[தினம் ஒரு கட்டளை] passwd கடவுச்சொல் மாற்றலாமா?

நாள் 21 :  passwd

passwd :இந்த கட்டளை ஒரு பயனர் உள்நுழைய பயன்படுத்தும் கடவுச்சொல்லை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. சில தெரிவுகளுடன் இந்த கட்டளையை பயன்படுத்தி பயனர் கணக்கை பூட்டவும் திறக்கவும் மூடவும் இயலும்.sudo or as root ஆக பயன்படுத்தப்படும் போது தற்போதைய  கடவுச்சொல் தேவையில்லை பிற பயனரின் கடவுச்சொல்லை மற்றும் போது கேட்கும். sudo வைப் பயன்படுத்தியோ அல்லது root கணக்கிலிருந்தோ கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம்.

தொடரியல் :

  • sudo password username
  • passwd
  • sudo passwd

தெரிவுகள்:

passwd -l :இந்த தெரிவு பயனர் கணக்கை பூட்ட பயன்படுகிறது.

passwd -u : இந்த தெரிவைப்பயன்படுத்தி பூட்டப்பட்ட பயனர் கணக்கை திறந்து லினக்ஸில் பயணிக்கலாம்.

Syntax: sudo passwd -l username

sudo passwd -u username

பிற தெரிவுகளும் இருக்கிறது ஒரே கடவுச்சொல் எவ்வளவு காலம் பயன்பாட்டில் இருக்கலாம் என்பதனை எல்லாம் மாற்றி தனிப்பயனாக்கலாம்.  அதையெல்லாம் தாங்களே கற்க வேண்டுகிறேன்.

நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: