[தினம் ஒரு கட்டளை] diff வித்தியாசம் கண்டுபி

By | February 2, 2025

நாள் 32: diff

கார்த்திக் பணிபுரியும் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் புவனேஸ் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டான். அவன் தினசரி நடவடிக்கைகளை பராமரிக்கும் டிஜிட்டல் லாக் புக் எழுதுகையில் தவறுதலாக நேற்றைய புத்தகத்தில் இன்றைய நடவடிக்கையை மாற்றி எழுதிவிட்டான். மேலாளர் அதைனை பார்த்துவிட்டு புவனேஸை கூப்பிட்டு அதனை திருத்தி இன்றே தலைமை அலுவலகத்திற்கு ஆடிட்டிற்கு அனுப்பவேண்டுமென்றும் இன்னும் சில மணிநேரங்களே உள்ளன என கூறுகிறார்.

என்ன செய்வதென்று அறியாத புவனேஸ் கார்த்தியிடம் மச்சான் வசமா மட்டிகிட்டேன் வைப்பிரேட்டர் கிட்ட.

கார்த்தி: என்னாச்சி இன்னக்கி என்ன சம்பவம் பண்ண?.

புவனேஸ்: லாக்புக்க மாத்தி எழுதிட்டேன்டா இப்போ 2 நாள் லாக் புக்கையும் டவுன்லோட் பண்ணி வேலைய முடிக்க 5,6 மணிநேரம் ஆகும் அனா 2 மணிநேரத்துல ஆடிங்குக்கு அனுப்பனுமாம்டா அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன். எதுனா கொஞ்சம் உதவி பண்ணு மச்சி

கார்த்தி: நல்லா சரியான இடியாப்ப சிக்கல்ல தான் மாட்டியிருக்க. சரி வா ஒரு டீ அடிச்சிட்டே பேசுவோம்.

புவனேஸ்: டேய் நா எவ்வளவு பெரிய பிரச்சினைல மாட்டிருக்கன் நீ என்னடான டீய குடிக்க கூப்டிட்டிருக்க.

கார்த்தி: அட வாடா ஒ பிரச்சன விசியமாதா பேச கூப்பிடுற சீக்கிரமா வருவியா?

(இருவரும் தேனீர் விடுதிக்கு செல்கின்றனர்)

புவனேஸ்:  1000 என்டிரீஸ் மேல இருக்கும் டா  ஒரு பாதியாவது சரி பண்ணாதா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் கொஞ்சம் சீக்கிரமா வா டீய குடிச்சிட்டு

கார்த்தி: லாக் புக்க என்ன பார்மாட்ல மெயின்டெயின் பன்றீங்க. ஸ்பிரெட்சீட்டிலயா லா இல்ல வேற எதுனா அப்பிலிகேசன்ல பன்றீங்கலா.

புவனேஸ்:  ஸ்பிரெட்சீட் லாம் இல்ல டா டெக்ஸ்ட் பைல்லதான் ஆடிட்டுக்கு எல்லாம் அனுப்புவோம். அதுல தான் டா நான் மாத்தி அடிச்சிட்டேன். ஸ்பிரெட்சீட்ல இருந்தாதான் நான் சுலபமா கண்டுபுடிச்சிடுவேனெ.

கார்த்தி: நல்லது ! ஒன்னும் பரச்சின இல்ல உன்கிட்ட எதாவது முந்திய நாள் லாக் டீட்டியல் இருக்கா?

புவனேஸ்: நேத்தி லாக் புக்க ஒரு காப்பி வச்சிருக்கன் அப்பரம் இன்னக்கி வைப்பிரேட்டர் கிட்ட ஒன்னு சப்மிட் பண்ணது ஒன்னு இருக்கு.

கார்த்தி: கையில வெண்னைய வச்சிட்டு நெய்யுக்கு அலையாதே ரெண்டு லாக் பையிலையும் எனக்கு சார் பண்ணு.

(கணினியில் லாக் புத்தகங்களை தரவிறக்கி சில கட்டளைகளை உள்ளிடுகிறான். பிறகு திரையில் இரு நாட்களுக்குள் தவறாக உள்ளிடப்பட்ட தரவுகள் உள்ள பகுதிகளில் இருக்கும் விவரங்கள் வேறுபடுத்திகாட்டப்படுவதை அறிகிறான்)

புவனேஸ்: யாரு சாமி நீ ! 5 நிமிசத்துல வேலைய முடிச்சிட்ட

கார்த்தி: இதுல தேதி மாறுனத எல்லாம் எடுத்து சரியான எடத்துல போடு அப்புறம் பேசு

புவனேஸ்:  சரிடா சரிடா இதோ பண்ணிடுரன் என கோப்புகளின் வித்தியாசங்கள் காண்பிக்கும் விவரங்களை மாற்றத் துவங்குகிறான்.

(30 நிமிடங்கள் கழித்து லாக் புத்தகம் முழுவதுமாக சரிசெய்கிறான் புவனேஸ்)

சரிடா ஒருவழியா முடிச்சிட்டேன் இத எப்புடி பண்ணனு கொஞ்சம் சொல்லுடா எனக்கு கத்துக்கனும்னு ஆசையா இருக்கு.

கார்த்தி: கோப்புகளோட வித்தியாசங்கள பாக்குறதுக்கு லினக்ஸ்ல ஒரு சில கட்டளை இருக்கு அதுல ஒன்னுதா இந்த diff கட்டளை.

இந்த கட்டளை அதுல ஒன்னு. இத பயன்படுத்தி இரண்டு கோப்புகளோட வித்தியாசத்த பாக்க முடியும்.  வித்தியாசத்த பாக்கும் போது அதுக்கு மொதோவரி அடுத்தவரிகளோட பார்க்க -u னு ஒரு தெரிவு இருக்கு அத பயன்படுத்திப்போம்.

கோப்புகளை அந்தபக்கம் பாதி இந்தப்பக்கம் பாதினு இரட்டை திரைஅமைப்புல பார்க்க –side-by-side தெரிவ பயன்படுத்தனும்.

பெரிய எழுத்து சின்ன எழுத்து வேறுபாடுகள் இல்லாம இருக்குற மத்த வேறுபாடுகளை பார்க்க -i தெரிவ பயன்படுத்தி பாருடா.

தொடரும்…

 

தொடரியல் :

diff file1.extension file2.extension
diff -u file1.txt file2.txt
diff -i file1.txt,file2.txt
diff –side-by-side file1.txt file2.txt

ஒரு கோப்பிலுல்ல பல்வேறு கோப்புகளையும் அதன் உட்கோப்புறைகளின் வேறுபாடுகளையும் கண்டறிய -r தெரிவு பயன்படுத்துகொள்ளலாம்.

diff -r /path/to/directory1 /path/to/directory2

நன்றி !

இவன்

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com