[தினம் ஒரு கட்டளை] Date நாள்

9-வது நாளாகிய இன்று நாம் பார்க்கவிருக்கும் கட்டளை date பெயரிலேயே அது எதைப்பற்றியது என்று எளிதில் விளங்கும்.

date – நாள்

இந்தக்கட்டளை இயங்குதளம் பராமரிக்கும் இன்றைய தேதி மற்றும் நேரத்தை (வன்பொருள் கடிகாரம் நேரத்தை மற்றொரு வடிவத்தில் பராமரிக்கும்.) காட்டும்.

தொடரியல் :

hariharan@kaniyam: ~/odoc/ $ date

மேற்கண்ட கட்டளை இன்றைய தேதி மற்றும் நேரத்தை காண்பிக்கிறது.

date கட்டளை மூலம் காட்டப்படும் தேதியை நமக்கு தேவையானபடி வடிவமைப்பு செய்துகொள்ள முடியும்.

வடிவமைப்புக்காண குறியீடுகள் :

%Y – (ஆண்டு) year
%m – (மாதம்) month
%d – (மாதத்தின் நாள்) day of the month

%A – (கிழமை முழுமையாக) day of the week (full form)

%a – (கிழமை விகுதி இல்லாமல்) day of the week (short form)
%H – மணி (24 மணிநேர அமைப்பு) hour of the day (24 hours system)
%I – மணி (12 மணிநேர அமைப்பு) hour of the day (12 hours system)
%M – நிமிடம் minute of the hour
%S – வினாடி second of the minute
%p – மு.ப (அ) பி.ப AM or PM

எடுத்துக்காட்டு :

hariharan@kaniyam: ~/odoc $ date+”%a year:%Y-%M|%p”

மேற்கண்ட கட்டளையானது வடிவமைப்பு குறியீட்டுடன் நாளை வழங்குகிறது. கட்டளையின் வெளியீடு பின்வருமாறு.
sun year:2024-32|PM

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: