இன்று 6 வது நாள் வார இறுதியாக வருவதாலும், இரு எதிரெதிரான கட்டளைகளை புரிந்துகொள்வதற்கு எளிதாக இருப்பதாலும், இன்று இரு கட்டளைகளைக் காண்போம்.
அதில் முதலாவதாக HEAD பற்றி காண்போம்.
head கட்டளை ஒரு உரை கோப்பின் முதல் சில வரிகளை காண்பிக்க பயன்படுகிறது. தானமைவு (default) அமைப்பாக 10 வரிகளை அளிக்கிறது. இருநிலை தரவுகளைக்கொண்ட கோப்புகளாக இருப்பின் அவற்றில் உள்ள உரை மற்றும் குறியீடுகளை காண்பிக்கிறது.
பல கோப்புகளை உள்ளீடாக அளிக்கும் போது ஒவ்வொறு கோப்பின் முன்னும் ஒரு கோப்பு தலைப்பை கொண்டிருக்கும்.
தொடரியல்:
hariharan@kaniyam: ~/odoc $ head file.txt
தெரிவுகள்
-n எனும் தெரிவு தானமைவு வரிகளை எண்ணிக்கையை தனிப்பயனாக்க பயன்படுத்தபடுகிறது.
hariharan@kaniyam: ~/odoc $ head -n 20 file.txt
மேற்கண்ட கட்டளை முதல் இருபது வரிகளை காட்ட பயன்படுகிறது.
-c எனும் தெரிவு வரிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் பைட்டுகளின் அளவுகளை வைத்து கோப்புகளை காட்டுகிறது.
hariharan@kaniyam: ~/odoc $ head -c 200 file.txt
மேற்கண்ட கட்டளை file.txt-ன் முதல் இருநூறு பைட்டுகளை காட்டும்.
கோப்பு இருநூறூ பைட்டுகளுக்கு குறைவாக இருந்தால் பிழைச்செய்திகள் எதுவும் சுட்டாமல் முழுகோப்பு உள்ளடக்கத்தையும் காண்பிக்கும்.
குனு அல்லாத இயங்குதளங்களில் பின்வரும் தெரிவுகள் சரிவர வேலை செய்யமாட்டா
-q எனும் தெரிவு பல கோப்புகளை head கட்டளை.
hariharan@kaniyam: ~/odoc $ head -c 200 file.txt
-v எனும் தெரிவு ஒரு கோப்பினை திறக்கும் போது கோப்பு தலைப்புகளும் காண்பிக்கபடும். -v எனும் தெரிவுடன் பயன்படுத்தும் போது தெரிவானது முன்னுரிமை பெறுகிறது. -q -v தெரிவுகளை சேர்த்து எந்த வரிசையில் பயன்படுத்தினாலும் கோப்பு தலைப்புகள் காண்பிக்கப்படும்.
இரண்டாவதாக tail கட்டளை பற்றி பார்ப்போம்.
tail கட்டளை ஆனது head கட்டளை போலவே கோப்பின் சிலவரிகளை மட்டுமே படிக்கிறது ஆனால் ஒரு வேற்றுமை என்னவெனில் கடைசியில் இருந்து மட்டும் படிக்கிறது.
தொடரியல் :
hariharan@kaniyam: ~/odoc $ tail file.txt
தெரிவுகள்:
-n head கட்டளை போலவே tail கட்டளையிலும் நமக்கு தேவையான எண்ணிக்கையில் வரிகளை வெளியீடாக பெற இந்த தெரிவு பயன்படுகிறது. தானமைவாக 10 வரிகளை இது அளிக்கிறது.
hariharan@kaniyam: ~/odoc $ tail -n 15 file.txt
மேற்கண்ட கட்டளை 15 வரிகளை திரையில் காண்பிக்கும்.
-c இந்த தெரிவானது கடைசியிலிருந்து குறிப்பிட்ட பைட்டுகளை வெளியிடாக பெற பயன்படுகிறது.
பின்வரும் கட்டளைகளை தெரிவுகள் குனு அல்லாத அமைப்புகளில் சரிவர வேலை செய்யமாட்டா
-f இந்தக் கட்டளை கடைசி 10 வரிகளை வெளியீடாக அளிக்கும் ஆனால் கோப்புகள் வளர வளர கடைசி 10 வரிகள் மாறிக்கொண்டிருக்கும். தரவுகள் ஒரே வரியின் மீது மீண்டும் எழுதப்படும் சூழ்நிலைகளில் இந்த தெரிவு சரிவர இயங்காது. அடிக்கடி மாறும் log வகை கோப்புகளுக்கு இந்த தெரிவு உகந்தது.
hariharan@kaniyam: ~/odoc $ tail -f file.txt
-F இந்த தெரிவு -f தெரிவுன் ஒரு மேம்பட்ட ஒன்றாகும். இது tail கட்டளையை பயன்படுத்தப்படும் போது வரும் தற்காலிகமாக நீக்கப்பட்டது அல்லது திருத்தி எழுதப்பட்டது போன்ற பிழைச்செய்திகளையும் தவிர்க்கிறது. மேலும் கோப்பு மீண்டும் கிடைக்கும் போது இது செயல்பாட்டை துவக்குகிறது.
-F/f –max-unchanged-stats
tail -F கோப்பினை முடிவில்லாமல் மாறுகிறதா என்று பார்த்து கொண்டிருக்கும் அந்த கோப்பு ஒரு குறிப்பிட்ட முறை கோப்பின் வளர்ச்சியை பார்க்கும்போது அது தவறும் பட்சத்தில் tail -F மறு முயற்சியை நிறுத்துகிறது.
hariharan@kaniyam: ~/odoc $ tail -F –max-unchanged-state=5 file.extenstion
-F/f –pid இந்த தெரிவு tail -F போலவே செயல்படுகிறது ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு முடிவடையும் போது கோப்பின் இறுதியை பார்ப்பதை நிறுத்துகிறது.
-q எனும் தெரிவு அனைத்து கோப்பு தலைப்புகளையும் மறைக்கிறது.
hariharan@kaniyam: ~/odoc $ tail -q file1.extension1 file2.extension2
-v எனும் தெரிவு ஒருகோப்பு பயன்படுத்தப்படும்போதும் கோப்பு தலைப்பினை காண்பிக்கிறது.
தவறாமல் பின்னூட்டங்களை குறிப்பிடுங்கள். !
நன்றி!
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com