Pandas என்பது Python மொழி மூலம் வெள்ளமெனப் பெருகி வரும் தகவல்களை எளிதில் கையாள உதவுகிறது.
இந்த நூலைப் படிக்க, பைத்தான் மொழியின் அறிமுகம் அவசியம்.
பல்வேறு வகைகளில், வடிவங்களில் தகவல் இருப்பதால், அவற்றில் இருந்து தேவையான விவரங்களைப் பெறுவது கடினம். ஆனால் Pandas மூலம், தகவல்களை எளிதில் உருமாற்றி, அவற்றின் பின் உள்ள விவரங்களைப் பெற்று, முக்கிய முடிவுகளை எடுக்கப் பயன்படுத்தலாம்.
சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது ‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023’ ல் இந்த மின்னூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Pandas பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Jupyter Notebook மூலம் பைதான் மொழி கற்றல் - ஒரு அறிமுகம் Jupyter Notebook என்பது பைதான் நிரல் எழுதுவதற்கான ஒரு மென்பொருள்…
எழுத்து: ச.குப்பன் இன்றைய சூழலில், தரவுகள் தான் அனைத்து செயல்களுக்குமான மூலமாக விளங்குகின்றன. அபரிதமாக இணைய பயன்பாட்டு வளர்ச்சியினால், ஒவ்வொரு நொடியும் கணக்கிடமுடியாத அளவிற்கு இந்த தரவுகள் உருவாகிக்கொண்டே உள்ளன . அதற்கேற்ப ஏராளமான நிறுவனங்கள் இந்த தரவுகளைத் திறனுடன் கையாளுவதற்காகப் புதுப்புது வழிமுறைகளையும், மென்பொருள் கருவிகளையும் உருவாக்கி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறானவைகளுள் பாண்டாஸ் (Pandas) எனும் திறமூலக் கருவியும் ஒன்றாகும். பைத்தானினுடைய (Python) நம்பி (numpy) எனும்…
Location & Display properties ஒரு டேட்டாஃப்பிரேமில் இருப்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நமது தேவைக்கு ஏற்றவாறு வெட்டி எடுத்து, பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வதற்கு உதவும் வழிமுறைகளை இப்பகுதியில் காணலாம். (Slicing - Dicing Methods) . மேலும் ஒரு டேட்டாஃப்பிரேம் திரையில் வெளிப்படும்போது அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் ஒருசில பண்புகளையும் இப்பகுதியில் காணலாம். https://gist.github.com/nithyadurai87/b0e136ad8dc13be234fb0bf43f973a70 இங்கு girls.csv எனும் கோப்பில் ஒருசில யுவதிகளின்…