நாள் 20: cd
cd : இந்த கட்டளை ஒரு கோப்புறையிலிருந்து வேறொரு
கோப்புறைக்கு மாற பயன்படுகிறது.
இந்த கட்டளை மிக எளிமையான பயன்பாட்டினை கொண்டுள்ளாதால்
பிற தெரிவுகள் பெரியதாக
கவனிக்கப்படுவதில்லை.
cd /path/to/directory :ஒரு குறிப்பிட்ட கோப்புறைக்கு மாற
cd .. : தற்போதைய கோப்புறையின் தாய் கோப்புறைக்கு செல்ல
cd : எந்தொரு அளபுருக்களும் இல்லாது இருப்பின் $HOME
கோப்புறைக்கு செல்லும்
cd – :கோப்புறை மற்றத்திற்கு முன்னர் இருந்த கோப்புறைக்கு செல்ல பயன்படுகிறதுcd / :எந்த கோப்புறையில் இருப்பினும் root கோப்புறைக்கு செல்ல பயன்படுகிறது.
கோப்புறை உரிமைகள் மற்றும் பிற வகைப்படுகளின் அடிப்படையில் சில கோப்புறைகளை அனுக இயலாது.சில கோப்புறைகள் என குறிப்பிடுவனற்றுள் root directory(/root) ம் அடங்கும் sudo cd என்பது வேலை செய்யாது எனினும் நாம் ls, touch, rm கட்டளைகளை sudo உடன் பயன்படுத்தி கோப்புகளை கையாளலாம்
Programmer Life – programmerlife1.wordpress.com