ObjectBox என்பது IOT எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகிய சாதனங்களுக்கான தனித்தன்மையாக உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக பொருள் சார்ந்த தரவுத்தளமாகும் . இது சிறிய அளவிலான சாதனங்களுக்கும் விளிம்பு கணினியின் (edge computing) செயலை கொண்டு வருவதுடன் , தரவுவுகளை திறமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக மேலாண்மை செய்து சேமிக்கவும் செயல்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றது. , இது 1MB ஐ விட மிகச்சிறியதாக இருப்பதால் இது கைபேசி பயன்பாடுகள், சிறிய IoT சாதனங்கள் IoT நுழைவாயில்களுக்கான மிகச்சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. மேலும் இது NoSQL, ACID- ஆகிவற்றிற்கு இணக்கமான-சாதனங்களின் விளிம்பு தரவுத்தளத்தின்( edge database) உயர் செயல்திறனை கொண்டு விளங்குகின்றது. மேம்படுத்துநர்கள் அதிக அளவு இதனை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்பதை மனதில் கொண்டு இது கட்டமைக்கப்பட்டுள்ளதால் இதனை பயன்படுத்த எளியதாகவும் செயல்படுத்து வதற்கு குறைந்த அளவு குறியீட்டுவரிகளே போதுமானகின்றது இது கைபேசி பயன்பாடுகளுக்காக NoSQL, ACID(Atomic, Consistent, Isolated, Durable)- ஆகிவற்றிற்கு இணக்கமான விரைவாக செயல்படும் தரவுதளத்தினை கொண்டுள்ளது இதன்திறன 10x அளவு விரைவாக இருப்பதால் இது செயல்படுவதற்காக மற்றதரவுதளங்களைவிட 1/10 அளவுவகுறிமுறைவரிகளே போதுமானதாகும் இந்த ObjectBoxஐ பயன்படுத்த விழையும் மேம்படுத்துநர்கள் அனைவரும் தாம் உருவாக்கிடும் தங்களுடைய பயன்பாட்டினை மெருகூட்டி வெளியிடுவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் இதனை செயல்படுத்திடுவதற்கான தரவுகளை சேமிப்பதையும் அவ்வாறு சேமித்த தரவுகளை மீட்டெடுப்பதையும் இந்த ObjectBoxஆனது பார்த்து கொள்கின்றது . இதனை பயன்படுத்திடுவதற்காக SQLite போன்று அதிககுறிமுறைவரிகள் தேவையில்லை அதாவது மிககுறைந்த குறைமுறைவரிகளில் கிடைவரிசை நெடுவரிசை எதுவுமில்லாமல் தன்னுடைய தரவுதளசெயலை துவங்கி செயல்பட செய்கின்றது இது இயக்கநேரத்தில் திடீரென அப்படியே தொங்கலாக செயலற்று நின்றுவிடாது துவங்கிய செயலை நடத்தி முடித்துவிடும் இது Android, plain-Java, Linux, Windows, POSIX, MacOS. IOS ஆகியஅனைத்து இயக்கமுறைமையையும் ஆதரிக்கின்றது அதுமட்டுமல்லாது ACID, MVCC போன்ற தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கின்றது இது சரங்களிலும் strings எதையும் இணைத்துக்கொள்ளாமலேயே பொருளை திருப்பிவிடுகின்றது இதுவரை 20 மில்லியன் அளவிற்கான பொதுமக்கள் இதனை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொண்டுள்ளனர் kotline இல் எழுதப்பட்ட இதனுைடய எளிய குறிமுறைவரிகள் பின்வருமாறு
1
2 3 4 5 6 7 8 |
@Entity data class Person( @Id var id: Long = 0, var firstName: String, var lastName: String ) val box = boxStore.boxFor<Person>() box.put(Person(0, “Joe”, “Green”)) |
மேலும் விவரங்களுக்கு https://objectbox.io/எனும் இணைய முகவரிக்கு செல்க