பைந்தமிழ் (PyTamil) என்பது ஒரு பைதான் நிரலாக்கப் பொதி. இதன் மூலம் தமிழ் எழுத்துகளை பைதான் மொழியில் எளிதில் கையாளலாம். Open-Tamil தொகுப்பு போல இதுவும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் வார்த்தைகளை சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், மாத்திரை அளவிடல், குறள், வெண்பா – யாப்பு ஆராய்தல் ஆகியவற்றை செய்யலாம்.
காண்க – srix.github.io/pytamil/
மூலநிரல் – github.com/srix/pytamil
அதன் உருவாக்குனர் திரு. ஶ்ரீராம் neosrix@gmail.com (பெங்களூர்) இன்று பைந்தமிழ் பற்றிய நேரடி நிரலாக்க நிகழ்வு, இணைய வழியில் நடத்திக் காட்ட உள்ளார்.
நாள் – பிப்ரவரி 13 2021
நேரம் – பிற்பகல் 3-4 (இன்று, இன்னும் சில மணி நேரங்களில்)
இணைப்பு – www.twitch.tv/neosrix
பொருளடக்கம் ;
3.00 – Intro to Pytamil (பைந்தமிழ்) project
3.10 – How to analyse Venba (வெண்பா)
3.20 – How to analyse Maathirai (மாத்திரை)
3.30 – Design choices . Why Python, ANTLR4 grammar is used
3.40 – Q&A
3.50 – What’s next
4.00 – Checkout
மேற்கண்ட இணைப்பில் இணைந்து, பைந்தமிழைக் காணுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
பைந்தமிழ் நிரலுக்கும் நிகழ்வுக்கும் ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள்.