C மொழியில் அடுத்த வரிக்கு செல்வது எப்படி? | எளிய தமிழில் சி பகுதி 5

By | April 7, 2025

வழக்கமாக, பள்ளி- கல்லூரியில் ஆசிரியர் சொல்ல,சொல்ல மாணவர்கள் குறிப்பெடுத்து கொண்டிருக்கும் போது, இந்த வரியை அடுத்த பத்தியாக(para) எழுத வேண்டும் என ஆசிரியர் கூறுவார். அல்லது இந்த இடத்தில் மேற்கோள் குறி இட வேண்டும்(“) என்று குறிப்பிடுவார்.

இந்த அடிப்படையான வேலைகளை கணினியின் அடிப்படை மொழியான C யில் எப்படி செய்வது? என்று தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம்.

ஏற்கனவே, printf() செயல்பாட்டின் மூலம் நீங்கள் கொடுக்கும் உள்ளீடை, வெளியீட்டு திரையில் காண்பிக்க முடியும் என பார்த்து இருந்தோம். அதேபோல, /n எனும் குறியை மேற்குறிபட்ட செயல்பாட்டுக்குள் வழங்குவதன் மூலம் அடுத்து வரிக்கு(next line)செல்ல முடியும்.

<stdio.h>

int main() {
  printf(“Hello Kaniyam!\n”);
  printf(“I am writing about C.”);
  return 0;
}

Output:-

Hello Kaniyam

I am writing about C.

மேற்கண்ட இந்த நிரலில்  ஹலோ கணியம் என்பதற்கு அடுத்ததாக \n வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதைத்தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கும் உரையானது, அடுத்த வரியில் வெளியீடாக வழங்கப்படும். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  \n என்பதையும் மேற்கோள் குறிகளுக்குள் (quotation marks)தான் வழங்க வேண்டும். தனியாக வழங்கினால் வேலை செய்யாது.

<stdio.h>

int main() {
  printf(“Hello kaniyam!\nI am writing about C.\nAnd it is awesome!”);
  return 0;
}

Output:-

Hello Kaniyam!
I am writing about C.
And it is awesome!

மேற்கண்ட நிரலில், ஒரே printf() செயல்பாட்டிற்குள்ளாக இரண்டு புதிய வரிக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரே செயல்பாட்டில் நம்மால் மூன்று வரிகளை அச்சடிக்க முடியும். இந்த இடத்திலும் கூட மேற்குறிகளுக்கு உள்ளாகத்தான் \n என எழுத வேண்டும்.

<stdio.h>

int main() {
  printf(“Hello World!\n\n”);
  printf(“I am learning C.”);
  return 0;
}

Output:-
Hello World!

I am learning C.

இந்த நிரலிலோ, சற்று வித்தியாசமாக ஒரே வரியில் இரண்டு புதிய வரி கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது, முதல் கட்டளை ஆனது அடுத்த வரிக்கு அழைத்துச் செல்லும். அதே நேரம் அதை தொடர்ந்து வரும் மற்றொரு கட்டளையானது, ஒரு வெற்று வரியை ஏற்படுத்தும். இதனால், நீங்கள் ஒருவரை விட்டு மற்றொரு வரி எழுதுவதற்கு இந்த முறையை பயன்படுத்தலாம். முன்பு பார்த்தது போல, ஒரே செயல்பாட்டிற்குள்ளவும் ஒரு வரி விட்டு எழுதுவதற்கு இதை பயன்படுத்தலாம். இது போல, எத்தனை வரிகளை வேண்டுமானாலும் விட்டு எழுதலாம்.

<stdio.h>

int main() {
  printf(“Hello World!\t”);
  printf(“I am learning C.”);
  return 0;
}

Output:-
Hello World!    I am learning C.

\t இன்னும் உள்ளீடை பயன்படுத்துவதன் மூலம் நேர்கோட்டில் ஐந்து எழுத்து அளவிற்கு(5 space )இடைவெளி விட்டு எழுதுவதற்கு இது பயன்படுகிறது. இதற்கான மாதிரி நிரலாக்கம் மேலே வழங்கப்பட்டுள்ளது.

<stdio.h>

int main() {
  printf(“House number 55\\”);
  printf(“101,north street.”);
  return 0;
}
Output:-
House number 55\101,north street.

உதாரணமாக, ஒரு வீட்டின் பழைய எண் புதிய எண் போன்றவற்றை எழுதுவதற்கு \ குறியை பயன்படுத்துவோம். ஆனால், சீமொழியில் இப்படி பயன்படுத்துவதற்கு \\ என உள்ளீடு வழங்க வேண்டும். இதன் மூலம், மேற்கண்டவாறு எளிமையாக வீட்டு எண் போன்ற \ or/ தேவைப்படும் எழுத்துக்களை திரையில் எழுதலாம்.

include <stdio.h>

int main() {
  printf(“Welcome to \”kaniyam\”.”);
  return 0;
}

Output:-

Welcome to “kaniyam”.

நாம் C மொழியில் ஒரு எழுத்தை அச்சிட வேண்டும் என்றால், மேற்கோள் குறிகளை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், அப்படி அச்சிடும் எழுத்துக்களுக்கும், மேற்கோள் பயன்படுத்த வேண்டி இருந்தால் என்ன செய்வது? எனும் சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்.\” எனும் குறியை மேற்கோள் குறியிட வேண்டிய எழுத்தின் முன் பின் எழுதுவதன் மூலம், மேற்கண்ட நிரலில் இருப்பது போல குறிப்பிட்டு எழுத்திற்கு மேற்கோள் குறியிட முடியும்.

C மொழியின் சில அடிப்படையான எழுத்து பயிற்சிகள் குறித்து இந்த கட்டுரை மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு எளிய தமிழில் C பகுதியில் சந்திக்கலாம்.

Reference: W3schools

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com