய குறிப்புதாளினை மறையாக்கம் செய்து பாதுகாப்பாக வைப்பதற்கான கடவுச்சொற்களை உள்ளீடு செய்து கொண்டு Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
1
உடன் காலியான பக்கம் குறிப்புகள் எடுப்பதற்கு தயாராக விரியும் தொடர்ந்து Laverna ஐ பயன்படுத்தி கொள்வதற்கு முன் இந்த குறிப்புகளை எங்கு சேமித்திடவேண்டும் என கட்டமைத்து கொள்க அவ்வாறு சேமிக்கவில்லையெனில் இந்த பயன்பாட்டினை விட்டு வெளியேறியவுடன் நம்முடைய குறிப்புகளும் அழிந்துவிடும் பொதுவாக இணையத்தில் கோப்புகளை சேமித்திடDropbox என்பதை பயன்படுத்தி கொள்வார்கள் ஆயினும் இது ஒரு தனியுடைமை பயன்பாடாகும் அதற்கடுத்ததாகremoteStorage,என்பது மேக–கணினியின் அடிப்படையில் செயல்படுவதாகும் அதைவிட 5apps.com/storage/beta என்ற முகவரியில் செயல்படும் 5apps என்பது சிறந்த சேமிப்பகமாகும்.நம்முடைய குறிப்புகளை சேமிப்பதற்காக நாம் விரும்பிய வகையை தெரிவுசெய்துகொள்வதற்காக திரையின் மேலே இடதுபுறமூலையில் உள்ள hamburger எனும் பட்டியை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து Settings=> Sync=>என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நாம் விரும்பும் சேவையை தெரிவுசெய்து கொண்டு Save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் அதே இடதுபுறமூலையிலுள்ள அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் நாம் இந்த குறிப்புகள் எடுப்பதற்காக அறிந்தேற்ப செய்ய Laverna எனும் கட்டற்ற பயன்பாட்டினை அனுமதிக்கின்றோமா என கோரும் ஆம் என அனுமதித்திடுக இப்போது நாம் குறிப்புகளை எடுத்திட தயாராக உள்ளோம் அதனால் New Note எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதக உடன் புதிய பக்கம் தயாராக இருக்கம் அதனுடைய இடதுபுற பலகத்தில் நாம் குறிப்புகளைதட்டச்சு செய்தால் வலதுபுற பலகத்தில் முன்காட்சியாக தோன்றிடும்
இந்த குறிப்புகளை நாம் விரும்பும் வடிவிற்கு வடிவமைப்பு செய்து கொள்ளலாம் தேவையெனில் உருவப்படங்களை அல்லது கோப்புகளை அல்லது இணைய பக்கங்களின் இணைப்புகளை குறிப்புகளுக்கு இடையில் உட்பொதிந்து கொள்ளலாம் முடிவாக Saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்துகொள்க பின்னாட்களில் நாம் இதனை பார்வையிட அல்லது திருத்தம் செய்திட விரும்பும் போது இதனுடைய திரையின் மேலே Select notebook எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன் இவ்வாறான குறிப்புகளை பட்டியலாக திரையில் காண்பிக்கும் மேலும் இவைகளை Blog Post Notes என்பதன்வாயிலாக குழுவாக வகைப்படுத்தி குறிப்புகளின் புத்தகம் போன்று தொகுத்திடலாம் அதன்வாயிலாக நமக்கு தேவையானவற்றைமட்டும் வடிகட்டி பட்டியலிடச் செய்திடலாம் ஏற்கனவே குறிப்புகள் எதுவும் இல்லையெனில் Add a new notebook என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து புதியதை பட்டியலில் சேர்த்திடலாம்
3.
இந்த Laverna எனும் கட்டற்ற பயன்பாடானது கணினிமட்டுமல்லாத மடிக்கணினி திறன்பேசி ஆகிய எந்தவொரு சாதனத்திலும் செயல்படும் திறன்மிக்கது அவ்வாறு எந்தவொரு சாதனத்திலும் பயன்படுத்தி கொள்வதற்காக திரையின் மேலே இடதுபுறமூலையில் உள்ள hamburger எனும் பட்டியை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து Settings=> Import & Export=>என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் Settings என்பதன் கீழ் Export settings. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கோப்புகள் நம்முடைய சாதனத்தில் laverna-settings.json எனும் பெயரில் சேமிக்கப்படும் இந்த கோப்புகளை மின்னஞ்சல் வாயிலாக நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி சேமித்து கொள்ளலாம் அல்லது ownCloud , Nextcloud ஆகிய பயன்பாடுகள் வாயிலாக மேககணினியில் சேமித்து கொள்ளலாம் இவ்வாறு சேமித்தபின்னர் மற்ற சாதனங்களுக்குசென்றுதிரையில் நேரடியாக Import என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தி ரையின் மேலே இடதுபுறமூலையில் உள்ள hamburger எனும் பட்டியை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து Settings=> Import & Export=>என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Settings, என்பதன் கீழ் Import settings. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் laverna-settings.json எனும் கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு Open எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க இவ்வாறுவேறு சாதனங்களில் Laverna ஐ பயன்படுத்த முயலும் போது அந்த சாதனத்தினை இந்த பயன்பாட்டில் பதிவுசெய்யவேண்டும் இதற்காக நம்முடைய கடவுச்சொற்களை கொண்டு உள்நுழைவு செய்திடவும் வேண்டும் என்ற செய்தியை மனதில் கொள்க Evernote எனும் தனியுடைமை பயன்பாட்டில் Laverna எனும் கட்டற்ற பயன்பாடு போன்று குறிப்புகள் எடுத்தபின்னர் தேவையானவாறு திருத்தம் செய்து தொகுத்திடமுடியாது மேலும் Markdown எனும் வசதியுடன் குறிப்புகளை புத்தகம் போன்று தொகுத்திடமுடியாது என்ற செய்தியை மனதில் கொண்டு Laverna எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது