நாள் : 35
நாட்கள் செல்ல செல்ல கார்த்திக் மஞ்சரியிடம் இருந்து சற்று விலகுவதாக உணர்ந்தாள். அதற்கான காரணம் என்னவென்று அறிய ஆவல் இருந்தும் ஏதோ ஒன்று அவளை தடுத்துகொண்டிருந்தது. சில நாட்கள் சரிவர பேசவும் இல்லை நேரில் சந்திக்கவும் இல்லை. அலைபேசியை எடுத்து கார்த்திக்கை அழைத்தால் கார்த்திக் பதில் அளிக்கவில்லை. மஞ்சரி தேவையில்லாமல் தனக்குளேயே புலம்பிக்கொண்டிருந்தாள். மாலை என்னவானாலும் பரவாயில்லை அவனை நேரில் சென்று இரண்டில் ஒன்றினை பார்த்தே ஆகவேண்டும் என்றே புறப்பட்டாள். புறப்படும் போது தன்னுடைய மடிக்கணினியையும் எடுத்துகொண்டாள். கார்த்திக்கை சந்திக்க செல்பவள் ஏன் மடிக்கணினியை எடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதை கார்த்திக்கை சந்திக்கும் போது பார்ப்போம்.
கார்த்திக் தி நகரில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. அவன் கொலப்பாக்கம் அருகே குறைவான வாடகையில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தான். ஒற்றை அறை, ஒரு ஜன்னல், ஒரு மேசை, அதில் மடிக்கணினி.
புதிய இடத்தில் புதிய வாழ்க்கை ஆனால் மடிக்கணினி புதிதல்ல.
ஒரு பென்டிரைவில் வைத்திருந்த சில புதிய பாடல்கள் சிலவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறான்.
கதவு யாரோ தட்டும் சத்தம் கேட்டது திறந்து பார்த்தால் மஞ்சரி
ஆச்சரியம் கலந்த புன்முறுவலுடன் அப்படியே சிலையாக நிற்கிறான்.
மஞ்சரி : நீ போன் எடுக்கல…
பேசல…
அதனால தான் வந்தேன்.
கார்த்திக் : சரி சரி உள்ள வா. புது இடம் புது வேலை எல்லாம் கொஞ்சம் செட்டாடட்டும்னு இருந்தன் அதன் போன்ல கூட பேசமுடில. சாரி..
மஞ்சரி : நானும் என்னவோ எதோனு பயந்துட்டன். சரி காபி வேனுமா இல்ல டீயா!…
(சிரித்தபடி சமயலறைக்குள் நுழைந்தாள்)
கார்த்திக் : உன் இஷ்டம்.
பின்னர் மடிக்கணினியை திறந்தான். நகலெடுக்கும் பணியை டெர்மினலில் தொடங்கினான்.
மஞ்சரி : என்ன பண்ணிட்டு இருக்குற
கார்த்திக்: பென்டிரைவ்ல இருக்குற எல்லாத்தையும் காப்பி பண்ணிட்டு இருக்கிறேன்.
மஞ்சரி : போல்டர தொறக்காமலே காப்பி பண்ணிட்டு இருக்கியா. சூப்பர் சூப்பர் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் சொல்லிகுடேன்.
காப்பியுடன் மடிக்கணினி அருகே உட்கார்ந்தால்
karthik@karthik-pc:~$ cp – r /media/karthik/sandisk/music /home/karthik/Music
முடிஞ்சிச்சி
சரி வா கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்.
தொடரும் ….
தொடரியல் :
மேலே கூறப்பட்ட கட்டளை கோப்புறை முழுவதும் நகலெடுக்க உதவும். பிற தெரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
hariharan@kaniyam.com:~$ cp -i /media/hariharan/sandisk ~/hariharan/pendrive-copy
-i தெரிவானது ஒரே கோப்பு இருக்கும் நிலையில் overwrite செய்யும் முன் பயனருக்கு அறிவறுத்தும்
-p தெரிவானது கோப்பின் அனுமதிகள், கோப்பு திருத்தப்பட்ட நேரம் ஆகியவற்றை அப்படியே நகலெடுக்கும்
-v தெரிவானது நகலெடுக்கும் கட்டளையின் அடைவினை காண்பிக்கும்.
- n தெரிவு மேலெழுதாமல் (overwrite) இருக்கும்.
நன்றி !
இவன்
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com