5 வது நாள்
echo – எதிரொலி
ஒரு செய்தியையோ அல்லது ஒரு மாறியையோ அனைத்து உயிர்ப்போடு இருக்கும் பயனர்களுக்கு அனுப்பவும் கோப்புகளை உருவாக்கவும். உள்ளடக்கத்தை மாற்றி எழுதவும் பயன்படுகிறது.
தொடரியல்:
hariharan@kaniyam:~/odoc $ echo ” Hi Everyone”
Hi Everyone என்ற செய்தியை முதல்நிலை வெளியீட்டில் அனுப்பகிறது.
hariharan@kaniyam:~/odoc $ echo $HOME
$HOME எனும் மாறியில் உள்ள மதிப்பை வெளியிடுகிறது.
hariharan@kaniyam:~/odoc $ echo “the text” > filename.extension
the text எனும் உரையை ஒரு கோப்பில் எழுதுகிறது.
தெரிவுகள்:
-e எனும் தெரிவு பயன்படுத்தும் போது விடுபடு தொடர் எழுத்துகளை நீக்கி அச்சிடுகிறது.
-E எனும் தெரிவு பயன்படுத்தும் போது விடுபடு தொடர்களை நீக்காமல் அச்சிடுகிறது
-n எனும் தெரிவு பயன்படுத்தும் போது இறுதியில் வரும் புதிய வரி (\n) ஐ வெளியிடாமல் இருக்கிறது.
நன்றி !
ஹரிஹரன் உமாபதி,மென்பொறியாளர்.
Programmer Life – programmerlife1.wordpress.com